குலசை ஸ்ரீமுத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை விழா - பொதுமக்களுக்கு அனுமதி இல்லை
குலசேகரப்பட்டிணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை திருவிழா நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி: குலசேகரப்பட்டிணத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் ஆடிக்கொடை திருவிழா நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் மூலம் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் சேனல்கள் மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டிணம் அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா விழாவிற்கு சிறப்பு பெற்றது. சக்தி வாய்ந்த இந்த அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் ஆடிக்கொடை திருவிழா ஆடி மாதத்தில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஆடிக்கொடை திருவிழா திருக்கோவில் வளாகத்திற்குள் நடைபெற உள்ளது.
திருவிழா நிகழ்வுகள் ஆகஸ்ட் 3 ம் தேதி அன்று தீபாராதனை, 4 ம் தேதி அன்று திருக்கோவில் வளாகத்திற்குள் கும்பம் (கரகம்) புறப்படுதலும் அன்று இரவு தீச்சட்டி புறப்படுதலும் நடைபெறும். ஆகஸ்ட் 5 ஆம் தேதி அன்று முளைப்பாளிகை திருக்கோவிலில் வலம் வருதல் உள்ளிட்ட திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
பொதுமக்கள் ஆடி கொடை விழாவில் பங்கேற்க அனுமதி இல்லை என்றும் இந்நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்தின் மூலம் உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் யூ டியூப் சேனல்கள் மூலமாக ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் இந்நிகழ்ச்சிகளில் பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை. எனவே பொதுமக்கள், பக்தர்கள் திருக்கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறும், கரோனா பரவலை தடுக்க அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications