குரு பெயர்ச்சி பலன் 2024: அள்ளித்தரப்போகும் குருதசை.. கோடீஸ்வர யோகம் யாருக்கு கிடைக்கும்?
சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் குரு நல்ல நிலையில் இருந்தால் அவரது தசா புத்தி காலத்தில் ஜாதகருக்கு நல்ல யோகங்களை வாரி வழங்குவார். வருமானம் அதிகம் வரும், செல்வம் செல்வாக்கு கூடும், புத்திரபாக்கியம் கிடைக்கும், குழந்தைகளால் நன்மைகள் நடைபெறும். குரு தசையால் எந்த லக்னம் ராசியில் பிறந்தவர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
கோடீஸ்வர யோகம்: குரு பகவான் தனகாரகன், புத்திரகாரகன். குரு பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நன்றாக இருந்தால் அவரது தசாபுத்தி காலத்தில் கோடீஸ்வர யோகம் பெறும் அளவிற்கு அள்ளிக்கொடுப்பார். அதே சரியில்லாத நிலையிலோ வலுவிழந்தோ, நீசமடைந்தோ இருந்தால் அவரது தசாபுத்தியில் பாதிப்புகளை ஏற்படுத்துவார்.

பண மழை பொழியும்: குரு, தனம் மற்றும் புத்திர காரகன் என்பதால் அவரது தசையில் பணம் அதிகமாகப் புரளும் இடங்களிலோ, பணத்தை வைத்துச் செய்யும் தொழில்களிலோ இருக்க வைப்பார். ஒருவரின் ஜாதகத்தில் குரு வலிமையாக இருந்தால் பணம் அதிகம் புரளும் இடங்களில் வேலை கிடைக்கச் செய்வார் நகை, நிதித்துறை போன்ற தொழில்களை செய்ய வைப்பார்.
வலிமையான குரு: ஒருவருக்கு கோச்சார ரீதியாக குருபெயர்ச்சி பலன்கள் சொல்லும் போதே உங்கள் ஜாதகத்தில் குருவின் நிலை எப்படி இருக்கிறது. என்ன தசாபுத்தி என்ன நடக்கிறது என்பதைப் பார்த்து அதற்கேற்ப பரிகாரம் செய்யச் சொல்கின்றனர் ஜோதிடர்கள். ஜாதகத்தில் வலுப்பெற்ற குரு பத்தாமிடத்தோடு சம்பந்தப்படும் நிலையில், ஒருவரை பணத்தை இரட்டிப்பாக்கும் வட்டித் தொழில் மற்றும் நகைக்கடைத் தொழில் போன்றவைகளில் ஈடுபட வைத்து பெரிய லாபங்களைத் தருவார்.
குரு நின்ற இடம் பாழ்: குரு பொன்னவன். குரு பார்க்க கோடி நன்மை. குரு நின்ற இடம் பாழ், பார்க்கும் இடம் சுபிட்சம் என்றெல்லாம் ஜோதிட ரீதியான பழமொழிகள் உண்டு. பொன் எனப்படும் தங்கத்திற்கு அதிபதியும் குருவே. குரு முழுமையான சுப கிரகம் என்பதால் அவரது பார்வைக்கு எத்தகைய தோஷத்தையும் போக்கும் வலிமை உள்ளது. ஒருவரின் ஜாதகத்தில் குரு ஆறு, எட்டு போன்ற இடங்களில் மறைந்தோ, பகை, நீசம் பெற்றோ இருந்தால் சனி, ராகு போன்ற பாபக் கிரகங்களுடன் தொடர்பு கொண்டோ இருந்தால் தன லாபத்தை தடை செய்வார், புத்திரபாக்கிய தடையும் ஏற்படும்.
செல்வ வளம்: ஒருவரின் ஜாதகத்தில் குரு ஒன்று, நான்கு, ஏழு, பத்து எனப்படும் கேந்திர ஸ்தானங்களில் இருந்து ராகு ஆறாமிடத்தில் இருந்தால் அஷ்டலட்சுமி யோகம் அமைவதாக ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. ஆறாமிடத்தில் அசுபக் கிரகமான ராகு இருப்பதால் ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் கெட்ட ஆதிபத்தியங்களான கடன், நோய், எதிரி ஆகியவை ஒழிக்கப்பட்டு அந்த பாவம் ஜாதகருக்கு சுப விஷயங்களைச் செய்யும் என்பது ஜோதிட விதி.
ஹம்ச யோகம்: குரு ஹம்ச யோகம் தரும் நிலையில் அவருக்கு எதிர்த் தன்மையுடைய கிரகங்களான சுக்ரன், சனி, புதன் ஆகியோருடன் சேருவது, இவர்கள் குருவைப் பார்ப்பது யோகத்தைக் குறைத்து விடும். அதேநேரத்தில் குருவின் நண்பர்களான சந்திரன், சூரியன், செவ்வாய் ஆகியோர் குருவைப் பார்த்தாலோ, இணைந்தாலோ யோகம் இன்னும் வலுப்பெறும்.
கோடீஸ்வர யோகம்: நிகழப்போகும் குரு பெயர்ச்சியால் சிறப்பான யோகம் கிடைக்கப்போகிறது. ரிஷப ராசியில் பயணம் செய்யப்போகும் குரு பகவானின் பார்வை கன்னி ராசியில் அமர்ந்துள்ள கேதுவின் மீது விழப்போகிறது. குரு கேது பார்வை குரோதி ஆண்டு முழுவதும் கிடைக்கும். இது மிகப்பெரிய யோகத்தை கொடுக்கும்.
செல்வச்செழிப்பு: கேது ஒரு முழுமையான ஞானக் கிரகம் அவர் ஞானத்தின் வடிவான குருவின் பார்வை கிடைக்கும் போது மிகப்பெரிய யோகத்தைக் கொடுப்பார் குரு பகவான். குருவும், கேதுவும் பார்வை செய்வது கேள யோகம் எனப்படும் கோடீஸ்வர யோகம் என்று சொல்லப்படுகிறது.
குரு தசையில் யோகம்: செவ்வாயின் ஆதிக்கத்துக்குட்பட்ட மேஷ லக்னத்திற்கு குரு 9 மற்றும் 12ஆம் அதிபதி. அதே போல விருச்சிக லக்னத்திற்கு குரு 2 மற்றும் ஐந்தாம் அதிபதி. குரு தனது தசையில் மிகச் சிறந்த யோகங்களை அளிப்பார். அதே போல கடகம், சிம்மம் லக்ன காரர்களுக்கும் தனது தசையில் யோகங்களையே செய்வார். இந்த நான்கு லக்னங்களுக்கும் வலிமையற்ற நிலையிலோ, மறைவு பெற்றோ, பகை, நீசம் பெற்றிருந்தாலும் கூடுமானவரை கெடுதல்களைச் செய்ய மாட்டார். கை தூக்கி விட்டு காப்பாற்றுவார்.
குரு செய்யும் நன்மை: ரிஷபம், துலாம் லக்னக்காரர்களுக்கு குரு பகவான் பெரிதாக நன்மை செய்வதில்லை. குருவின் எதிரி சுக்கிரன். ரிஷப லக்னத்திற்கு எட்டிலும், துலாம் லக்னத்திற்கு ஆறாம் வீட்டிலும் அமர்ந்து ஆட்சி பலம் பெற்று சுப கிரகங்களின் பார்வையோ தொடர்போ ஏற்பட்டால் நல்லது நடக்கும்.
திருமண வாழ்க்கை: மிதுனம் மற்றும் கன்னி லக்னக்காரர்களுக்கு குரு பகவான் கேந்திரமான 4, 7 , மற்றும் 10ஆம் வீட்டில் அமரும்போது யோகம் தருவார். நல்ல வாழ்க்கைத்துணையும் பிள்ளைகளால் பெருமையும் தேடி வரும். மகரம், கும்பம் லக்னகாரர்களுக்கு யோகாதிபதி இல்லை என்றாலும் கடகத்தில் உச்சம் பெற்ற குரு மகரத்தை பார்த்தால் தசையில் நன்மை நடைபெறும். அதே போல கும்ப லக்ன காரர்களுக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்தில் குரு அமர்வது நன்மை நடக்கும்.
தனுசு மீனம்: தனுசு, மீனம் ராசிக்கு குரு அதிபதி என்றாலும் கேந்திரங்களில் அமர்ந்தால் கேந்திராதிபத்ய தோஷம் வரும். அதே நேரத்தில் தனுசு லக்ன காரர்களுக்கு குரு கடகத்தில் உச்சம் பெற்றால் நன்மை, அது எட்டாவது வீடான மறைவு ஸ்தானமாகவே இருந்தாலும் நல்லது நடக்கும். மீனம் ராசிக்காரர்களுக்கு உச்சம் பெற்றாலும் அதிகம் நன்மை இல்லை அதே நேரம் விருச்சிகமான ஒன்பதாவது வீட்டில் அமர்ந்து மீனத்தை பார்ப்பதன் மூலம் வலிமை கிடைக்கும்.
என்ன பரிகாரம் செய்யலாம்: ஜாதகத்தில் குரு வலிமை இழந்திருக்கும் நிலையில் நவ கிரகத் தலங்களில் குருவிற்கு முதன்மைத் தலமாக போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் ஆலயம் சென்று அங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். தென் திட்டை ராஜ குருவையும், பாடியில் குரு தலத்திற்கும் சென்று வணங்கலாம். திருச்செந்தூர் குருபரிகார தலம்தான். அங்கு சென்று திருச்செந்தில் ஆண்டவனையும் தட்சிணாமூர்த்தியையும் வணங்கலாம். வியாழக்கிழமை குருவின் ஹோரையில் குருவின் வாகனமான யானைக்கு, விருப்பமான உணவு கொடுக்கலாம்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications