For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தீராத தோல் நோய்களை குணமாக்கும் ஜேஷ்டாபிஷேக தரிசனம்!

Google Oneindia Tamil News

சென்னை: இன்று புதன் கிழமை. மேலும் ஸ்ரீ மஹா விஷ்னு எனும் ஸ்ரீமன் நாரயணனுக்கு ஜேஷ்டாபிஷேகம் எனும் விசேஷ தினமாக கொண்டாடப்படுகிறது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் மற்றும் அனைத்து வைஷ்ணவ திவ்ய க்ஷேத்திரங்களிலும் ஆனி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் அபிஷேகம் மற்றம் தைலக்காப்பு வைபவம் நடைபெறுகிறது. இதுவே ஜேஷ்டாபிஷேகம் என்று அழைக்கப்படுகிறது. கேட்டை நட்சத்திரத்திற்கு ஜேஷ்டா நட்சத்திரம் என்றும் பெயர் உண்டு. எனவே இந்த நட்சத்திர நாளில் நடைபெறும் அபிஷேகத்தை, ஜேஷ்டாபிஷேகம் என்றே அழைக்கின்றனர்.

ஜேஷ்டாபிஷேகம்:

ஜேஷ்டாபிஷேகம்:

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். தை மாதம் தொடங்கி ஆனி வரை அவர்களுக்குப் பகல் பொழுதாகவும், ஆடி மாதம் முதல் மார்கழி வரை இரவுப்பொழுதாகவும் அமையும். அப்படிப் பார்க்கும்போது அதிகாலையான பிரம்ம முகூர்த்தம் மார்கழியில்தான் வருகிறது. தேவர்களுக்கே பிரம்ம முகூர்த்தமாக இருக்கிறபடியால், மார்கழி மாதம் மானிடர்களுக்கும் சிறந்ததாகிறது. தேவர்களின் பிரம்ம முகூர்த்த காலமான மார்கழி தக்‌ஷிணாயனத்தின் கடைசி மாதம். தேவர்களுக்கு வைகறை மார்கழி மாதம் காலைப்பொழுது மாசி மாதம்; உச்சிக் காலம் சித்திரை. மாலைப்பொழுது ஆனி; இரவு ஆவணி; அர்த்தசாமம் புரட்டாசி என்பர்.

தேவர்களின் பகல்பொழுதான உத்திராயணத்தின் கடைசி மாதம் ஆனி. இந்த மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் சிவனுக்கும் ஜேஷ்டா நக்ஷத்திரம் எனப்படும் கேட்டை ந்க்ஷத்திரத்தில் ஸ்ரீ மகா விஷ்னுவிற்க்கும் மாலை நேர பூஜை செய்வதாக சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. இதனை ஆனித் திருமஞ்சனம் என்று சொல்வர்.

திருமஞ்சனம்:

திருமஞ்சனம்:

அலங்கார பிரியரான ஸ்ரீ மஹாவிஷ்னுவிற்க்கு வருடத்திற்கு ஒருமுறை ஆனிமாத கேட்டை நக்ஷத்திரத்தன்று திருமஞ்சனம் செய்வது மரபு. திருமஞ்சனம் என்றால் அபிஷேகம் அல்லது மங்கள ஸ்னானம். அதாவது மங்கள நீராட்டு. வைஷ்ணவ ஸ்தலங்களில் ஸ்வாமிக்கு மங்கள நீராட்டு செய்வதை "திருமஞ்சனம்" என்றும் சிவ ஸ்தலங்களில் "அபிஷேகம்" என்றும் கூறுவது வழக்கம். ஆனால் மிகச்சிறப்பாக சிவ ஸ்தலங்களில் முதன்மையான ஸ்தலமான சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் ஆனிமாதத்தில் நடைபெறும் அபிஷேகத்தை ஆனித்திருமஞ்சனம் வைஷ்ணவ ஸ்தலங்களில் முதன்மை ஸ்தலமான ஸ்ரீ ரங்கத்தில் ஆனிமாதத்தில் நடைபெறும் திருமஞ்சனத்தை ஜேஷ்டாபிஷேகம் என்றும் கூறுவது வழக்கம்.

 ஜோதிடத்தில் ஜேஷ்டாபிஷேகம்:

ஜோதிடத்தில் ஜேஷ்டாபிஷேகம்:

சாதாரணமாக குளியலுக்கு காரகர் நீர் ராசி அதிபதியான சந்திரன் ஆகும். ஆனால் திருமஞ்சனம் என்பது பலவித வாசனை பொருட்கள் மற்றும் குளிர்விக்கும் பொருட்களை கொண்டு செய்யப்படுவதால் திருமஞ்சனத்தின் காரகர் சுக்கிரன் என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

அனைத்து எண்ணை மற்றும் தைலங்களுக்கும் சனி பகாவான் தான் காரகர் என்றாலும் நல்லெண்ணைதான் சனிக்கு உகந்த எண்ணையாக கருதப்படுகிறது. உடல் கட்டு மற்றும் எலும்பிற்க்கு காரகன் சனி பகவான் ஆவார். எனவே உடல் கட்டுகோப்பாக இருக்க நல்லெண்ணை குளியல் சிறந்தது என ஆயுர்வேதம் மற்றும் மருத்துவ ஜோதிடம் கூறுகிறது.

தோல் நோய்க்கான ஜோதிட காரணங்களும் கிரக நிலையும்:

தோல் நோய்க்கான ஜோதிட காரணங்களும் கிரக நிலையும்:

சாதாரண சரும நோய் முதல் தொழு நோய் வரையிலுள்ள அனைத்து தோல் நோய்களுக்கும் கிரகம் புதன் மற்றும் ஆறாம் பாவம் ஆகியவற்றின் நிலையை கொண்டு அறியலாம்.

செவ்வாய்:

செவ்வாய்:


காலபுருஷனுக்கு லக்னாதிபதி என்பதாலும் தோலுக்கு செவ்வாய் காரகத்துவம் வகிப்பதால் தோல் நோய்க்கு செவ்வாய் எனப்படும் அங்காரகனின் நிலையும் முக்கியமாகும்.

புதன்:

புதன்:


அனைத்து தோல் மற்றும் நரம்பு கோளாருகளுக்கு புதனே காரகமாவார். தோலில் பல மாற்றங்கள் ஏற்படுவதும் நரம்பு செயலிழப்பது மற்றும் மரத்துபோகும் தன்மை ஏற்படுவது குறிப்பிடத்தக்கது.

சுக்கிரன்:

சுக்கிரன்:

உடலிலுள்ள அசுத்தங்கள் வேர்வை மூலமாகவோ அல்லது சிறுநீர் மூலமாகவோ வெளியேறவில்லை என்றால் அது சரும நோயாக உருவெடுத்து தோல்அழுகுதல், சீழ் பிடித்தல் சிறங்கு, கொப்புளங்கள் என பலவித சரும வியாதிகள் தோன்றுகின்றன. உடலிலுள்ள அசுத்தங்கள் வெளியேற சிறுநீரகத்தின் பங்கு முக்கியமானதாகும். சிறுநீரகத்திற்க்கு சுக்கிரன் காரகனாவதால் அனைத்து சரும நோய்களுக்கும் சுக்கிரன் காரகமாகின்றார்.

ராகு/கேது:

ராகு/கேது:

புதனுக்கு அடுத்தபடியாக தோல் நோய்க்கு முக்கிய அங்கம் வகிப்பவர்கள் ராகு மற்றும் கேது ஆவர். உடலில் கருப்பு மற்றும் வெள்ளை நிற புள்ளிகள் தோன்றுவது, தோலின் அடுக்குகளிலுள்ள அனஸ்தீஷியாவை செயலிழக்க செய்வதால் தேமல் மற்றும் சிலவகை சரும நோய்கள் ஏற்பட்டவர்களுக்கு உடல் மரத்து வலி மற்றும் உணர்ச்சியற்ற நிலை ஏற்படும். மேலும் அங்கஹீனம், உருவ மாற்றம், நுன்னுயிர் கிருமியினால் காற்றில் பரவுதல் போன்றவற்றிற்க்கு ஸர்ப கிரகங்களே காரகர் ஆவர். மேலும் ஒருவரின் கர்ம விணைகளை ஜாதகத்திலு தெரிவித்து அதை அனுபவிக்க செய்பவர்களும் இவர்களே!

தோல் நோய்களுக்கான கிரக சேர்க்கைகள்:

தோல் நோய்களுக்கான கிரக சேர்க்கைகள்:

1. சூரியன், சுக்கிரன் மற்றும் சனி எந்த ராசியிலும் இணைவு பெறுவது.

2.சந்திரன் மிதுன கடக மீன நவாம்சத்தில் இருந்து சனி மற்றும் செவ்வாயுடன் தொடர்பு கொள்வது.

3.லக்னாதிபதி, சந்திரன் மற்றும் புதன் ராகு கேதுவுடன் சேர்க்கை பெறுவது.

4.செவ்வாய் லக்னத்தில் நின்று சூரியனும் சனியும் முறையே எட்டு மற்றும் நான்காம் வீடுகளில் நிற்பது.

5.சனி,செவ்வாய் மற்றும் சந்திரன் பாப கிரக சேர்க்கை பெறுவது.

6.ஆறாம் வீட்டதிபதி லக்னத்தில் நிற்க்கும் சூரியன்,செவ்வாய் மற்றும் சனியுடன் தொடர்பு கொள்வது.

7.சந்திரன் காரகாம்சத்தில் நான்கில் நின்று கேது/செவ்வாய்/சுக்கிரன்

ஆகியவர்களுடன் தொடர்பு கொள்வது.

8.லக்னாதிபதி எந்த ராசியில் ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/சந்திரனும் செவ்வாயும் இணைந்து எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும்/ லக்னாதிபதியும் புதனுமோ அல்லது சந்திரனும் செவ்வாயுமோ எந்த ராசியில் நின்று ராகு கேதுவுடன் சேர்க்கை பெற்றாலும் ஜாதகருக்கு வென்குஷ்டம் எனப்படும் வெள்ளை புள்ளிகள் ஏறபடும்

9.சூரியனும் சந்திரனும் நீர் ராசியில் இணைந்து நின்றால் ஜாதகருக்கு உடம்பில் வெள்ளை புள்ளிகள் ஏற்படும்.

10,லக்னாதிபதி, செவ்வாய் மற்றும் புதன் இணைந்து நான்கு அல்லது பன்னிரெண்டாம் வீட்டில் நிற்பது.

11.குருவும் சனியும் சந்திரனுடன் இணைந்து 6ம் வீட்டில் நிற்பது.

12.சனியும் சந்திரனும் ஆறாம் வீட்டில் நிற்பது.

13.ஆறாம் வீட்டதிபதியும் எட்டாம் வீட்டதிபதியும் 6ம் வீட்டில் இனைந்து நிற்பது.

14.பலமான சனி மூன்றாம் வீட்டில் நின்று செவ்வாயுடன் சேர்க்கை பெறுவது.

15.சஷ்டியாம்சத்தில் மூன்றாம் வீட்டில் மாந்தியுடன் ராகுவோ அல்லது செவ்வாயோ சேர்க்கை பெற்று காலகரண யோகம் பெறுவது

16.பலமிழந்த குருவும் சனியும் முறையே மூன்று ஒன்பது ஆகிய இடங்களில் நின்று சஷ்டியாம்சத்தில் கரசேத யோகம் பெறுவது.

மேலே குறிப்பிட்ட கிரக சேர்க்கைகளில் ஒன்றிரண்டு பெற்றிருந்தால் சாதாரண தோல் நோய் ஏற்படும். இந்த கிரக சேர்க்கைகளில் அதிகப்படியாற சேர்க்கைகளுடன் லக்னம், லக்னாதிபதி, ஆத்ம காரகன், சந்திரன் குருவின் நிலை, கேந்திர திரிகோணங்களில் பாவர்கள், பஞ்சாம்சம், சஷ்டியாம்சம் போன்ற இடங்கள் கெட்டிருந்தால் மட்டுமே ஒருவருக்கு குஷ்டரோகம்எனப்படும் தொழுநோய் ஏற்படும் என ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

நாட்பட்ட தோல் நோய் தீர ஜோதிட பரிகாரங்கள்:

நாட்பட்ட தோல் நோய் தீர ஜோதிட பரிகாரங்கள்:

1. சனி பகவானும் புதபகவானும் வாத கிரகம் ஆவார். வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரன் கப மற்றும் வாத கிரகமாவர். எலும்பு மற்றும் வாத நோய்களுக்கு நல்லெண்ணை மசாஜ் மற்றும் குளியல் சிறந்ததென்கிறது மருத்துவ ஜோதிடம். மேலும் சனைஸ்வர பகவானுக்கு புதனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள் என்ற அடிப்படையிலும் சனி புதன் கிழமைகளில் ஆண்களும் வெள்ளிக்கிழமைகளில் பெண்களும் எண்ணை தேய்து குளிப்பது சிறந்த பயனளிக்கும். சுக்கிர ஸ்தலத்தில் புதன் கிரஹத்தின் அதிதேவதையான மஹாவிஷ்னு ஸ்ரீ ரங்க நாதருக்கும் சுக்கிர கிரஹத்தின் அதிதேவதையான மஹாலக்ஷ்மி ஸ்ரீ ரங்க நாச்சியாருக்கும் நடைபெறும் தைலாபிஷேகத்தினை தரிசித்தால் நீண்ட நாட்களாக குணமாகாத வாத நோய்கள் மற்றும் தோல் நோய்கள் குணமாகும்.

2. செவ்வாய்க்கு பரிகாரம் செய்யும் தலமாக விளங்குவது வைத்தீஸ்வரர் கோயில் இக்கோவில் நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி அருகில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரர் கோவில் செவ்வாய்க்கு தோஷத்திருக்கு மட்டும் அல்லாது மருத்துவம் சார்ந்த நோய்களை போக்கும் கோவிலாகவும் உள்ளது. செவ்வாய் கிரகத்திருக்கு மிகவும் கொடுமையான "தொழுநோய் " வந்ததாகவும் அதனை போக்க சிவ பெருமானே தானாக தோன்றி அவருக்கு மருத்துவம் பார்த்து குணமடைந்ததால் செவ்வாய் ஈச பெருமானின் அருகில் உள்ளத்தால், இத்திருக்கோவில் செவ்வாய் கிரகத்திற்கு மிகவும் சிறப்பாக உள்ளது.

3. சீர்காழி திருக்கோலக்கா தெரு தாளபுரீஸ்வரர், ஓசைநாயகி உடனாகிய கோயில் உள்ளது. தேவார பாடல்களை இரண்டாவதாக பாடப்பெற்ற ஸ்தலம். முனிவர் சாபத்தால் சூரிய பகவானுக்கு தொழுநோய் ஏற்பட்டு இக்கோயிலில் உள்ள புஷ்கரணி தீர்த்த குளத்தில் கார்த்திகை ஞாயிறன்று நீராடி சாபவிமோசனம் பெற்றார்.

4. திருவெண்காடு புதன் பரிகாரத் தலங்களில் முதன்மைத் தலமாகக் கூறப்படும் தலம். சுவேதாரண்யேசுவரர் கோயில் சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவத்தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.


- அஸ்ட்ரோ சுந்தரராஜன்

9498098786

English summary
The ‘jeyshtabishekam’ will be performed at Sri Ranganathaswamy temple in Srirangam on today Wednesday.falling in the ‘kettai’ star in the month of ‘Aani’, the ritual marks the holy anointment of herbal oil to the presiding deity of Sri Ranganathar. Marking the commencement of the ritual, holy waters were brought from C
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X