முழு சந்திர கிரகணம்..இன்று பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க..அப்புறம் 3 ஆண்டுகள் காத்திருக்கணும்
சென்னை: முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. சந்திர கிரகணம் இந்தியாவின் பல பகுதிகளில் பகுதி சந்திர கிரகணமாக பார்க்க முடியும். மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் ராகு கிரஹஸ்த சந்திர கிரகணமாக நிகழ உள்ளது. ரத்த நிலவாகவும் பல பகுதிகளில் தென்படும் முழு சந்திர கிரகணத்தை பார்க்காமல் மிஸ் செய்து விட்டால் 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம்.
சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
சூரியன், பூமி, நிலவு ஆகியவை மிகத் துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே சந்திர கிரகணம் ஏற்படும். இன்றைய தினம் ராகு உடன் சந்திரன் இணைந்திருக்கும் போது கிரகணம் நிகழ்கிறது.

சந்திர கிரகணம்
பெளர்ணமி அன்று முழு பௌர்ணமி நிகழும் நேரத்தில் சூரியனும் சந்திரனும் மிகவும் சரியாக 180 பாகை வித்தியாசத்தில் இருப்பார்கள், அதாவது சூரியன் இருந்த ராசியிலிருந்து நேர் ஏழாவது ராசியில் சந்திரன் இருப்பார். பெளர்ணமி அன்று இவ்விருவரும் ராகு அல்லது கேதுவின் பிடியில் இருக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது.
வானியல் ரீதியாக சூரியன், பூமி மற்றும் சந்திரன் ஆகியவை ஒரே நேர்கோட்டில் வரும் போது சந்திரனை பூமியின் நிழல் முழுமையாக மறைத்து விடும், இந்த நிகழ்வே சந்திர கிரகணம்.

மேஷ ராசியில் சந்திரன் ராகு கூட்டணி
சந்திர கிரகணத்தன்று சந்திரன் முழுமையாக மறைக்கப்பட்டு சந்திர கிரகணம் ஏற்பட்டால் பூரண சந்திர கிரகணம் என்றும், ஒரு பகுதி மட்டும் மறைக்கப்பட்டு கிரகணம் ஏற்பட்டால் பார்சுவ சந்திர கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது. எல்லா நேரங்களிலும் சூரியனும் சந்திரனும் ராகு அல்லது கேதுவோடு ஒரே வீட்டில் இணைந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என கூறுகிறார்கள் சில பஞ்சாங்க கணித வல்லுநர்கள். ஒரு குறிப்பிட்ட பாகை வித்தியாசத்தில் அடுத்தடுத்த வீடுகளில் நின்றாலும் கிரஹணம் நிகழும் என கூறியுள்ளனர். அதை தொடர்ந்து நாளை ஏற்படும் சந்திர கிரஹணத்தில் அனைத்து வாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கங்களின்படி சூரியன் கேது உடன் துலாம் ராசியிலும் சந்திரன் ராகு உடன் மேஷ ராசியிலும் இணைகின்றனர்.

சந்திர கிரகணம் தொடங்கும் நேரம்
சந்திரனின் கருமையான நிழல் பகுதி தொடக்கம் மதியம் 2:38
முழு சந்திர கிரகணம் தொடக்கம் மதியம் 3:45
முழு சந்திர கிரகணம் ஏற்படும் நேரம் மாலை 4:18
முழு சந்திர கிரகணம் முடியும் நேரம் மாலை 5:11
சந்திர கிரகணம் கரு நிழல் பகுதி விலகல் மாலை 6:19

உணவுகளில் துளசி, தர்ப்பைப்புல்
கிரகண நேரத்தில் ஆலய தரிசனம் கூடாது என்பதால்தான் ஆலயங்கள் அனைத்தும் மூடப்பட்டு விடுகின்றன. முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் பிற்பகல் 12 மணிக்குள் தங்களின் உணவுகளை முடித்துக்கொள்ள வேண்டும். சமைத்து வைத்த உணவுகளில் தர்ப்பை புல்லினை போட்டு வைக்க வேண்டும். துளசியை போட்டு வைக்க வேண்டும். கிரகணம் முடிந்த பின்னர் குளித்து சாமி கும்பிட்டு விட்டு சாப்பிடலாம்.

3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்
சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சிலர் அச்சம் காரணமாக கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து விடுவார்கள். இந்த முழு சந்திர கிரகணத்தை மிஸ் செய்தவர்கள் அடுத்த முழு சந்திர கிரகணத்திற்காக 3 ஆண்டுகள் காத்திருக்க வேண்டுமாம். இந்தியாவில் இருந்து அடுத்த சந்திர கிரகணம் அக்டோபர் 28, 2023 அன்று பார்க்க முடியும். அதுவும் ஒரு பகுதி சந்திர கிரகணம் ஆகும். அடுத்த முழு சந்திர கிரகணம் மார்ச் 14, 2025 அன்று நிகழும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications