Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா வைரஸ் பாதிப்பு.... இந்த 7 ராசிக்காரங்களுக்கு பணம் பத்திரமாக இருக்குமா

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களின் உயிரை மட்டும் குடிக்கவில்லை பொருளாதாரத்தை பதம் பார்த்து வருகிறது. உலகளாவிய பிரச்சினையாக மாறி வரும் இந்த கொரோனாவினால் சீனா பொருளாதாரம் விழி பிதுங்கி கொண்டிருக்கி

Subscribe to Oneindia Tamil

சென்னை: பொதுவாகவே சுப கிரகம் குரு சுபமான இடத்தில் அதாவது ஆட்சி உச்சம் பெற்ற இடத்தில் இருந்தால் அது பொற்காலம்தான். நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் நல்ல காலம்தான். ஆனால் நம்ம நாட்டிற்கு பிடித்துள்ள கண்டச்சனி இப்போ கொரோனா வைரஸ் மூலமாக ஆட்டிப்படைக்க ஆரம்பித்து விட்டது. இந்திய பங்குச்சந்தைகள் பலத்த அடிவாங்கியுள்ளன. வங்கியில் போட்ட பணம் திரும்ப வருமா என்று பலரும் பயப்படுகிறார்கள். எந்த ராசிக்காரர்களுக்கு பொருளாதார நிலை அற்புதமாக இருக்கும் நிம்மதியும் சந்தோஷமும் எந்த ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் என்று பாருங்க.

சுதந்திர இந்தியாவின் ஜாதகப்படி பார்த்தால் நம்ம நாட்டிற்கு கடக ராசி. ரிஷப லக்னம். ராசிக்கு ஆறாம் வீட்டில் குரு கேது செவ்வாய் உடன் சஞ்சரிக்க, சனி ஏழாம் வீட்டில் ஆட்சி பெற்றிருக்க, எட்டில் சூரியன் புதன் சஞ்சரிக்க ஒரு சோகமயமான காலகட்டத்தில்தான் இருக்கிறது நாடு. கடகம் ராசிக்கு விபரீத ராஜயோகம், சசமகாயோகம் என்றெல்லாம் சொன்னாங்களே எதையும் காணோமே என்று யோசிப்பது தெரிகிறது. என்ன செய்வது இப்போது குரு கேது உடன் சேர்ந்திருக்கிறார். விரைய ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கிறார். நாட்டிற்கு மட்டுமல்ல நாட்டு மக்களுக்கும் இப்போது கஷ்டகாலமாகத்தான் இருக்கிறது. ஏற்கனவே பலத்த அடி வாங்கியுள்ள இந்திய பொருளாதாரம், கொரோனா வைரஸ் தாக்குதலால் பலத்த அடி வாங்கி வருகிறது.

கொரோனோ வைரஸ் பாதிப்பால் அனைத்து துறைகளுமே பாதிக்கப்பட்டுள்ளன. ஜவுளி, தகவல் தொடர்புதுறை, ஐடி நிறுவனங்கள், ஏற்றுமதி இறக்குமதி, நிதி நிறுவனங்கள் என எதையும் விட்டு வைக்கவில்லை இந்த கொரோனா சுற்றுலாத்துறையும் படுத்தே விட்டது. கன்னி முதல் மீனம் வரை வரை எந்த ராசிக்காரங்களுக்கு எப்படி இருக்கும்னு பாருங்க.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்ளே உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உங்க நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். உங்க பணத்தை பத்திரமாக முதலீடு பண்ணுவீங்க. உங்க முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுக்கும். குறைந்த கால முதலீடுகளை விட நீண்ட கால முதலீடுகளைத்தான் நீங்க நம்புவீங்க. உங்களுக்கு உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும். உங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும் நோய்கள் உங்களை எளிதில் தாக்காது என்றாலும் சாப்பாடு விசயத்தில நீங்க ரொம்ப கவனமாக இருக்கணும். சின்னச் சின்னதாக பிரச்சினைகள் வந்தாலும் அதை ஜஸ்ட் லைக் தட் எதிர்கொள்வீங்க.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரங்களே, நீங்க உங்களுக்கு அர்த்தாஷ்டம சனியால அவதிப்படுவீங்க. உங்க நிதி நிலைமை சுமாராகத்தான் இருக்கும். பேங்க்ல போட்ட பணம் திரும்ப வருமான்னு பதற்றத்தோடவே இருப்பீங்க. திடீர் இழப்புகள் ஏற்படுவதால நீங்க உங்க பணத்தை பத்திரமாக பாத்துக்கணும். பெரிய அளவில நீங்க முதலீடுகளை பண்ணாதீங்க அப்புறம் போட்ட பணம் பெரிய அளவில திரும்ப வரலையேன்னு கவலைப்படுவீங்க. இருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் லாபம் வரும். உங்களுக்கு தேவையில்லாத டென்சன், மன உளைச்சல் ஏற்படும். உடல் அசதியாகவும் இருக்கும். வயிறு பிரச்சினைகள் வரும் சாப்பாடு விசயத்தில கவனமாக இருங்க.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களே உங்க ராசிக்கு வெற்றி மேல வெற்றி வந்து சேரப்போகுது. நீங்க தொட்டது துலங்கப்போகுது. பணவரவு நல்லாவே இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீங்க. முதலீடுகள் நிறைய லாபத்தை கொடுக்கும். உங்க ஃபிக்சட் டெபாசிட் ரொம்ப பத்திரமாக இருக்கும். நீங்க முதலீடு செய்யும் பணம் உங்களுக்கு திரும்ப வரும் அந்த அளவிற்கு உங்களுக்கு யோகம் வரும். உங்களுக்கு சுபிட்சமானதாக இருக்கும் உடல் ஆரோக்கியமும் அற்புதமாக இருக்கும். பல சோதனைகளை தாங்கி வைரம் பாய்ந்த உடம்பை வச்சிருக்கிற உங்களுக்கு எந்த பாதிப்பும் வராது தைரியமாக இருங்க.

தனுசு

தனுசு

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு ஏழரை சனியில பாத சனி நடக்குது. ரொம்ப பதவிசா இருங்க. அலைச்சல் டென்சன் அதிகமாகும் நீங்க தேடிப்போகலைன்னாலும் பிரச்சினை உங்களை தேடி வரும் எனக்கு மட்டும் ஏன் இப்படின்னு யோசிப்பீங்க. உடல் நலப்பிரச்சினையால மருத்துவ செலவு வரும் சேர்த்து வச்ச பணம் எல்லாம் இப்படி செலவாகுதேன்னு கவலைப்படுவீங்க. நிறைய கடன் வாங்குவீங்க. உங்களுக்கு பூர்வீக சொத்துக்கள்தான் கை கொடுக்கும். மத்தபடி நீங்க பெரிய அளவில இப்போதைக்கு முதலீடு எதுவும் செய்யாதீங்க. பணம் யாருக்காவது கடன் கொடுப்பதற்கு முன்னாடி ஒருதடவைக்கு இரண்டு தடவை யோசிச்சு முடிவு பண்ணுங்க.

மகரம்

மகரம்

மகரம் ராசிக்காரங்களே, நீங்க பணம் சம்பாதிக்க ரொம்பவே மெனக்கெடுவீங்க. ஏற்கனவே சேமித்து வச்ச பணம் எல்லாம் விரைய செலவா ஆகுதேன்னு யோசிச்ச உங்களுக்கு இனி ஜென்ம சனி சில பிரச்சினைகளை தருவார். பணவரவு சுமாராகவே இருக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். அதே நேரத்தில புதுசா யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. வரவுக்கு மேல செலவுதான் வருவதால பணத்தை பத்திரமாகவே வச்சிக்கங்க. யாரை நம்பியும் பணத்தை கொடுக்காதீங்க பெரிய அளவில முதலீடு எதுவும் செய்யாதீங்க. நகை வேணும்னா வாங்குங்க.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரங்களே, நீங்க இப்போ விரைய சனி காலத்தில இருந்தாலும் உங்களுக்கு குரு லாபத்தில உட்கார்ந்து நிறைய பணவரவை கொடுத்துட்டு இருக்கார். தொழில் முதலீடுகளில் இப்போதைக்கு லாபம் வந்துட்டு இருக்கு. அதே நேரத்தில நீங்க உங்க முதலீடுகளை ஜாக்கிரதையாக பண்ணுங்க. ரொம்ப அகலக்கால் வைக்காதீங்க அப்புறம் அவஸ்தை படவேண்டியிருக்கும். கேட்ட இடத்தில கடன் கிடைக்குதேன்னு நீங்க வாங்கி வாங்கி போடாதீங்க. உங்களுக்கு எந்த அளவிற்கு பணம் வருதோ அதே அளவிற்கு செலவும் வரும் எனவே உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. அதே போல உங்க வாழ்க்கை துணையோட உடம்பு மேலயும் கொஞ்சம் கவனமாக இருங்க இல்லாட்டி பெரிய செலவாக இழுத்து விட்ரும் ஜாக்கிரதை.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரங்களே, நீங்க ஒரு ஆடம்பர பிரியர், உங்க முதலீடுகள் எல்லாம் இரட்டிப்பு லாபம் கொடுத்தாலும் நீங்க ஆடம்பர செலவு பண்ணுவீங்க. அதுவே உங்களுக்கு பெரிய அளவில சேமிக்க முடியாம போயிரும். கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலைன்னு பாடுவீங்க. நீங்க உங்க பணத்தை பங்குச்சந்தையில முதலீடு பண்ணாதீங்க உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கும் அதுவே உங்க உடல் ஆரோக்கியத்தை அற்புதமா வச்சிருக்கும். அப்புறம் என்ன இந்த வருஷம் நீங்கதான் ராஜா ராஜாதி ராஜா மக்களே.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+