சந்திர கிரகணம்..திருப்பதி, பழனி செல்லும் பக்தர்களே..இதை படிச்சிட்டு போங்க..சாமி தரிசன நேரம் மாற்றம்
சென்னை: சந்திர கிரகணம் நிகழ உள்ளதை முன்னிட்டு வரும் 8ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பழனி, திருப்பதி உள்ளிட்ட பல முக்கிய கோவில் நடை 10 மணி நேரத்திற்கு மேல் மூடப்பட உள்ளது. கோவிலுக்கு தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் கோவில் திறக்கப்படும் நேரத்தை அறிந்து வரவும் என ஆலய நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனும் சூரியனும் பூமியின் எதிரெதிர் பக்கங்களில் இருக்கும்போது முழு சந்திர கிரகணம் நிகழும். அப்போது, பூமியின் நிழலின் ஒரு பகுதி மட்டுமே சந்திரனை மறைக்கும் போது ஒரு பகுதி சந்திர கிரகணம் நிகழ்கிறது.
சந்திர கிரகணம் பவுர்ணமி நாளிலும் சூரிய கிரகணம் அமாவாசை நாளிலும் நிகழும். பொதுவாக ஆண்டுக்கு இரண்டு சந்திர கிரகணமும் இரண்டு சூரிய கிரகணமும் நிகழும். பொதுவாக இரவு நேரத்தில் நிகழும் சந்திர கிரகணமும் பகல் நேரத்தில் நிகழும் சூரிய கிரகணமும்தான் இந்தியாவில் தெரியும். கடந்த வாரம் 25ஆம் தேதி நிகழ்ந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிந்தது.

முழு சந்திர கிரகணம்
8 ஆம் தேதி நிகழ உள்ள சந்திர கிரகணம் முழு சந்திர கிரகணமாக இருந்தாலும் மாலையில் சந்திரன் உதயமாகும் நேரத்தில் பகுதி நேர சந்திர கிரகணமாக மட்டுமே தெரியும். பொதுவாக கிரகண நேரங்களில் கோவில்களில் நடை அடைக்கப்படும். சந்திர கிரகணம் இந்தியாவில் தெரிவதால் தோஷம் காரணமாக பல கோவில்களில் நடை அடைக்கப்பட உள்ளது.

பழனி
அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்நிலையில் சூரிய கிரகணம், சந்திர கிரகணம் ஆகிய நாட்களின்போது பழனி மற்றும் அதன் உப கோவில்களில் பூஜை நேரம் மாற்றப்படுவது வழக்கம். அதன்படி வருகிற 8ஆம் தேதி மாலை 5.47 மணி முதல் 6.25 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்கிறது. இதனால் அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை நடக்கிறது. பின்னர் பிற்பகல் 2.30 மணிக்கு மலைக்கோவில் மற்றும் உபகோவில்கள் அனைத்திலும் நடை சாத்தப்படும். சந்திரகிரகணம் முடிந்த பின்பு 7 மணிக்கு சம்ரோஷண பூஜை நடக்கிறது. இதைத்தொடர்ந்து கோவில் சுத்தம் செய்யப்பட்டு சாயரட்சை பூஜை, சிறப்பு தீபாராதனை நடைபெறுகிறது. மேலும் பெரியாவுடையார் கோவிலில் அன்றைய தினம் காலை 11.30 மணிக்கு அன்னாபிஷேகம், மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

பன்னாரி அம்மன் கோவில்
சந்திர கிரகண நாளில் ஈரோடு மாவட்டம் பன்னாரி மாரியம்மன் கோவிலில் மதியம் 12.30 மணி முதல் இரவு 7 மணி வரை கோவில் நடை ஆறரை மணி நேரம் மூடப்பட்டிருக்கும். எனவே அன்று கோவிலுக்கு வரும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், இரவு 7 மணி முதல் 9 மணி வரையும் அம்மனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தங்க கோவில் தரிசன நேரம்
வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோவிலில் ஐப்பசி பவுர்ணமி தினத்தன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை முழு சந்திர கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, சீனிவாச பெருமாள் கோவில் மற்றும் நாராயணி கோவில் தரிசன நேரத்தில் மாற்றம்செய்யப்பட்டுள்ளது. அதன்படி அன்று மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டு இருக்கும். மீண்டும் 9ஆம் தேதி காலை 8 மணிக்கு பக்தர்களின் தரிசனத்திற்காக கோவில் நடை திறக்கப்படும்.

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில்
திண்டிவனம்- புதுச்சேரி நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சவடி கோவிலில் சந்திர கிரகணத்தையொட்டி வருகிற 8ஆம் தேதி காலை 6.30 மணியில் இருந்து இரவு 7 மணி வரை 12.30 மணிநேரம் மூடப்படுகிறது. அதாவது அன்றைய தினம் அனைத்து சன்னதிகளும் அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு காலை 6.30 மணிக்கு நடை சாத்தப்படும். பின்னர் மாலை 7 மணிக்கு கோவில் திறக்கப்பட்டு கிரகண பரிகார பூஜைகள் மற்றும் வழக்கமான பூஜைகள் நடைபெறும். எனவே பக்தர்கள் மேலே குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications