• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாசி மகம் பௌர்ணமிக்கு தன்வந்திரி பீடத்தில் யாகத் திருவிழா

By Mayura Akhilan
|

வேலூர்: மாசி மகத்தை முன்னிட்டு 26.02.2018 திங்கட் கிழமை மாலை முதல் 01.03.2018 வியாழன் மாலை வரை.
வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் யாகத்திருவிழா நடைபெற உள்ளது.

சொந்த வீடு, கை நிறைய சம்பளம், வங்கியில் சேமிப்பு, ஜாலியான வாழ்க்கை இவை எல்லாம் இருந்தால் நமக்கு சந்தோஷம்தான். ஆனால், இவற்றை விட மிகவும் முக்கியமாக ஆரோக்கியம் இருந்தால்தான் அனைத்தையும் ஆனந்தமாக அனுபவிக்க முடியும்.

Masi Magam: Yagam festival in Sri Danvantri Peedam

கஷ்டப்பட்டுக் கை நிறைய சம்பாதிக்கலாம். வங்கியில் சேமிக்கலாம். சொந்தமாக வீடு வாங்கலாம். ஆனால், இவற்றை அனுபவிக்க தேக ஆரோக்கியம் என்கிற செல்வம் முக்கியம் அல்லவா? இத்தகைய அரிய செல்வத்தை நமக்கு வழங்குபவர்தான் காக்கும் கடவுளும், நோய் தீர்க்கும் பெருமானும் ஆன அருள்மிகு தன்வந்திரி பகவான்.

இந்தியாவிலேயே ஏன், உலகத்திலேயே என்றுகூடச் சொல்லலாம். தன்வந்திரி பகவானுக்குத் தனிக் கோயில் என்றால், அது தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் வாலாஜாபேட்டை அருகே கீழ்ப்புதுப்பேட்டையில் பெற்றோருக்காக அமைந்துள்ளது. இந்த பீடத்தில், சிறப்பு ஹோமங்கள் செய்து தங்கள் வாழ்வை வளம் பெருக்குவதற்காக தினமும் நூற்றுக்கணக்கானோர் வருகின்றனர்.

திருமணத் தடையா, கல்வியில் கவனக்குறைவா, ஞாபக மறதியா, குடும்பத்தில் மகிழ்ச்சி குறைவா, பணி அமையவில்லையா, குழந்தைப் பேறு தாமதமா, வெளிநாடு வாய்ப்பு தள்ளிப் போகிறதா இவை அனைத்துக்கும் ஒரு நல்ல நிரந்தரமான தீர்வு, ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆத்மார்த்தமான ஒரு ஹோமத்தின் மூலம் கிடைக்கிறது. இவை மட்டும்தானா?

நோய் நொடி இல்லாமல் வாழவும், தீராத வியாதிகளைத் துரத்தவும் விசேஷ ஹோமங்கள் உண்டு. உபநயனம், சஷ்டியப்தப் பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற ஸாந்தி ஹோமங்களையும் இங்கே நடத்த பக்தர்கள் தேடி வருகிறார்கள்.

கடந்த 13 ஆண்டுகளாக தினசரி தன்வந்திரி ஹோமம், சுதர்சன் ஹோமம், லக்ஷ்மி ஹோமம் நடைபெற்று வருகின்ற தன்வந்திரி பீடத்தில் சிறப்பு ஹோமங்களாக 1000 சண்டி யாகம், 365 நாள் 365 யாகம், 55 நாட்கள் 135 யாகங்கள், 24 மணி நேரம் 27 யாகங்கள், 74 குண்டங்களில் 74 சிவாச்சாரியர்கள் பங்கேற்ற 74 பைரவர் ஹோமம், 108 குண்டங்களில் 108 சிவாச்சாரியர்கள் பங்கேற்ற 108 கணபதி யாகம், 468 குண்டங்களில் 468 சாதுக்கள் பங்கேற்ற 468 சித்தர்கள் யாகம், 24 மணி நேரம் நடந்த அன்ன யக்ஞம், 10 லட்சம் ஏலக்காய் ஹோமம், 1,32,000 கொழுக்கட்டை ஹோமம், 1,10,000 லட்டு ஹோமம், 15 ஆயிரம் வாழைப்பழ ஹோமம், 10 ஆயிரம் மாதுளம்பழ ஹோமம், ஒரு லட்சம் நெல்லிக்கனி ஹோமம், 2014 பூசணிக்காய் ஹோமம், 6 ஆயிரம் கிலோ மிளகாய் ஹோமம், 11 ஆயிரம் வில்வப் பழம் ஹோமம் போன்ற பல்வேறு விதமான ஹோமங்கள் வேலுர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி நடைபெற்று உள்ளது.

அந்த வரிசையில் பக்தர்கள் சகல சௌபாக்யங்கள் பெற 10,000 தடவை பாக்ய சூக்த ஜபம் செய்து 1000 ஹோமத்துடன் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கு 36 வகையான யாகங்கள் விசேஷ திரவியங்களைகொண்டு பல்வேறு தரப்பினர்கள் முன்னிலையில் நான்கு நாட்கள் சிறப்பு ஹோமங்களாக வருகிற 26.02.2018 திங்கள் கிழமை மாலை 6.00 மணி முதல் 01.03.2018 வியாழக் கிழமை இரவு 8.00 மணி வரை காலை மாலை இருவேலையும் மாசி மகம் பௌர்ணமியை முன்னிட்டு வேலூர் ஸ்ரீபுரம் ஸ்ரீவித்யா உபாசகர் பிரம்மஸ்ரீ ராமகிருஷ்ண சர்மா அவர்கள் தலைமையில் நான்கு நாட்கள் 16 வேத விற்பன்னர்கள் பங்கேற்று, யாகத் திருவிழாவாக நடைபெற உள்ளது

26.02.2018 திங்கள் கிழமை மாலை 6.00 மணியளவில் மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, சர்வ தேவதா ஆக்வாண பூஜை, கோலக்ஷ்மி பூஜை, தீப லக்ஷ்மி பூஜை, யாகசாலை பிரவேசம், மஹா சங்கல்பம், கலச பூஜை, மஹா கணபதி ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், பூர்ணாஹுதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

Masi Magam: Yagam festival in Sri Danvantri Peedam

27.02.2018 செவ்வாய் கிழமை காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, வாஸ்து ஹோமம், ஸ்ரீவித்யா ஹோமம், நவாவரண பூஜை, நவக்கிரக ஹோமம், சனி சாந்தி ஹோமம், மங்கள கௌரிஹோமம், ஸ்ரீ வாசவி ஹோமம், ஆயுஷ் ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் முதல் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை காளி யாகம், சூலினி துர்கா ஹோமம், வாஸ்து ஹோமம், மண்ய சூக்த ஹோமம், சத்ரு சம்ஹார ஹோமம், ஸ்ரீ அன்னபூரணி ஹோமம், சொர்ண பைரவர் ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் இரண்டாம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

28.02.2018 புதன் கிழமை காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், நவாவர்ண பூஜை, கார்த்தவீர்யார்ஜுனர் ஹோமம், சுதர்சன ஹோமம், தன்வந்திரி ஹோமம், லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம், ஸ்ரீ ராமர் ஹோமம், கருட ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் மூன்றாம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை லக்ஷ்மி குபேரர் ஹோமம், சுக்ர சாந்தி ஹோமம், தத்தாத்ரேயர் ஹோமம், அஷ்ட பைரவர் சஹித காலபைரவர் ஹோமம், அஷ்டதிக்பாலகர் ஹோமம், ருத்ர ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் நான்காம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

01.03.2018 வியாழக் கிழமை காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை கோபூஜை மங்கள இசை, வேத பாராயணம், மஹா கணபதி பூஜை, ஸ்ரீவித்யா ஹோமம், நவாவரண பூஜை, தக்ஷ்ணாமூர்த்தி ஹோமம், சுயம்வரகலா பார்வதி யாகம், கந்தர்வராஜ ஹோமம், சந்தான கோபால யாகம், ராகு கேது பிரீதி ஹோமம், நக்ஷத்திர ஹோமம், சரஸ்வதி ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் ஐந்தாம் கால பூர்ணாஹூதி, சதுர்வேத உபச்சாரம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல்.

Masi Magam: Yagam festival in Sri Danvantri Peedam

மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை லக்ஷ்மி ஹயக்ரீவர் ஹோமம், லக்ஷ்மி வராஹ ஹோமம், அஷ்ட லக்ஷ்மி யாகம், காயத்ரீ தேவி ஹோமம், சத்யநாராயண ஹோமம், காமதேனு ஹோமம், பாக்ய சூக்த ஹோமம் ஆறாம் காலம் மஹாபூர்ணாஹூதி சதுர்வேத உபச்சாரம், 7.00 மணிக்கு நடைபெற்று கலச புறப்பாடு, சகல தேவதா அபிஷேகம், மஹா தீபாராதனை, பிரசாதம் வழங்குதல். பக்தர்கள் அனைவரும் இந்த யாகத்தில் பங்கேற்க தன்வந்திரி குடும்பத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
36 Maha Homam will be conduct at the Sri Danvantri Arogya Peedam in Walajapet from February 26th to March 1.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more