குரு பெயர்ச்சி பலன் 2024: குரோதி புத்தாண்டில் 5 ராசிக்காரர்களுக்கு புரமோசன்.. சம்பள உயர்வு
சென்னை: குரு பகவான் ஒருவருக்கு யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் தரும் கிரகம். குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடத்திற்கு பலம் அதிகம் என்பதால் குரு பார்க்க கோடி நன்மை என்று ஜோதிடர்கள் சொல்கின்றனர். இந்த குரு பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: குரு பகவான் குரோதி ஆண்டு முழுவதும் இரண்டாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வரும். சிலருக்கு வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். கோபத்தை கட்டுப்படுத்தவும். அவசர புத்தியும் கோபமான பேச்சும் உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி விடும் வேலை செய்யும் இடத்தில் கவனமாக பேசவும். வெற்றிகளையும் சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

சிம்மம்: பத்தாம் வீட்டில் குருபகவான் பயணம் செய்யப்போகிறார். நல்ல வேலை கிடைக்கும். புதிய பொறுப்புகள் வரும். இடமாற்றங்கள் ஏற்படும். வீடு நிலம் வாங்கலாம். வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்யலாம். வெளிநாடுகளில் வேலை செய்பவர்கள் கவனம், மேலதிகாரிகளின் உத்தரவுக்கு கட்டுப்படுங்கள். வீண் தர்க்கம் வேண்டாம். அப்ரைசல் நேரத்தில் டீம் லீடரை பகைத்துக்கொள்ளாதீர்கள். வீண் வாக்குவாதத்தை தவிர்த்து விடுங்கள் நல்லதே நடக்கும்.
கன்னி: குருபகவான் பயணம் செய்யும் இடம் பாக்ய ஸ்தானம். ஒன்பதாம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரப்போகிறார். குரு பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வு கன்னி ராசிக்காரர்களுக்கு மன மகிழ்ச்சியை அதிகரிக்கப்போகிறது. வருமானம் அதிகரிப்பதால் சேமிப்பு உயரும் சொத்து சேர்க்கை ஏற்படும்.
விருச்சிகம்: கடந்த சில ஆண்டு காலமாக வேலை இல்லையே என்று கவலைப்பட்டவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். குரோதி ஆண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு புரமோசனுடன் கூடிய நல்ல சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில் இருக்கும் சிலர் சொந்த தொழில் தொடங்குவீர்கள். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். பண வருமானம் அதிகரிப்பதால் சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். குரோதி ஆண்டில் நிகழப்போகும் குரு பெயர்ச்சி உங்களுக்கு மகிழ்ச்சிகரமானதாக அமையப்போகிறது.
மகரம்: குரோதி ஆண்டில் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் நிறைய நன்மைகள் நடைபெறும். குறைவான சம்பளத்தில் வேலை செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு உத்யோக உயர்வும் சம்பள உயர்வும் தேடி வரும். மகர ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் ஏற்றங்களும் மாற்றங்களும் நிறைந்த குரு பெயர்ச்சியாக அமைந்துள்ளது.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications