For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீபாவளிக்கு முதல்நாளில் தங்கம் வாங்குவதில் என்ன பலன் தெரியுமா?

தீபாவளி பண்டிகையின் முதல் நாளான தந்தேராஸ் பண்டிகை தினத்தில் மக்கள் மகாலட்சுமியையும், பகவான் குபேரனையும் வணங்குகின்றனர். இந்த நாளில் தங்கம் வாங்கினால் பெருகும் என்பதோடு பல நன்மைகளையும் தருகிறது.

Google Oneindia Tamil News

சென்னை: தங்கம் ஆடம்பர நகையாக இருக்கலாம் ஆனால் இந்தியர்களுக்கு அது அத்தியாவசிய பொருளாகவே இருக்கிறது. சிறுக சிறுக சேர்த்து வைத்து தங்க நகைகள் வாங்கவே ஆசைப்படுகின்றனர். தீபாவளி பண்டிகையின் முதல் நாளான தந்தேராஸ் பண்டிகை தினத்தில் மக்கள் மகாலட்சுமியையும் பகவான் குபேரனையும் வணங்குகின்றனர். இந்த நாளில் தங்கம் வாங்கினால் பெருகும் என்பதோடு பல நன்மைகளையும் தருகிறது.

இந்திய கொண்டாட்டங்களில் தங்க நகைகள் மிக முக்கிய அங்கமாகவே உள்ளது. இந்திய திருமணங்களில் ஒட்டுமொத்த திருமண செலவில் மூன்றில் ஒரு பங்கு தங்கத்திற்காக செலவிடப்படுகிறது. குழந்தைகளுக்கு மண நாள் அன்று தங்கத்தை பரிசாக அளிப்பது இலக்ஷமி அம்மனின் ஆசிர்வாதத்தை வழங்குவதற்கான வழியாகக் கருதப்படுகிறது.


இந்துக்களுக்கும் ஜைனர்களுக்கும் மிகவும் புனிதமான நாள் அக்ஷய திரிதியை நாளில், பகவான் விஷ்ணு பாண்டவர்களுக்கு அக்ஷய பாத்திரம் என்ற கிண்ணத்தை அளித்ததாக சொல்லப்படுகிறது. இந்தப் பாத்திரம் அளவில்லா உணவளிக்கும். இந்த நாளில் தங்கம் வாங்குவது முடிவில்லா அதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்பப்படுகிறது.


தங்க நகைகள்

தங்க நகைகள்

துர்கை அம்மனின் 9 தெய்வ வடிவங்களையும் அங்கீகரிக்கும் பொருட்டுநவராத்திரி கொண்டாடப்படுகிறது. எல்லாவிதமான தீமைகளிலிருந்தும் பக்தர்களை துர்கை அம்மன் காப்பாற்றுவதாக நம்பப்படுகிறது. இந்தியாவின் பிரபலமான பண்டிகைகளுள் இதுவும் ஒன்று. விஜயதசமி நாளில் தங்க நகை வாங்குவது நல்லது.

 தந்தேராஸ் நாளில் தங்கம்

தந்தேராஸ் நாளில் தங்கம்


தீபாவளி பண்டிகையின் முதல் நாளன்று தந்தேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாலட்சுமியையும், பகவான் குபேரனையும் வணங்குகின்றனர். இது பற்றி மன்னர் ஹிமாவின் புராண கதை ஒன்று உள்ளது. திருமணமான நான்காவது நாள் இறந்துவிடுவான் என்ற சாபம் மன்னர் ஹிமாவின் மகனுக்கு இருந்தது. அவனைக் காப்பாற்ற, அவனது மனைவி அவனைச் சுற்றி நிறைய தங்கம் வைத்திருந்தாள். இறுதியில் மரணத்தின் கடவுளான எமதர்மன் வந்தபோது சுற்றி இருந்த தங்கத்தின் மினுமினுப்பால் அவன் சொக்கிப் போனான். ஹிமாவின் மகனைக் கொல்லவில்லை. எனவேதான் தந்தேராசின் போது தங்கம் வாங்குவதால் தீய சக்திகள் சென்றுவிடுகின்றன என்று மக்கள் நம்புகின்றனர்.

 தீபாவளி பண்டிகை

தீபாவளி பண்டிகை

தீபாவளி திருநாளின் மூன்றாவதுநாள் பாலிபிரதிபாடா வருகிறது. இந்த நாளில் பாலி அரசன் ஒரு நாள் பூமிக்கு வரலாம் என்ற ஆசிர்வாதத்தை பகவான் விஷ்ணு வழங்கியுள்ளார் என்று புராணங்களில் கூறப்படுகிறது. பாலி அரசன் செல்வத்தைக் குறிப்பதால் இந்த நாளில் மக்கள் தங்க நகை வாங்குகின்றனர்.

தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம்

தங்கம் வாங்கினால் அதிர்ஷ்டம்

புத்தாண்டின் துவக்கத்தில் தங்க நகை போன்ற மதிப்பு மிக்க பொருட்களை வாங்குவது புனிதம் என்று மக்கள் கருதுகிறார்கள்.

தென்னிந்திய புத்தாண்டான உகாதி பண்டிகை கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் கொண்டாடப்படும் பெரிய பண்டிகைகளுள் ஒன்று. அப்போது தங்க நகை வாங்குவது புனிதம் என்று கருதப்படுகிறது. இந்த நன்னாளில் தங்கம் வாங்கினால் நல்ல அதிர்ஷ்டம், வளமை, செல்வம் ஆகியவை வரும் ஆண்டுகளில் வழங்கப்படுவதாக நம்பப்படுகிறது.

நகை வாங்க நல்ல நாள்

நகை வாங்க நல்ல நாள்

தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்பட்டது. தங்க நகை வாங்குவதற்கு இது மிகவும் விசேஷ தினமாகக் கருதப்படுகிறது. இது வளமையையும் பிரகாசமான எதிர்காலத்தையும் அளிக்கிறது. ஓணம் பண்டிகையில் தங்கம் வாங்கினால் பெருகும்.

காதலை சொல்லும் வழி

காதலை சொல்லும் வழி

பஞ்சாப் மாநிலத்தில், தங்கம் அணிந்த பெண்கள் சந்தோஷம் மற்றும் செல்வத்தின் குறியீடாகக் காணப்படுகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் அறுவடைத் திருநாளான பைசாகி சீக்கியர்களின் புத்தாண்டு தினமாகும். பைசாகி நாளில் பெண்களுக்குத் தங்கம் வாங்கி பரிசளிக்கின்றனர். பஞ்சாப், இராஜஸ்தான் மற்றும் உத்தர பிரதேசத்தின் சில பகுதிகளில் கர்வாசௌத் திருமணமான பெண்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை. இந்த நாளின் கணவர்கள் தங்கள் மனைவிகளுக்கு பொதுவாக தங்க நகையை பரிசாக அளிப்பார்கள்.

English summary
Dhanteras is made from two Sanskrit words: ‘Dhan’ meaning wealth, and ‘teras’ meaning 13th day as per the Hindu calendar. Dhanteras is celebrated two days before Diwali - the festival of lights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X