மார்ச் மாத ராசி பலன் 2024: ராகு உடன் இணையும் சூரியன்.. 18 ஆண்டுகளுக்குப் பின் அதிரடி மாற்றம்
சென்னை: மார்ச் மாதத்தில் சூரியன் கும்பம், மீனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் புதன், சுக்கிரன், செவ்வாய் பெயர்ச்சி நடைபெறுகிறது. சூரியன் கும்ப ராசியில் உதயமாகிறார். முழு பலனையும் தரப்போகிறார் சூரிய பகவான். கும்பம், மீனம் ராசிகளில் புது கூட்டணி உருவாகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
மேஷம்: சூரியன் இம்மாதம் லாப வீட்டிலும் பின்னர் விரைய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். பணவருமானம் அதிகரிக்கும் கூட சுப விரைய செலவுகளும் வரிசை கட்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது மூலம் தேவையற்ற மருத்துவ செலவுகளை தவிர்க்கலாம். உற்றார், உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பண வரவுகள் தாராளமாக அமையும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். அசையும், அசையா சொத்துகளால் சிறு விரயம் ஏற்படும். பணம், பொருட்கள் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இந்த மாதம் கிரகங்களின் கூட்டணியில் மாற்றம் ஏற்படுவதால் பெண்களுக்கு நல்ல அமைப்பாகும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்களுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புகள் தருவார்கள். தொழில் ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் பணவரவு அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமான நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு இது நன்மை தரும் மாதம் நல்ல முறையில் படித்து தேர்வு எழுதுவார்கள்.

ரிஷபம்: சூரியன் இந்த மாதத்தில் தொழில் ஸ்தானத்திலும் பின்னர் விரைய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கிறார். சுக்கிரன் பாக்ய ஸ்தானம் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதும் அற்புதமான அமைப்பு என்பதால் பணம் பலவழிகளில் தேடி வரும். அசையும் அசையா சொத்துக்களை வாங்கும் வாய்ப்பும் அமையும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி வெற்றி கிட்டும். கொடுக்கல்- பணம் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
மிதுனம்: சூரியன் பாக்ய ஸ்தானத்தில் சனியோடு பயணம் செய்கிறார். மாத பிற்பகுதியில் பத்தாம் வீட்டிற்கு வரப்போகிறார். ராகு உடன் சூரியன் இணைந்து பயணம் செய்வதால் வேலையில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை ஏற்படும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைய தாமதநிலை ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். கொடுக்கல்- வாங்கலில் நிதானம் தேவை. பெரிய தொகைகளை பிறருக்கு கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு அடிக்கடி மேற்கொள்ளும் பயணங்களால் தேவையற்ற அலைச்சல் டென்ஷன் ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்கள் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தை தவிர்ப்பது உத்தமம்.
கடகம்: அஷ்டம ஸ்தானத்தில் கிரகங்கள் பயணம் செய்வதால் வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் மறைந்து எடுக்கும் முயற்சிகளில் வெற்றியினைப் பெற்று விடுவீர்கள். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவும் மகிழ்ச்சி அளிக்கும். பணம் கொடுக்கல்- வாங்கலில் சரளமான நிலை இருக்கும். பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். உத்தியோகத்தில் எதிர்பார்க்கும் இடமாற்றம் கிடைக்கும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவோரின் விருப்பங்களும் நிறைவேறும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை தடையின்றி பெற முடியும்.
சிம்மம்: ராசிநாதன் சூரியன் எட்டாம் வீட்டில் சனியோடு பயணம் செய்வதால் எதிலும் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப்பலன்களை பெற முடியும். கணவன்- மனைவி இடையே சிறுசிறு பிரச்சனைகள், வாக்குவாதங்கள் ஏற்படும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. திருமண வயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் அமைவதில் சற்று தாமத நிலை உண்டாகும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்துவார்கள் என்பதால் பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். கொடுக்கல்- வாங்கலில் பிறரை நம்பி எந்த வாக்குறுதிகளும் கொடுக்காமல் இருப்பது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். மாணவர்கள் முழு முயற்சியுடன் படித்தால் நல்ல மதிப்பெண்களை பெற முடியும். சுக்கிரன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் முகத்தில் பொலிவு கூடும்.
கன்னி: சூரியன் ஆறாம் வீட்டில் சனியோடு பயணம் செய்கிறார் எதிரிகள் பிரச்சினை நீங்கும். மாத பிற்பகுதியில் ராகு உடன் சூரியன் இணையப்போவதால் கணவன் மனைவி இடையே சிறுசிறு சண்டைகள் ஏற்படும். ஜென்ம ராசிக்கு 5ஆம் வீட்டில் சுக்கிரன், பயணம் செய்வதால் குடும்ப தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்துவிட முடியும். முதல் வாரத்தில் சுக்கிரன் ஆறாம் வீட்டிற்கு செல்வதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தோன்றும். கணவன்- மனைவியிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் ஒற்றுமை குறையாது. பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. விட்டு கொடுத்து நடப்பது நல்லது. திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் நிலவும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications