Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன்கள் 2020: மீனம் ராசிக்கு லாப குருவினால் அதிர்ஷ்டம் கூடும்

மீனம் ராசிக்காரர்களுக்கு குருவும் சனியும் இணைந்து லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனுசு ராசியில் சஞ்சரித்து வந்த குரு பகவான் மகரம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மீனம் ராசிக்காரர்களுக்கு குரு பகவான் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். உங்க ராசி அதிபதி குரு லாபத்தில் சஞ்சரிப்பதால் உங்களுக்கு திடீர் அதிர்ஷ்டங்களும் லாபங்களும் தேடி வரும். பத்தில் குரு இருந்த போது அல்லல் பட்டீர்கள். வருமானம் நின்று போனதே என்று கவலைப்பட்ட உங்களுக்கு பிரச்சினைகளில் இருந்து விடுதலை கிடைக்கும் காலம் வந்து விட்டது.

லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் கடன் தொல்லைகள் தீரும். கடன்கள் அடைபடும் நேரம் வந்து விட்டது. தொழில் அதிபர்களுக்கு வெற்றிகள் குவியும் வளர்ச்சிகள் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை கிடைக்கும். லாப ஸ்தானத்தில் சனியோடு இணையும் குருவினால் மூத்த சகோதரர்களால் லாபம் கிடைக்கும். சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் தீரும்.

குழந்தைகள் உயர்நிலையை அடைவார்கள். குரு லாபத்திற்கு வரும் போது பிள்ளைகள் ஜெயிப்பார்கள். பிள்ளைகள் முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கஷ்டப்பட்டு படிக்க வைத்து நல்ல வேலை அமையாமல் வருத்தப்பட்ட பெற்றோர்களின் கவலைகள் நீங்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலையும் கை நிறைய சம்பாதித்து பெற்றோர்கள் கையில் கொடுப்பார்கள். அக்கம் பக்கத்தவர்களுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். வீடு மனைகளை விலைக்கு வாங்குவீர்கள். செய்யும் தொழில் நன்றாக லாபம் கிடைக்கும்.

தைரியம் கூடும்

தைரியம் கூடும்

குரு பார்வை ராசிக்கு 3,5,7ஆம் இடங்களின் மீது விழுகிறது. புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். பிசினஸ் பார்ட்டனர்கள் கிடைப்பார்கள். நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். மிகப்பெரிய மேன்மைகளை குரு உருவாக்குவார். பிள்ளைகள் மேன்மை அடைவார்கள்.

துண்பங்கள் நீங்கும்

துண்பங்கள் நீங்கும்

ராசிக்கு ஐந்தாம் வீட்டை குரு பார்க்கிறார். பிள்ளைகளுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும். குரு உங்க களத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் வருத்தங்கள் காணாமல் போகும். குரு ஏழாம் வீட்டை பார்ப்பதால் மிகப்பெரிய மேன்மை அடைவார்கள்.

மதிப்பு மரியாதை கூடும்

மதிப்பு மரியாதை கூடும்

ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் தைரியம் வீரம் முயற்சி ஸ்தானம் ஆகும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அப்பா அம்மா இருந்து செய்ய வேண்டியதை சகோதரன் முன்னிலையில் இருந்து செய்வார்கள். சிலருக்கு சொத்து பரிமாற்றங்கள் நடக்கும். அது நல்ல மாற்றமாக இருக்கும். நல்ல வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம்.

மன திருப்தி அதிகரிக்கும்

மன திருப்தி அதிகரிக்கும்

ஜாதகத்தில் எவ்வளவு யோகம் இருந்தாலும் 5 ம் பாவமும் 5 ஆம் அதிபதியும் பலம் பெற வேண்டும். இந்த குரு பெயர்ச்சியால் பூர்வபூண்ணிய ஸ்தானம் என்ற 5 ஆம் பாவத்தை பாவாதிபதி குருவே பார்க்கிறார். ஐந்தாம் வீட்டை குரு பார்ப்பதால் பிள்ளைகளின் செயலால் நிம்மதி உண்டாகும். மன திருப்தி ஏற்படும். உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும். கனவுகள் பூர்த்தியாகும்.

நன்மைகள் நடைபெறும்

நன்மைகள் நடைபெறும்

திருமணம் ஆகியும் நிண்ட காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு சந்தான பிராப்தி கிட்டும். எது எல்லாம் விதிக்கப்பட்டுள்ளதோ அதை எல்லாம் அனுபவிப்பீர்கள். நன்மையான விசயங்களை மட்டும் அதிகமாக அனுபவிப்பீர்கள். மாணவர்கள் வெளியூர் வெளிநாடு சென்று கல்வி பயில நன்மை செய்வார்.

குடும்பத்தில் குதூகலம்

குடும்பத்தில் குதூகலம்

ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார். களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும்.ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும்.
ஏழாம் வீட்டை பார்ப்பதால் குருவினால் திருமணம் நிறைவேறும். காதலிப்பவர்கள் பலருக்கு திருமணத்தில் முடியும்.

ஆரோக்கியத்தில் முன்னேற்றம்

ஆரோக்கியத்தில் முன்னேற்றம்

சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இது வரை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்த முதுகுவலி. இடுப்புவலி, முட்டுவலி போன்ற நோய்கள் விலகும். தொழிலில் வெற்றி கிடைக்கும். கோவில் திருப்பணிகள், சமூக சேவைகளை செய்வீர்கள். குரு பெயர்ச்சியால் ஆதாயம் அதிகமாகும். இந்த குருப்பெயர்ச்சி கும்ப ராசிக்கு முன்னேற்றமும், வெற்றிகளும் தரக்கூடிய குரு பெயர்ச்சியாக இருக்கும். குலதெய்வ அனுகிரகம் கிடைக்கும். திருச்செந்தூர் முருகப்பெருமானையும் தட்சிணாமுர்த்தியையும் வணங்க நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+