மதுரை சித்திரை திருவிழா: கள்ளழகரை கண்டா வரச்சொல்லுங்க... மதுரைவாசிகளின் ஏக்கம்
மதுரை அழகர் மழையில் சித்திரைத் திருவிழா பக்தர்கள் பங்கேற்பு இன்றி நடைபெறுகிறது. திருமலை திருப்பதிக்கு நிகரானது இந்தத் திருக்கோயில் மதுரைக்கு அருகில் உள்ளது.
மதுரை: கள்ளழகர் அந்த ஆண்டும் மதுரைக்கு வரவில்லை... அவரை கண்டா வரச்சொல்லுங்க என்று மதுரை வாசிகள் ஏக்கத்துடன் கூறி வருகின்றனர். ஆண்டு தோறும் சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகர் தங்கக்குதிரை வாகனத்தில் வைகையில் எழுந்தருளுவார். லட்சக்கணக்கான பக்தர்கள் அழகரைக் காண வருவார்கள். கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் கள்ளழகர் மதுரைக்கு வர முடியாமல் போய்விட்டது. பக்தர்களின் மனக்குறையை போக்கும் வகையில் கள்ளழகர் கோவிலில் நடைபெறும் நிகழ்வுகள் அனைத்தையும்
www.tnhrce.gov.in என்ற இணையதளம், youtube மற்றும் பேஸ்புக் மூலமாக ஒளிபரப்ப கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
அழகர் கோயில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கள்ளழகர் கோவிலில் உற்சவம் சனிக்கிழமை தொடங்கியுள்ளது. கள்ளழகர் பெருமாள் பல்லக்கில் மேள தாளம் முழங்க வர்ணக் குடை, தீவட்டி பரிவாரங்களுடன் புறப்பாடாகி சென்று அங்குள்ள திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு பட்டர்களின் வேத மந்திரங்களுடன் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தன. முன்னதாக மூலவருக்கும் சிறப்பு பூஜைகள் நடந்த போது பத்தர்கள் யாரும் உள்ளே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வில்லை.
அரசு வழிகாட்டுதலின்படி கோவிலுக்குள் சென்றும், வெளி பிரகாரத்தில் சுவாமி புறப்பாடகி வரும் போதும் மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்தனர். கடந்த 2 நாட்களாக கோவில் வளாகத்திலேயே வழக்கமான திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இன்று காலை எதிர்சேவை நிகழ்வு, கள்ளழகர் திருக்கோலம் நடைபெறுகிறது.

தங்கக் குதிரை வாகனம்
27ஆம்தேதி காலை 8 மணிக்கு தங்கக் குதிரை வாகனத்தில் ஆண்டாள் மாலை சாற்றி கள்ளழகர் எழுந்தருள்கிறார். பின்னர் காலை 8.30 மணிக்கு தங்ககுதிரை வாகனத்தில் ஆடி வீதியில் வலம் வருகிறார். 28ஆம் தேதி காலை 7 மணிக்கு சைத்திய உபசாரம் சேவையும், காலை 10.30 மணிக்கு சேஷ வாகன புறப்பாடும் நடைபெறும். 29ஆம் தேதி காலை 10 மணிக்கு கருட சேவை, புராணம் வாசித்தல், மண்டூக மகரிஷிக்கு மோட்சம் அளித்தலும் நடைபெறும்.

ஆன்லைனில் ஒளிபரப்பு
30ஆம் தேதி காலை 10 மணிக்கு புஷ்ப பல்லக்கும், மே 1ஆம் தேதி அர்த்த மண்டபத்தில் சேவையும், 2ஆம் தேதி காலை 10 மணிக்கு உற்சவ சாந்தி, திருமஞ்சனமும் நடைபெறும். கள்ளழகர் சார்ந்த இந்த அனைத்து நிகழ்சிகளும் அருள்மிகு கள்ளழகர் திருக்கோயில் யூடியூப் சேனலில் நேரலையாக ஒளிபரப்பப்படும். பக்தர்கள் வீட்டில் இருந்தே தரிசனம் செய்யலாம்.

தண்ணீர் பீய்ச்சி அடிக்க முடியாது
திருவிழாவின் போது கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சுவதும், திரி எடுத்தலுக்கும், அர்ச்சனை, மாலை சாற்றுதலுக்கு இந்த வருடமும் அனுமதி கிடையாது. திருவிழா நிகழ்ச்சிகளை கோவில் தேரோடும் வீதிகள், கோவில் பஸ் நிலையம், தல்லாகுளம் வெங்கடாசலபதி கோவில் பகுதி, வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவில் பகுதிகளில் அகண்ட திரை மூலம் பக்தர்கள் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆன்லைன் தரிசனம்
திருமலை திருப்பதிக்கு நிகரானது இந்தத் திருக்கோயில். திருப்பதியைப் போலவே ஏழு மலைகள் சூழ அமைந்திருக்கும் அற்புதத்தலம் இது. கள்ளழகர் காண்பவரின் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் இறைவன். இரண்டாவது ஆண்டாக அழகரைக் காண முடியாமல் பக்தர்கள் தவித்து போயிருக்கின்றனர். நேரில் தரிசிக்க முடியாவிட்டாலும் ஆன்லைனில் மட்டுமாவது தரிசிக்க முடிகிறதே என்பதுதான் ஒரே ஆறுதலாக உள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications