குரு சண்டாள யோகம், பந்தன யோகம்...ஜெயிலுக்கு போகும் அமைப்பு யாருக்கு இருக்கும் - பரிகாரம்

ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்தே அவருக்கு சிறை செல்லும் அமைப்பு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். இப்படி சிறை தோஷம் யாருக்கு எப்படி வரும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒருவரின் ஜாதகத்தைப் பார்த்தே அவருக்கு சிறை செல்லும் அமைப்பு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். ராஜபோக வாழ்ந்தாலும் ராஜாவாகவே இருந்தாலும் சிறை செல்லும் தோஷம் இருந்தால் ஒருவர் கண்டிப்பாக ஒரு நாளேனும் சிறைக்குள் சென்றுதான் தீர வேண்டும் என்பது விதி. பந்தன யோகம் எனப்படும் சிறை செல்லும் யோகம் ஒருவரின் ஜாதகத்தில் இருந்தால் அவர் கண்டிப்பாக சிறை சென்றே தீர வேண்டும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் நபர்களும், கடவுளின் அவதாரம் என்று கூறி சுற்றி வந்த நபர்களும் இப்போது சிறையில் கம்பி எண்ணிக்கொண்டுள்ளனர். திடீர் புகழ், பணம் செல்வாக்கு கிடைத்த சில ஆண்டுகளிலேயே இப்படி அசிங்கம், அவமானப்படுவது ஏன் என்று ஜாதகத்தில் முன் கூட்டியே கணிக்கப்பட்டிருக்கும்.

ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் 6 ம் இடத்தில் லக்னாதிபதி மறைவு பெற்றால் அந்த ஜாதகர் தன்னுடைய ஊர் மட்டுமே அன்றி மாவட்டம் மாநில அளவில் புகழோடு இருப்பார்கள். ஆனால் அதே ஆறாம் இடத்தில் லக்னாதிபதி உடன் பாவர்கள் சேர்க்கை இருந்தால் அதுவே பந்தன யோகம் எனப்படும் சிறைபடும் யோகம் ஆகும். இதுவே சிறைக்குப் போகும் நிலையை ஏற்படுத்துகிறது.

ஜாதக அமைப்பு

ஜாதக அமைப்பு

ஆபாசமாக பேசி யூடுயூப்பில் பதிவிட்டு அதை வைத்து பலகோடி சம்பாதித்தவர்கள் இருக்கிறார்கள். அந்த நபர்கள்தான் இப்போது சிறைக்கு சென்றுள்ளனர். குறுக்கு வழியில் செல்வம் சேர்ப்பவர்கள், திருடர்கள், கொலை செய்பவர்கள், மோசடி செய்பவர்கள்தான் சிறைக்கு செல்வார்கள். சிறை செல்லும் ஜாதக அமைப்பு எப்படி இருக்கும் என்று ஜோதிட ரீதியாக பார்க்கலாம்.

சிறை செல்லும் யோகம்

சிறை செல்லும் யோகம்


ஜோதிட சாஸ்திரம் இந்த பந்தன யோகத்தைப் பற்ரி நிறைய சொல்லி இருக்கிறது. ஒரு ஜாதகத்தில் உள்ள 12 பாவங்களுமே ஏதோ ஒரு விதத்தில் இந்த பந்தன யோகத்திற்கு காரணமாகின்றது. முக்கியமான பாவங்கள் 6, 8 12. லக்னாதிபதியும் 6 ம் அதிபதியும் சேர்ந்து கேந்திரம் அல்லது திரிகோணத்தில் சனியுடன் சேர்ந்து அமர்ந்து ராகுவால் பார்க்கப்பட்டாலும் (கேதுவுடன் சேர்ந்து அமரும் நிலை) பந்தன யோகம் ஏற்படும்.

சிறை தண்டனை

சிறை தண்டனை

9 ம் பாவத்திலும் 10 ம் பாவத்திலும் தீயவர் வாசம் செய்து சுபர் தொடர்பு இல்லாமல் இருப்பின் அங்கு பந்தன யோகம் ஏற்படும். ஒருவருடைய ஜாதகத்தில் 8ஆம் இடத்தில் ராகு இருந்தால் அவர் சிறை செல்வார். மேலும், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதே ராகு 12ஆம் இடத்தில் இருந்தால் பலமுறை சிறை செல்ல வேண்டி வரும் எனத் தெரிவித்துள்ளார்.

தீய கிரக பார்வை

தீய கிரக பார்வை

ஜாதகத்தில் குடும்ப ஸ்தானமான 2 மோட்ச ஸ்தானமாக12 ஆம் பாவங்களில் தீய கிரகங்கள் அமர்ந்து அவை வேறு தீய கிரகங்களால் பார்க்கப்பட்டால் பந்தன யோகம் ஏற்படும். சுக ஸ்தானமான 4 ஆம் பாவத்தில் சூரியன் அல்லது செவ்வாய் அமர்ந்து 10 ல் சனி அமர்ந்தாலும் அல்லது 10 ம் பாவத்தை சனி பார்த்து 4 ம் வீட்டை சூரியன், செவ்வாய் பார்த்தாலும் பந்தன யோகம் ஏற்படும்.

சிறை செல்லும் நேரம்

சிறை செல்லும் நேரம்

ஒருவரது ஜாதகத்தில் ஆறாம் அதிபதி பாவியாக வந்து தொழில் ஸ்தானமான பத்தாம் இடத்தில் சம்பந்தப்படுமானால் அரசுக்கு விரோதமான தொழிலில் ஈடுபட்டு குறைவான காலத்தில் பொருள் சேர்ப்பார்கள். பத்தாமிடத்தை சனி,செவ்வாய் சேர்ந்து பார்க்கப்படும்போது சட்ட விரோத தொழிலில் ஈடுபட்டு சனி திசை செவ்வாய் புத்தி அல்லது செவ்வாய் திசை சனி புத்தி நடக்கும் காலங்களில் சிறை செல்ல வேண்டியிருக்கும்.சுபர் பார்வை ஏற்பட்டால் தண்டனை குறையலாம்.

குருவின் செயல்

குருவின் செயல்


ஒருவரது ஜாதகத்தில் இரண்டு ,பணிரெண்டாமிடங்களில் பாவிகள் இடம்பெறுவதும், இவர்களுடன் லக்னாதிபதி இவ்விடங்களில் அமர்வதும் சிறை செல்லும் அமைப்பை தரும். தனகாரகனான குரு பகவான் ஏழு மற்றும் பத்தாம் அதிபதியாகி நீசம் பெற்று தனஸ்தானத்தில் இருப்பதும்,இரண்டாம் பாவத்திற்கு ராகு ,கேது சம்பந்தம் சிறை செல்லும் யோகத்தை உண்டாக்கும்.

தவறான வழியில் பணம்

தவறான வழியில் பணம்

ஆறு,எட்டு மற்றும் ஜீவனஸ்தானம் போன்ற இடங்களை உச்ச வக்கிரம் பெற்ற குருபகவான் பார்வை பெறுவதும் குறுக்கு வழியில் பணம் ஈட்ட செய்யும். குருவோடு ராகு அல்லது சனி பகவான் சேர்ந்து குரு சண்டாள யோகம் பெற்றவர்களும் ஆன்மிக நாட்டம் குறைந்து காணப்படுவதோடு தவறான வழியில் ஈடுபட வைக்கும்.

சட்ட விரோத செயல்

சட்ட விரோத செயல்

பத்தாமிடத்தில் சனி,செவ்வாய் மற்றும் ராகு சேர்க்கை மற்றும் சம்பந்தபட்டவர்கள் அரசுக்கு விரோத தொழில் ஈடுபட்டு அதனால் சிறை செல்லும் வாய்ப்பு உருவாகலாம். விருச்சிக லக்னத்தாருக்கு 2, 5, 9 பாவங்களில் தீயவர் அமர்ந்து சுபர் பாதிப்பு எதுவும் இல்லை என்றால் அவருக்கு பந்தன யோகம் ஏற்படும்.

தானம் செய்யுங்கள்

தானம் செய்யுங்கள்

உங்க ஜாதக அமைப்பு இப்படி இருந்தால் நீங்களும் பரிகாரம் செய்வது நல்லது. ஏதாவது ஒரு சின்ன செயலுக்கு போலீஸ் ஸ்டேசன் வாசலுக்கு சென்று விட்டு வாருங்கள். ஏழைகளுக்கு தானம் செய்யுங்கள் இதன் மூலம் கம்பி எண்ணுவதில் இருந்து தப்பிக்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+