For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமண வாழ்வழிக்கும் மண்டைக்காடு பகவதி அம்மன் - பொங்கல் வைத்து வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற புண்ணியஸ்தலம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் திருமணமாகாத பெண்கள் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபாடு செய்தால் விரைவில் திருமண வாழ்க்கை கிட்டும்

Google Oneindia Tamil News

மதுரை: பெண்களின் சபரிமலை என அழைக்கப்படும் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி திருவிழாவின் முக்கிய நாளான நேற்று ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இக்கோவிலில் திருமணமாகாத பெண்கள் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபாடு செய்தால் விரைவில் திருமண வாழ்க்கை கிட்டும் என்பதோடு தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், இந்த ஆண்டு மாசிக் கொடை விழாவானது கடந்த 1ஆம் தேதியன்று கொடி ஏற்றத்துடன் இனிதே தொடங்கியது. நேற்று விடுமுறை தினம் என்பதால், கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மண்டைக்காடு பகுதியில் திரளாக குவிந்தனர். பொங்கலிடும் பகுதியில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால், பெரும்பாலான பக்தர்கள் கோவிலுக்கு அருகிலுள்ள தோப்புகள் மற்றும் அருகிலுள்ள இடங்களில் கூட்டம் கூட்டமாக பொங்கலிட்டு பகவதி அம்மனை மனமுருக வழிபட்டனர். இதன் காரணமாக பொங்கல் வைக்கும் பகுதி, மண்டைக்காடு சந்திப்பு, கடற்கரை மற்றும் கோவில் பிரகார வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Masi Kodai vizha Women in Mandaikadu Bhavathi Amman Temple worship with Pongal

கேரள மாநிலத்திலுள்ள ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலைப் போல், தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற புண்ணியஸ்தலம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில். இக்கோவிலில் திருமணமாகாத பெண்கள் பொங்கல் வைத்து பகவதி அம்மனை வழிபாடு செய்தால் விரைவில் திருமண வாழ்க்கை கிட்டும் என்பதோடு தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகமாகும்.

ஆண்கள் ஒரு மண்டல காலம் விரதமிருந்து இருமுடி கட்டிக்கொண்டு சபரிமலை ஐயப்பனை கண்டு வருவது போல், அண்டை மாநிலமான கேரளாவிலிருந்து ஆயிரக்கணக்கான பெண்கள் 41 நாட்கள் கடுமையான விரதமிருந்து இருமுடி கட்டிக்கொண்டு மாசிக் கொடை நாளில், மண்டைக்காடு பகவரி அம்மன் கோவிலுக்கு வருகை தந்து பொங்கல் வைத்து வழிபாடு செய்வதால் இக்கோவிலை பெண்களின் சபரிமலை என்று பயபக்தியோடு அழைக்கின்றனர்.

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில், இந்த ஆண்டு மாசிக் கொடை விழாவானது கடந்த 1ஆம் தேதியன்று கொடி ஏற்றத்துடன் இனிதே தொடங்கி நாள்தோறும் பல்வேறு பூஜைகளும் நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன. விழாவின் முக்கிய வழிபாடான மகா பூஜை எனப்படும் வலிய படுக்கை பூஜை கடந்த வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவு நடைபெற்றது.

Masi Kodai vizha Women in Mandaikadu Bhavathi Amman Temple worship with Pongal

அதைத் தொடர்ந்து எட்டாம் நாள் திருவிழாவான மாசிக் கொடையை முன்னிட்டு, அதிகாலை 4:30 மணியளவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 5 மணியளவில் அம்மனுக்கு பஞ்சாபிஷேகமும், காலை 6:30 மணியளவில் உஷ பூஜையும், காலை 9:30 மணியளவில் அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளல் வைபவமும் நடைபெற்றன.

நேற்று விடுமுறை தினம் என்பதால், கேரளாவைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் மண்டைக்காடு பகுதியில் திரளாக குவிந்தனர். பொங்கலிடும் பகுதியில் போதுமான இடவசதி இல்லாத காரணத்தினால், பெரும்பாலான பக்தர்கள் கோவிலுக்கு அருகிலுள்ள தோப்புகள் மற்றும் அருகிலுள்ள இடங்களில் கூட்டம் கூட்டமாக பொங்கலிட்டு பகவதி அம்மனை மனமுருக வழிபட்டனர்.

இதன் காரணமாக பொங்கல் வைக்கும் பகுதி, மண்டைக்காடு சந்திப்பு, கடற்கரை மற்றும் கோவில் பிரகார வளாகம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்களின் வசதிக்காக நேற்று கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நேற்று நண்பகல் 1 மணியளவில் உச்சிக்கால பூஜை நடைபெற்றது.

Masi Kodai vizha Women in Mandaikadu Bhavathi Amman Temple worship with Pongal

கணவன் மனைவி ஒற்றுமையை அதிகரிக்கும் மாசி பௌர்ணமி கிரிவலம் - வண்டுகள் பறப்பதை பாருங்க

மாலையில் காட்டுவிளை ஆதிதிராவிடர் காலனியிலுள்ள சிவசக்தி கோவிலில் இருந்து சந்தன குட ஊர்வலமும், செம்பொன்விளை அய்யாபதியில் இருந்து யானை மீது சந்தன குட ஊர்வலமும், நெட்டாங்காடு பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து சந்தன குட ஊர்வலமும் புறப்பட்டு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலை வந்தடைந்தன.

மாலை சுமார் 6.30 மணியளவில் அம்மனுக்கு நாதஸ்வர இசையுடன் சிறப்பு சாயரட்சை தீபாராதனையும், இரவில் அத்தாழ பூஜையும், அதைத் தொடர்ந்து பகவதி அம்மன் வெள்ளிப் பல்லக்கில் எழுந்தருளல் வைபவமும் நடைபெற்றன. இவ்விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான பெரிய சக்கர தீவெட்டி பவனி இன்றிரவு சுமார் 9.30 மணிக்கு நடைபெற உள்ளது. இறுதி நாளான நாளை நள்ளிரவு ஒடுக்க பூஜையுடன் மாசிக் கொடை விழா நிறைவடைகின்றது.

English summary
Masi Kodai festival began at the Bhagavathi Amman Temple at Mandaikadu with flag hoisting on the 1st March. Since yesterday is a holiday, a large number of women from Kerala have flocked to Mandaikadu. Due to the lack of adequate space in the Pongal area, most devotees crowded in the gardens and adjoining places of the temple and worshiped Bhagavathi Amman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X