தமிழ்நாடு அரசு போக்குவரத்து போராட்டம் தொடருமா? ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் நேற்று மாலையில் இருந்து திடீரென வேலை நிறுத்தத்தில் இறங்கினர். முன்னதாக அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான 13-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெற்றது. தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகள் மற்றும் 40-க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அதில் கலந்து கொண்டனர். ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதால் தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் தாமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 13ஆவது ஓய்வூதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகையை கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

bus strike by tamil nadu government transport employees union for pay and benefits

போக்குவரத்து போராட்டத்திற்க்கான ஜோதிட காரணங்கள்:

நேற்று மாலையிலிருந்து போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து போராட்டத்திற்க்கான ஜோதிட ரீதியான கிரக நிலைகளை ஆராய்ந்து பார்த்ததில் போராட்டங்களுக்கான காரக கிரகம் கேது மற்றும் செவ்வாய் என பாரம்பரிய ஜோதிட நூல்கள் கூறுகின்றன. புளுட்டோவும் போராட்டத்திற்க்கு காரக கிரகம் என்கிறது மேற்கத்திய ஜோதிட முறை.

கால புருஷ தத்துவபடி பேருந்து மற்றும் பேருந்து ஓட்டுனர்கள் போன்றவர்களுக்கான காரக வீடு மிதுனம் என்றும் காரக கிரகம் புதன் என்றும் பாரம்பரிய ஜோதிட நூல்களும் யுரேனஸ் என்று மேற்கத்திய ஜோதிடமும் தெரிவிக்கிறது.

மேலும் சிறு தூர பயணத்தை குறிப்பது காலபுருஷனுக்கு மூன்றாம் வீடான மிதுனம் என்றும் காரக கிரகம் சந்திரன் என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றது. ஓய்வு ஊதியம் போன்ற ஊழியர்கள் நலம் சார்ந்த விஷயங்களை குறிக்கும் பாவ வீடு காலபுருஷனுக்கு பத்தாம் வீடான மகரம் மற்றும் காரக கிரகம் கர்ம காரகனான சனைஸ்வரர் என்கிறது பாரம்பரிய ஜோதிடம். அதற்கான காரக வீடு சனியோடு நெப்ட்யூனையும் குறிப்பிடுகிறது மேற்கத்திய ஜோதிடம்.

நேற்றைய கிரக நிலையை ஆய்வு செய்தபோது போக்குவரத்து பேருந்தை குறிக்கும் புதன் பகைவனான செவ்வாயின் வீடு மற்றும் காலபுருஷனுக்கு எட்டாம் வீடான விருச்சிகத்தில் ராகுவின் திரிகோண பார்வை பெற்று பயணம் செய்வதும் கர்மகாரகன் சனி புளுட்டோவுடன் சேர்க்கை பெற்று தனது சுய வீடு மற்றும் கால புருஷனுக்கு பத்தாம் வீடான மகரத்திற்க்கு பன்னிரெண்டில் போராட்ட கிரகமான கேதுவின் மூல நட்சத்திர சாரம் நிற்பதும் பகை கிரகம் மற்றும் அரசு காரகரான சூரியன் மற்றும் வாகன காரகர் சுக்கிரனுடன் சேர்ந்து நிற்பதும் தெரிகிறது.

மேலும் போராட்ட கிரகமான கேது கால புருஷனுக்கு பத்தாம் வீடான சனீஸ்வர பகவானின் வீடான மகரத்தில் பயண காரக சந்திரனின் சாரம் பெற்று நிற்பதும் குறிப்பிடத்தக்கது. சந்திரபகவான் தேய்பிறை சந்திரனாகி அசுபத்தன்மை அடைந்து ஓட்டுனர் மற்றும் போக்குவரத்திற்க்கான காரக வீடான மிதுனத்தை கடக்கும்போதே பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததும் இதற்க்கான செய்திகள் காற்றில் பரவ துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

நேற்று சந்திர பகவான் அவரது சுய வீடான கடகத்தில் நிற்கும் ராகுவுடன் சேர்க்கை பெற்று போராட்ட கிரகமான கேதுவின் பார்வையை பெறும்போது பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை தொடர்ந்து போராட்டம் ஆரம்பித்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜென வசிய ராசி மற்றும் சுக்கிரனின் ஆட்சி வீடான ரிசபத்தை லக்னமாக கொண்ட சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தில் தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்தை குறிக்கும் பாவமான மூன்றாம் பாவமாக கடகம் அமைந்துள்ளது. மேற்கண்ட போராட்ட கிரக அமைப்புடன் சந்திரபகவான் சுதந்திர இந்தியாவின் மூன்றாம் பாவத்தில் பயணம் செய்யும் போது போக்குவரத்து போராட்டம் ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கூர்ம சக்கரம்:

சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தின் படியும் போரட்டத்தை குறிக்கும் ஆறாம் பாவமான துலாராசியில் குருவுடன் சந்திரன் சேர்க்கை பெறும்போது போராட்டத்தின் தன்மை மாறும். அதுமட்டுமல்லாமல் முண்டேன் அஸ்ட்ராலஜியின் படி கூர்ம சக்கரத்தில் உத்திரம், ஹஸ்தம் மற்றும் சித்திரை நட்சத்திரங்கள் தமிழ்நாட்டை குறிக்கும்விதமாக அமைந்துள்ளது.கன்னி ராசிக்கு கோசாரக கேதுவின் திரிகோண பார்வையும் சனீஸ்வர பகவானின் பத்தாம் பார்வை பெற்றுள்ளதால் தமிழ்நாட்டிற்க்கு சமீப காலமாக பல பிரச்சனைகள் தொடர்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கது. எனவே கன்னி ராசியை சந்திரன் கடந்து துலா ராசியை அடைந்தவுடன் ஒரு நல்ல மாற்றம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.


எப்போது முடியும் போராட்டம்?

போக்குவரத்து மற்றும் பேருந்தின் காரகர் புதன் 6/1/2018 அன்று விருச்சிக ராசியில் இருந்து தனுர் ராசியை அடைந்து சூரியன், சுக்கிரன், சனி ஆகியவர்களுடன் சேர்க்கை பெற்று தனது சுய வீடான மிதுனத்தை பார்ப்பதால் பேச்சு வார்த்தை சற்றே சுறுசுறுப்படைந்து முன்னேற்றம் காணலாம்.

இந்தநிலை சந்திர பகவான் கன்னி ராசியை கடக்கும் வரை அதாவது 9/1/2018 மாலை வரை தொடரும் என தெரிகிறது. பயன சந்திர பகவான் வாகன காரகர் சுக்கிரனின் வீடு மற்றும் ஜென வசிய ராசியான துலாராசியை அடைந்ததும் குருவின் சேர்க்கை பெற்று குரு மங்கல யோகம் மற்றும் செவ்வாயுடன் சேர்க்கை பெற்றும் சந்திர மங்கல யோகமும் பெறும்போது நீதி மன்றம் மற்றும் காவல் துறையின் உதவியோடு போக்குவரத்து தற்காலிகமாக சகஜ நிலைக்கு திரும்பினாலும் அரசு காரகரான சூரியன் தை மாதத்தில் கோசாரக கேதுவை கடந்து மாசி மாதம் அதாவது 16/2/2018 க்கு மேல் சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன் அனைவரும் கும்ப ராசியை அடைந்தபின் தான் போராட்டம் முற்றிலுமாக கைவிடப்பட்டு சகஜ நிலை ஏற்படும் என எதிர்பார்க்கலாம்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
A strike by transport workers' unions in Tamil Nadu left scores of commuters stranded at bus stops in various parts of the state on Friday morning. A large number of people were seen queued up waiting for the private buses at the different bus stops. Commuters battled to get buses in Chennai and in all other districts on Friday.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற