வைகையில் இறங்கும் போது கள்ளழகர் உடுத்தி வரும் பட்டுப்புடவை நிறத்தின் அர்த்தம் என்ன தெரியுமா?
பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியுள்ளார். அவர் உடுத்தி வரும் பட்டுப்புடவைகளின் நிறங்களுக்கு ஒவ்வொரு அர்த்தங்கள் உள்ளன.
மதுரை: கள்ளழகர் உடுத்தும் ஆடைகளின் மீது சில நம்பிக்கைகள் இருப்பதால் வைகை ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
இந்த ஆண்டு பச்சைப்பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கியுள்ளார்.
கள்ளழகர் எந்த வண்ணப் புடவை கட்டி வைகை ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லதும் கெட்டதும் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மதுரைக்கு வந்த கள்ளழகர் இந்த ஆண்டு பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கியுள்ளார். பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்துள்ளனர்.

அலங்காநல்லூரில் அலங்காரம்
16ஆம் நுாற்றாண்டு வரை, கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்பட்டு அலங்காநல்லுார் சென்று அங்கே அலங்காரம் செய்து கொண்டு தேனுார் ஆகிய ஊர்கள் வழியாக சோழவந்தான் வந்து அங்குள்ள வைகையாற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பாராம்.

சைவ, வைணவ ஒற்றுமை
சைவம், வைணவ சமயங்களை ஒன்று சேர்க்கும் விதத்தில் திருமலை நாயக்கர் இந்த விழாவை மதுரைக்கு மாற்றியமைத்தாராம். மாசி மாதத்தில் நடைபெற்ற மீனாட்சி திருக்கல்யாணத்தை சித்திரை மாதத்திற்கு மாற்றினாராம் திருமலை நாயக்கர்.

அழகர் உடுத்தும் ஆடைகள்
அழகர் உடுத்தும் ஆடைகளின் மீது சில நம்பிக்கைகள் இருப்பதால் வைகை 'ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' எனப் பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். கடந்த சில ஆண்டுகளாகவே பச்சைப் பட்டுதான் உடுத்திதான் ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர். இந்த ஆண்டும் கள்ளழகர் பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கியுள்ளார்.

அழகருக்கு பட்டாடைகள்
அழகர் உடுத்தும் ஆடைகள், அணியும் தங்க நகைகள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா, என பல வண்ணங்களில் பட்டுப்புடவைகள் இருக்கும். அழகர் எந்த வண்ணப் புடவை கட்டி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பச்சைப்பட்டு அழகர்
கோயிலின் தலைமைப் பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு புடவையை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ணப் புடவை சிக்குகிறதோ, அது கள்ளழகர் ஆற்றில் இறங்கும் தினம் அணிவிக்கப்படும். பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
Recommended Video

மஞ்சள் பட்டு
வெள்ளை மற்றும் நீலப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். அழகர் சிவப்புப் பட்டு கட்டிவந்தால் பேரழிவு ஏற்படும் என்கின்றனர். அந்த வருடம் போதிய விளைச்சலுமிருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காதாம். இந்த ஆண்டு பச்சைப்பட்டு உடுத்தி நாடு செழிக்க நல்ல மழை பெய்ய அருள்பாலித்திருக்கிறார் கள்ளழகர்.












Click it and Unblock the Notifications