மார்கழி மாத ராசி பலன்: தனுசு ராசியில் சூரியன் பெயர்ச்சி.. குரு பார்வையால் புத்தாண்டில் குபேர யோகம்
சென்னை: மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குருபகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் செவ்வாய் கூட்டணி சேரும் போது குருவின் பார்வையும் கிடைப்பதால் சில ராசிக்காரர்களுக்கு குபேர யோகம் கைகூடி வரப்போகிறது.
மேஷம்: சூரியன் செவ்வாயுடன் ஒன்பதாமிடத்தில் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும். எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் தொழில் லாபம் அதிகரிக்கும். படிப்பில் கவனம் தேவை வியாபாரம் விருத்தியாகும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும். தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பாலினத்தவர்கள் விசயத்தில் கவனம் தேவை. பொன்நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். குபோர யோகம் கைகூடி வரப்போகிறது. எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். இந்த மாதம் உத்தியோகஸ்தர்களுக்கு நல்ல மாதம் வேண்டிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். சொந்த பந்தங்களின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும். பெருமாள் ஆலயத்திற்கு சென்று வணங்கலாம். விநாயகருக்கு எருக்கம் பூ மாலை சாற்றி வணங்க நன்மைகள் நடைபெறும்.

ரிஷபம்: சூரியன் செவ்வாயுடன் இணைந்து எட்டாமிடத்தில் பயணம் செய்யப்போவதால் தொழிலில் டென்சன் உண்டாகும் அப்பாவிடம் மனஸ்தாபம் உண்டாகும். அதிர்ஷ்டம் அதிகரிக்கும் நிலபுலன் விற்பனை வகையில் நன்மை உண்டாகும். 8 ஆம் தேதிக்குப் பின்னர் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதன் ராசிக்கு ஏழாம் வீட்டில் இருக்கிறார் கூட்டுத் தொழில் சிறப்படையும் வியாபாரம் விருத்தியாகும் தாய் மாமனால் நன்மை உண்டாகும். வாழ்க்கைத்துணையினால் சந்தோஷம் அதிகரிக்கும் உறவினர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும். மாத பிற்பகுதியில் கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் எதிர்பாராத பண வரவு உண்டாகும் இருப்பினும் உத்தியோகத்தில் மன உளைச்சல் இருக்கும். பிரதோஷ வழிபாட்டில் பங்கேற்று பாலபிஷேகத்திற்கு பால் வாங்கிக் கொடுக்கவும். நன்மைகள் நடைபெறும்.
மிதுனம்: சூரியன் செவ்வாயுடன் இணைந்து ஏழாமிடத்தில் பயணம் செய்யப்போவதால் அரசு முறை பயணம் உண்டாகும் அரசாங்கத்துடன் செய்துகொண்ட ஒப்பந்த தொழில் சிறப்படையும். சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் திடீர் திருப்பம் ஏற்படும். தாய் மாமனுடன் ஏற்படும் பிரச்சினையை தவிர்க்கவும். ஷேர் மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் 17ஆம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும். லாப குருவினால் பண வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை சீரடையும். சுக்கிரன் ஐந்தாமிடத்தில் பயணம் செய்வதால் பெண்களால் நன்மை அதிகரிக்கும். மார்கழி மாதத்தில் திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கப்போகிறது.
கடகம்: சூரியன் செவ்வாயுடன் இணைந்து ஆறாம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். சூரியனுடன் சில நாட்கள் புதனும் இணைந்து வக்ர நிலையில் பயணம் செய்வதால் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் சண்டை சச்சரவு உண்டாகும். உயர்கல்வியில் மேன்மை உண்டாகும். நீண்ட நாட்களாக வெளியில் பாக்கியிருந்த பணம் வசூலாகும், கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டுக்கு தேவையான ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் திங்கட்கிழமைகளில் சிவ ஆலயங்களில் சென்று வழிபட நன்மைகள் நடைபெறும்.
சிம்மம்: உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஐந்தாமிடத்தில் செவ்வாயுடன் இணைந்து பயணம் செய்யப்போவதால் அரசு வேலைக்கான போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் உறவினர் வீட்டு விஷேசங்களில் குடும்பத்தோடு கலந்து கொள்வீர்கள் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் பயணம் செய்வதால் வீடு நிலம் போன்ற வகை தொழில்களில் விருத்தி உண்டாகும் உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும். தரகு கமிஷன் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குரு பார்வையால் பண வருமானம் அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும், படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் பயணம் செய்வதால் ஆன்மீக பயணம் செல்வீர்கள். உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள்.
கன்னி: சூரியன் உங்களுடைய ஜென்ம ராசிக்கு நான்காமிடத்தில் செவ்வாயுடன் பயணம் செய்வதால் வீடு வாகன யோகம் உண்டாகும் அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும். வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். உறவினர்களுடன் நல்லுறவு நிலவும், அக்கம் பக்கத்தினரின் உதவி கிடைக்கும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பொன் நகைகளை வாங்குவீர்கள், வீடு மாறும் நிலை உண்டாகும். பருவகால நோய்கள் எட்டிப்பார்க்கும் கவனம் தேவை. உடல் நிலை பாதிப்பில் இருந்து தப்பிக்க புதன்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள் பாதிப்பு குறையும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications