For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காலபைரவர் ஜெயந்தி # பரணியில் அவதரித்த மகாபைரவரை வழிபட பாதிப்புகள் நீங்கும்

பரணி நட்சத்திரத்தில்தான் பைரவர் அவதரித்தார். பரணி நட்சத்திர தினத்தில் பைரவரை வழிபட நன்மைகள் நடைபெறும்.

Google Oneindia Tamil News

மதுரை: பைரவர் பரணியில் அவதரித்தவர். சித்திரை , ஐப்பசி ஆகிய மாதங்களில் வரக்கூடிய பரணி நட்சத்திரம் கால பைரவருக்கு விசேஷ நாட்கள். பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் வழிபாடு நடத்தப்படுகிறது. ஒருவரின் உண்மையான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும்போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

Kala Bhairava Ashtami 2020: Kalabhairava Jayanti Bhairava birth star

பரணி நட்சத்திரக்காரர்கள் பைரவரை வழிபட்டால் புண்ணியமும், பலனும் அதிகம் கிடைக்கும். 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.

பைரவ விரதத்தின் நோக்கமே கேடுகளை அழிப்பதுதான். அதிகாலையில் குளித்து, பைரவரை மனதில் நினைத்து வணங்க வேண்டும். பகலில் ஏதாவது ஒரு பொழுது மட்டும் எளிய உணவு சாப்பிடலாம். இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலை சாற்றி வழிபட வேண்டும். வடைமாலை சாற்ற முடியாதவர்கள் விளக்கேற்றி வழிபடலாம்.

Kala Bhairava Ashtami 2020: Kalabhairava Jayanti Bhairava birth star

தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்த பலன்களை கொடுக்கும். எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். ஆனால் செவ்வாய்க் கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால் அதைவிடச் சிறப்பான நாள் ஏதுமில்லை.

Kala Bhairava Ashtami 2020: Kalabhairava Jayanti Bhairava birth star

மறுநாள் நவமியன்று காலை மீண்டும் கோவிலுக்கு சென்று விநாயகர், சிவன், அம்பாள், பைரவரை வணங்கி, ஏழைகளுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். சிறிதளவு சர்க்கரைப் பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நல்லது. பிறகு வீட்டிற்கு எந்தக் கெடுதலும் வராது என உறுதிமொழி எடுக்க வேண்டும். சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

Kala Bhairava Ashtami 2020: Kalabhairava Jayanti Bhairava birth star

27 நட்சத்திரகாரர்கள் வழிபட வேண்டிய பைரவர்கள்

அஸ்வினி - ஸ்ரீ ஞான பைரவர், பரணி - ஸ்ரீமகா பைரவர், கார்த்திகை - ஸ்ரீ சொர்ண பைரவர், ரோகிணி - ஸ்ரீகால பைரவர், மிருகசீரிஷம் - ஸ்ரீ சேத்திரபால பைரவர், திருவாதிரை - ஸ்ரீவடுக பைரவர், புனர்பூசம் - ஸ்ரீவிஜய பைரவர் பூசம் - ஸ்ரீ ஆவின் பைரவர், ஆயில்யம் - ஸ்ரீ பாதாள பைரவர், மகம் - ஸ்ரீநர்த்தன பைரவர், பூரம் - ஸ்ரீ கோட்டை பைரவர், உத்திரம் - ஸ்ரீ ஜடாமண்டல பைரவர், அஸ்தம் - ஸ்ரீ யோக பைரவர், சித்திரை - ஸ்ரீ சக்கர பைரவர், சுவாதி - ஸ்ரீ ஜடா முனி பைரவர், விசாகம் - ஸ்ரீ கோட்டை பைரவர், அனுஷம் - ஸ்ரீ சொர்ண பைரவர், கேட்டை - ஸ்ரீகதாயுத பைரவர், மூலம் - ஸ்ரீ சட்டநாதர் பைரவர், பூராடம் - ஸ்ரீகால பைரவர், உத்திராடம் - ஸ்ரீவடுகநாதர் பைரவர், திருவோணம் - ஸ்ரீ மார்த்தாண்ட பைரவர், அவிட்டம் - சீர்காழி பிரம்மபுரீசுவர் கோவிலில் உள்ள அஷ்ட பைரவர் சந்நிதி. சதயம் - ஸ்ரீசர்ப்ப பைரவர், பூரட்டாதி - கோட்டை பைரவர். உத்திரட்டாதி - ஸ்ரீ வெங்கல ஓசை பைரவர், ரேவதி - ஸ்ரீ சம்காரமூர்த்தி பைரவர். 27 நட்சத்திரங்களில் பிறந்தவர்களும் தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபட நன்மைகள் நடைபெறும்.

English summary
Bharava ​​is the incarnation of Barani. Special days for Barani star term Bhairava ​​which may come in the months of Chittirai and Aippasi If the Barani stars worship Bhairava, they will get more blessings and benefits. Bhairava ​​worship is held every month on Teipirai Ashtami.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X