For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீரங்கத்தில் சித்திரை திருவிழா...ரங்கா முழக்கத்துடன் கோலாகல கொடியேற்றம் - 29ல் தேரோட்ட வைபவம்

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்ட வைபவம் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது.

Google Oneindia Tamil News

திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் திருவிழா நேற்று கொடியேற்ற வைபவத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் தேரோட்ட நிகழ்ச்சி வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறும். மே 1ஆம் தேதியன்று ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடைகிறது.

வைணவ பக்தர்களால் பூலோக வைகுண்டம் என்று பூஜிக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் 108 திருப்பதிகளில் முதன்மைத் தலமாகவும் பஞ்சரங்கத்தலங்களில் ஒன்றாகவும் வைத்து போற்றப்படும் முக்கிய ஆலயமாகும்.

 ஆயிரம் கவி சொன்னேன்... வைரமுத்துவின் அம்மா பாடல்... எஸ்.பிபி குரலில் இதமாய் நாட்படு தேறல் 2 ஆயிரம் கவி சொன்னேன்... வைரமுத்துவின் அம்மா பாடல்... எஸ்.பிபி குரலில் இதமாய் நாட்படு தேறல் 2

இக்கோயிலின் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்டத் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.

சித்திரை திருவிழா கொடியேற்றம்

சித்திரை திருவிழா கொடியேற்றம்

இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா நேற்று அதிகாலை கொடியேற்ற வைபவத்துடன் வெகு விமரிசையாகத் தொடங்கியது. கொடியேற்ற நிகழ்வுக்காக அதிகாலை 2:30 மணியளவில், ஸ்ரீநம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கொடியேற்றம் நடைபெறும் மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு நம்பெருமாளுக்கு மங்கள ஆரத்தி எனப்படும் மகாதீபாராதனை காட்டப்பட்டது.

ரங்கா... ரங்கா முழக்கம்

ரங்கா... ரங்கா முழக்கம்

அதைத் தொடர்ந்து, நம்பெருமாள் கொடி மரத்திற்கு கோயில் பட்டர் சுவாமிகள் மற்றும் அர்ச்சகர்களால் பூஜைகள் செய்யப்பட்டு, மீன லக்னத்தில் அதிகாலை 4:30 மணி முதல் 5:05 மணிக்கு மேளதாளம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது, அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் ரங்கா.... ரங்கா... என பக்திப் பரவசத்துடன் வணங்கி வழிபட்டனர். இதையடுத்து, நம்பெருமாள் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை அடைந்தார்.

நம்பெருமாள் வீதி உலா

நம்பெருமாள் வீதி உலா

மாலை 6:30 மணியளவில் நம்பெருமாள் உபய நாச்சியார்களுடன் சித்திரை வீதிகளில் திருவீதியுலா வந்து இரவு 8:30 மணியளவில் சந்தன மண்டபத்தை அடைந்தார். பின்னர் இரவு 9 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு யாகசாலையை அடைந்தார். திருவிழா நடைபெறும் நாட்களில், நம்பெருமாள் தினமும் காலை, மாலை என இருவேளையும் திருவீதியுலா வைபவம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

சித்திரைத் தேரோட்டம்

சித்திரைத் தேரோட்டம்

ஏப்ரல் 27ஆம் தேதி நம்பெருமாள் நெல்லளவு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறும். சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேரோட்ட வைபவம் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 30ஆம் தேதியன்று சப்தாவரணமும், மே 1ஆம் தேதியன்று ஆளும்பல்லக்குடன் விழா நிறைவடையும்.

English summary
The Chithrai festival called Viruppan Thirunal at the Srirangam Ranganathar Temple started with the flag hoisting ceremony yesterday. A large number of devotees attended the darshan of Swami. The main event of the festival will be the Chithirai Therotta on April 29. The ceremony concludes on May 1 with the ruling party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X