திருச்சூர் பூரம் திருவிழாவிற்கு கேரளா அரசு அனுமதி - கொரோனா நிபந்தனைகளுடன் நடத்த உத்தரவு
திருச்சூர் பூரம் திருவிழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளின் அணிவகுப்பை காணவே, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து மக்கள் கேரளாவிற்கு வருகை தருகின்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகளை காண்பதே தனி அழகுதான்.
திருச்சூர்: கேரளா மாநிலத்தில் கொரோனா நிபந்தனைகளுடன் பூரம் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விழாவில் பஞ்ச வாத்தியம், மேள நிகழ்ச்சிகள் நடக்கும்போது கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும், பூரம் திருவிழா உலக பிரசித்திப் பெற்றது. மலையாளத்தில் மேடம் மாதத்தில் பூர நட்சத்திர நாளில் இந்த திருவிழா வடக்குநாதர் கோவிலில் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

திருச்சூர் பூரம் திருவிழா இரண்டு நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டாலும், அதற்கான நடவடிக்கைககள் ஒருமாதகாலத்திற்கு முன்னரே துவங்கிவிடும். பூரம் விழாவில் 30க்கும் மேற்பட்ட யானைகள் கலந்து கொள்ளும் குடை மாற்றும் நிகழ்ச்சி, செண்டை மேளம் மற்றும் பஞ்ச வாத்திய நிகழ்ச்சி, வானவேடிக்கை போன்றவற்றை கண்டுகளிக்க பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு இந்த விழா நடத்தப்படவில்லை. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், இந்தாண்டும் இந்த விழா நடத்தப்பட மாட்டாது என முதலில் கூறப்பட்டது. ஆனால், பூரம் விழாவை கண்டிப்பாக நடத்தியாக வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க கேரள தலைமை செயலாளர் ஜோயி தலைமையில் உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது. இதில், கொரோனா நிபந்தனைகளுடன் பூரம் விழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. விழாவில் பஞ்ச வாத்தியம், மேள நிகழ்ச்சிகள் நடக்கும்போது கொரோனா நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இ-டிக்கெட் மூலம் ஆட்களை அனுமதிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி திருச்சூரில் பூரம் விழா நடைபெற உள்ளது. திருச்சூர் பூரம் திருவிழாவின் முக்கிய அம்சமாக வடக்குநாதர் கோயில் வளாகத்தில் செண்டைவாத்யம் நடைபெறும். செண்டை, மத்தாளம், எடக்கா, திமிலா மற்றும் கொம்பு உள்ளிட்ட பாரம்பரிய இசைக்கருவிகள் இசைக்கப்படுவது ஆகும். பஞ்சவாத்தியம் அல்லது பஞ்சரிமேளம் அடிப்படையிலான இசை நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்றனர். வடக்குநாதர் கோயிலின் முன் இலஞ்சிதாரா மேள வாத்தியம் இசைக்கப்படுவது முக்கியமான நிகழ்வாகும். தீபாவளி பண்டிகையை மிஞ்சும் வகையில் பூரம் திருவிழாவில் வானவேடிக்கைகள் நிகழ்த்தப்படுகின்றன.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications