குரு பெயர்ச்சி பலன் 2024: கோடீஸ்வர யோகம் தரும் குரு கேது கூட்டணி.. குபேரன் அருள் யாருக்கு?
சென்னை: குரு பகவான் ஒருவருடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு காரணமானவர். வேலை, திருமணம், குழந்தை பாக்கியம், பணவருமானம் கிடைப்பது இவர் அருளால்தான். எந்த வீட்டில் குரு அமர்கிறாரோ அந்த வீட்டிற்கு நற்பலன்கள் கிடைக்கும். 2024ஆம் ஆண்டு ரிஷப ராசியில் பயணம் செய்யப்போகும் குரு பகவான் கன்னி ராசியில் அமரும் கேது பகவானை பார்க்கிறார். குரு கேது இணைந்து கோடீஸ்வர யோகத்தை சிலருக்கு தரப்போகிறது.
குரு தரும் யோகங்கள்: குரு ஒரு ராசிக்கு இடப்பெயர்ச்சி ஆன உடன் அந்த வீட்டின் காரகத்துவங்கள் தூண்டப்படுகின்றன. குரு பகவான் பார்வையால் அந்த இடம் சுபத்துவம் அடையும் எனவேதான் குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்கின்றனர்.மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத தேவைகள் இரண்டு. ஒன்று பணம் எனப்படும் பொருட்செல்வம், இன்னொன்று புத்திரயோகம் எனப்படும் குழந்தை செல்வம். இந்த இரண்டையும் விரும்பாதவர்களே இருக்க முடியாது. இந்த இரண்டிற்கும் காரகம் அதாவது, ஆதிக்கம் செலுத்தக்கூடிய கிரகம் குரு பகவான்தான்.

குரு பார்வை: சுப கிரகம் என்று சொல்லக்கூடிய, சகல தோஷங்களையும் போக்கக்கூடிய, விசேஷ பார்வை பலம்பெற்ற குரு பகவான் தற்போது மேஷ ராசியில் அமர்ந்துள்ளார். இதுநாள் வரை மேஷ ராசியில் அமர்ந்து துலாம் ராசியில் அமர்ந்திருந்த கேதுவை பார்த்து வந்தார். தற்போது ராகு கேது பெயர்ச்சி நிகழ்ந்து கன்னி ராசிக்கு கேது இடப்பெயர்ச்சியாகி விட்டார். குருவை விட்டு ராகு விலகியதால் குரு சண்டாள தோஷமும் முடிவுக்கு வந்து விட்டது.
கோடீஸ்வர யோகம்: 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் குரு பெயர்ச்சி நிகழப்போகிறது. குரு பகவான் ரிஷப ராசியில் அமர்ந்து 5ஆம் பார்வையாக கன்னி ராசியில் உள்ள கிரகங்களை பார்க்கப்போவதால் சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. இந்த குரு ராகு சேர்க்கையால் உலகத்தில் ஆன்மிகம் தழைக்கும் நிறைய கோவில்களில் கும்பாபிஷேகங்கள் அதிக அளவில் நடைபெறும். 2024ஆம் ஆண்டில் முக்கிய கிரகங்களான சனி, ராகு, கேது, குரு பலமாக உள்ளதால் பல ராசிக்காரர்களின் எதிர்காலம் நல்ல ராஜயோகம் தரக்கூடியதாக இருக்கப்போகிறது.
கோடீஸ்வர யோகம்: கோடீஸ்வரர் என்ற பட்டம் ஒருவருக்கு கிடைக்கிறது என்றால் அது குரு-கேது சேர்க்கை காரணமாக ஏற்பட்டது என்று ஆணித்தரமாக சொல்லலாம். ஒருவரின் ஜாதகத்தில் குரு கேது சேர்ந்திருந்தால் அவருக்கு கோடீஸ்வர யோகம் வரும். குரு கேது இடையே பார்வை ஏற்பட்டாலும் கோடீஸ்வர யோகம் தேடி வரும். நவகிரகங்களில் குருவிற்கும், கேதுவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. கேது ஞான மோட்சகாரகன்; குரு ஞானம், அறிவு, வேதம், தவம், மந்திரசித்தி போன்றவற்றிற்கு ஆதாரமானவர்.
பதவிகள் தேடி வரும்: பிறந்த ஜாதகத்தில் குரு-கேது சேர்க்கை, பார்வை, சாரபரிவர்த்தனை, ஒருவருக்கொருவர் கேந்திரம், கோணம் என சம்பந்தப்பட்டு இருந்தால் உயர்ந்த பதவி, அந்தஸ்து, அதிகாரம் கிடைக்கும். காமம், குரோதம், மோகம் இவை அனைத்தையும் கடந்து இறுதியாக மோட்சத்தை அடைவதற்கு உதவும் கிரகம் கேதுபகவான். யோகினி யோகம் என்றழைக்கப்படும் யோகமானது, குரு மற்றும் கேது இவர்கள் இணையும் பொழுது கிடைக்கப்படும் யோகமாகும். குரு பகவான் கேதுவை பார்க்கும் பொழுது இந்த யோகம் ஏற்படுகின்றது.
கன்னி: பாக்ய ஸ்தான குரு பகவான் கன்னி ராசிக்காரர்களுக்கு கோடி நன்மைகளை தரப்போகிறார். குருவின் பார்வை உங்க ராசிக்கு கிடைக்கிறது. உங்கள் ராசியில் கேது அமர்ந்திருக்க குருவின் பார்வையும் கிடைப்பதால் சகலவிதமான நன்மைகளும் ஏற்படும். படிப்பில் இருந்த தடை, வேலையில் இருந்த தடைகள் நீங்கும். குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தவர்கள் ஒன்றிணைவார்கள். வியாபாரம் தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலையும் லாபமும் கிடைக்கும். சிலருக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். அடுத்தவர்கள் பிரச்சினையில் தலையிட வேண்டாம். குடும்ப பிரச்சினைகளை அடுத்தவர்களிடம் கூற வேண்டாம்.
விருச்சிகம்: வேலை இல்லையே என்று ஏங்கித்தவித்த விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சொந்த தொழில் தொடங்குவீர்கள். சுப காரியங்கள் கை கூடி வரும். பணவருமானம் அபரிமிதமாக இருக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். இந்த குரு பெயர்ச்சி விருச்சிக ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக அமையும்.
மகரம்: குரு பகவான் வரும் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மகரம் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிப்பதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். குரு பகவானின் பார்வை கிடைப்பதால் கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது. வேலையில் இட மாற்றம் ஏற்படும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்கப்போகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications