அதிசார குரு பெயர்ச்சி: மேஷ ராசிக்காரர்களின் வீட்டுக்கதவை தட்டப்போகும் அதிர்ஷ்டம் - அனுபவிக்க ரெடியா?
சென்னை: மகர ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் அதிசார பெயர்ச்சியடையப்போகிறார். ஏப்ரல் மாதத்தில் கும்ப ராசிக்கு அதிசாரமாக செல்லும் குருபகவானால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். ஏப்ரல் 5 முதல் செப்டம்பர் 16 ஆம் தேதி வரை கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருபகவானால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குருபகவான் பொன்னவன். குருவின் பார்வை பலருக்கும் அபரிமிதமான பலன்களைக் கொடுக்கும். குருவின் சஞ்சாரம் சிலருக்கு சில நேரங்களில் சாதகமான பலன்களையும் சில நேரங்களில் பாதகமான பலன்களையும் கொடுக்கும். அதிசார குரு பெயர்ச்சியால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு சமூகத்தில் மதிப்பு கூடும். புதிய பதவிகள் வரும். வெற்றிகள் தேடி வரும்.
காலபுருஷ தத்துவத்தின்படி மகர ராசி பத்தாம் வீடு. மேஷ ராசிக்கும் மகரம் பத்தாம் வீடு. பத்தாம் வீடு தொழில் ஸ்தானம். தொழில் வேலை ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் சிலருக்கு வேலையில் கடுமையான சிக்கல்கள் எற்பட்டிருக்கும். ஏப்ரலில் அதிசாரமாக செல்லும் குரு சஞ்சரிக்கும் இடம் லாப ஸ்தானம். குருவின் பார்வை மேஷ ராசிக்கு 3,5,7ஆம் வீடுகளின் மீது விழுகிறது. குருவின் சஞ்சாரம் பார்வையால் மேஷ ராசிக்காரார்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
பொது இடங்களில் புர்கா அணிய தடை... நிறைவேறியது புதிய சட்டம்

அதிர்ஷ்டம் அதிகரிக்கும்
மேஷ ராசியில் பிறந்தவர்களே ஏப்ரல் முதல் உங்கள் வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் வரப்போகிறது. அதிர்ஷ்டத்தை அனுபவிக்க தயாராகுங்கள். பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கும் குருபகவான் அதிசாரமாக ஐந்து மாதங்கள் கும்ப ராசியில் குடியேறப்போகிறார். இந்த கால கட்டம் பொன்னான கால கட்டமாகும். மன நிம்மதி அதிகரிக்கும் சந்தோஷம் தேடி வரும்.

வெற்றியும் லாபமும் கிடைக்கும்
லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவான் செய்யும் தொழில், வியாபாரத்தில் லாபத்தை கொடுக்கப் போகிறார். முதலீடுகள் செய்யும் நேரம் வந்து விட்டது. உங்களின் முதலீடுகளுக்கு பல மடங்கு லாபம் கிடைக்கும். மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்.

இளைய சகோதரர்களுக்கு உதவி
11ஆம் வீட்டில் அமரும் குரு கும்ப ராசியில் இருந்து மேஷ ராசிக்கு மூன்றாம் வீடான மிதுன ராசியை பார்வையிடுவதால் இளைய சகோதரர்களுக்கு உதவி செய்வீர்கள். தகவல் தொடர்பு சிறப்படையும். பேச்சுக்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். செல்வாக்கு அதிகரிக்கும்.

குழந்தை பாக்கியம் கிடைக்கும்
புத்திரகாரகன் குருவின் பார்வை 5ஆம் வீடான புத்திர ஸ்தானத்தின் மீது விழுவதால் உங்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். திறமை வெளிப்படும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். நல்ல கல்வி நிலையங்களில் படிப்பதற்கு வாய்ப்பு தேடி வரும்.

பிள்ளைகளுக்கு நன்மை
குழந்தைகளுக்கு சுப காரியம் நடைபெறும். குழந்தைகளின் படிப்பு தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வரன் அமையும். கடன் பிரச்சினைகள் நீங்கும். நிதி நெருக்கடிகள் முடிவுக்கு வரும். சொத்து, வீடு வாங்கலாம். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.

கல்யாணம் கை கூடும்
காதல் வெற்றி பெறும். திருமணம் சுப காரியங்கள் கை கூடி வரும். களத்திர ஸ்தானத்தின் மீது குருவின் பார்வை விழுவதால் நல்ல வரன் அமையும். சிலருக்கு புதிய காதல் தோன்றும் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும். குருவின் அதிசார பலன்களினால் மேஷம் ராசிக்காரர்கள் திடீர் பணக்காரர்கள் ஆக வாய்ப்பு உள்ளது.