For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமாவாசையில் முன்னோர்களுக்கு திதி கொடுத்து காகத்திற்கு சாதம் வைப்பது ஏன் தெரியுமா?

முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை விரத நாட்களில் திதி கொடுத்து காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: திதி, அமாவாசை தினத்தில் காக்கைகளுக்கு உணவிடுவதன் மூலம் பித்ருக்களின் ஆசி கிட்டும் என்பது நம்பிக்கை. அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்கள் காக்கை வடிவில் வந்து வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர் என்பது ஐதீகம். எனவேதான் அமாவாசை நாளில் காகத்திற்கு உணவு படைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறோம்.

சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

எமதர்ம ராஜன் காக்கை வடிவம் எடுத்து மனிதர்கள் வாழுமிடம் சென்று அவர்களின் நிலையை அறிவாராம். அதனால் காக்கைக்கு உணவு அளித்தால் எமன் மகிழ்வாராம்.

சனிபகவானுக்கு திருப்தி

சனிபகவானுக்கு திருப்தி

எமனும் சனியும் சகோதரர்கள் ஆவார்கள் அதனால் காக்கைக்கு உணவிடுவதால் இருவரும் ஒரே சமயத்தில் திருப்தி அடைவார்களாம். அமாவாசை தினத்தன்று காக்கைகளை வழிபடுவதால் சனிபகவானைத் திருப்தி படுத்தியதாகவும் கருதுகிறார்கள். காக்கை சனி பகவானின் வாகனம் காக்கைகளுக்கு உணவு அளிப்பது சனி பகவானுக்கு மகிழ்ச்சி தருமாம்.

முன்னோர்களின் ஆசி

முன்னோர்களின் ஆசி

சனீஸ்வர பகவானின் வாகனமான காகம் எமலோகத்தின் வாசலில் இருக்குமென்றும், எமனின் தூதுவனான காகத்துக்கு சாதம் வைத்தால் நமது முன்னோர்கள் அமைதியடைந்து நமக்கு ஆசி வழங்குவார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதனால் காகம் வழிபாட்டை தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகின்றனர்.

காகங்களுக்கு உணவு

காகங்களுக்கு உணவு

முன்னோர்கள் இறந்த தேதி, ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை வழிபாட்டில் காகத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அன்று காகத்துக்கு சாதம் வைத்து அது சாப்பிட்ட பின்னரே வீட்டில் உள்ளவர்கள் உணவருந்தும் பழக்கமும் நடைமுறையில் உள்ளது. காகத்திற்கு தினமும் காலையில் சாதம் வைக்கும்போது நிஜமாகவே பித்ருக்களின் ஆசி கிடைக்கிறது. அதுமட்டுமல்லாது செய்வினை கோளாறுகள் நம் வீட்டுப்பக்கமே எட்டிப்பார்க்காது தீராத கடன் தொல்லைகள் தீரும்.

காகம் உணர்த்தும் அறிகுறிகள்

காகம் உணர்த்தும் அறிகுறிகள்

தந்திரமான குணம் கொண்ட காகம் யாராவது விருந்தினர் வருவதாக இருந்தாலும் நல்ல செய்திகள் வருவதாக இருந்தாலும் முன் கூட்டியே காகம் நம் வீட்டின் முன் பல முறை குரல் கொடுக்கும். காலையில் நாம் எழுவதற்கு முன் காக்கையின் சத்தம் கேட்டால் நினைத்த காரியம் வெற்றி பெறும். நமக்கு அருகில் அல்லது வீட்டின் வாசலை நோக்கி கரைந்தால் நல்ல பலன் உண்டு வீடு தேடி காகங்கள் வந்து கரைந்தால் அதற்கு உடனே உணவிட வேண்டும்.

அகால மரணம்

அகால மரணம்

காகம் வெளிப்படுத்தும் சில அறிகுறிகள் நமக்கு முன்கூட்டியே சில செயல்களை உணர்த்துகிறது. நமது வாகனம், குடை, காலணி, உடல் மீது காகம் தீண்டுவதன் மூலம் அகால மரணம் ஏற்பட உள்ளதை அறிவிக்குமாம். நாம் செல்லும் திசை நோக்கி காகம் கரைந்து கொண்டே வந்தால் அந்த பயணம் தவிர்ப்பது நல்லது.

லாபம் கிடைக்கும்

லாபம் கிடைக்கும்

காகம் தென்கிழக்கு திசை நோக்கி கரைந்தால் தங்கம் லாபம் கிடைக்கும். தென்மேற்கு திசை நோக்கி கரைந்தால் தயிர், எண்ணெய், உணவு லாபம் கிடைக்கும். மேற்கு திசை நோக்கி கரைந்தால் நெல், முத்து, பவளம் மூலம் அதிக லாபம் கிடைக்கும். வடக்கு திசை நோக்கி கரைந்தால் ஆடைகள், வாகனங்கள் வந்து சேரும்.

காகங்களினால் ஏற்படும் சகுனம்

காகங்களினால் ஏற்படும் சகுனம்

ஒரு காகம் மற்றொரு காகத்திற்கு உணவளிக்கும் காட்சியை காண நேர்ந்தால் இனிய செயல் ஏற்பட உள்ளதை குறிக்கும். காகம் உங்கள் எதிரே வலப்பக்கம் இருந்து இடப்பக்கம் சென்றால் தன லாபம் கிட்டும். இடப்பக்கம் இருந்து வலப்பக்கம் சென்றால் தன நஷ்டம் உண்டாகும்.

எனவே காகம் உங்கள் அருகாமையில் இது போன்று கரைந்து கொண்டிருந்தால், ஒரு சில சகுனங்களை முன்கூட்டியே நாம் தெரிந்துக் கொள்ளலாம்.

English summary
Crows are considered a link to our ancestors who g=have passed away. It is believed that our pitris come in disguise of crows and if we feed them, our ancestors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X