For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாசி மகத்தில் முப்பெரும் யாகங்கள் - முனீஸ்வரர், நவகன்னி மற்றும் கிராம தேவதா வழிபாடு

தன்வந்திரி பீடத்தில் ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம் என மூன்று யாகங்கள் நடைபெற்றது.

Google Oneindia Tamil News

வேலூர்: வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வர கலாபார்வதி யாகம், தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால யாகம் என மூன்று யாகங்கள் நடைபெற்றது.

Masi Pournami day special Yagam

திருமணம் நடைபெறவும், குழந்தை பாக்யம் பெறவும், குடும்பக்ஷேமம் பெறவும், உத்யோகத்தில் நன்மைகள் பெறவும் ஸ்ரீ குருபகவானுடைய அருள் மிகவும் முக்கியம். குருபகவான் பரிபூரண அருள் வேண்டியும், கல்வியில், ஆரோக்கியத்தில், வசதி வாய்ப்புகளில், வேலை வாய்ப்பில், சொந்த வீடு வாங்குவதில், சொகுசு வாகனங்கள் வாங்குவதில், ஆன்மிக ஈடுபாட்டில், புனிதப் பயணம், சுற்றுலாப் பயணம் மற்றும் அயல்நாட்டு பயணங்கள் மனதிற்கு பிடித்த வாழ்க்கைத் துணை அமைய வேண்டியும், குழந்தைசெல்வம் வேண்டியும், ஜாதக ரீதியாக உள்ள தோஷங்கள் நீங்கவும், மகேஸ்வரனையும், ஸ்ரீ கிருஷ்ணரையும் வேண்டி கல்யாண வரத்திற்கும் பிள்ளை வரத்திற்கும் இந்த யாகத்தில் பிரார்த்தனை நடைபெற்றது.

Masi Pournami day special Yagam

வருகிற 22.02.2019 வெள்ளிக்கிழமை காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை ஷோடச திருக்கல்யாணத்திற்கான பந்தக்கால் முஹூர்த்தமும், மார்ச் மாதம் 13 முதல் 17 வரை நடைபெறும் முப்பெரும் விழாவிற்கு குலதெய்வ அருள், கிராம தேவதை அனுக்கிரகம் வேண்டி இன்று ஸ்ரீ பால் முனீஸ்வரருக்கும், நவகன்னிகளுக்கும் பொங்கலிட்டு படையலிடும் வைபவமும், கிராம தேவதா பூஜையும் நடைபெற்றது.

Masi Pournami day special Yagam

ஸ்ரீ முனீஸ்வரரின் சிறப்பு

ஆபத்தை நெருங்கவிடாமல் காக்கும் ஸ்ரீ முனீஸ்வர்ரை இந்துக்கள் முக்கிய தெய்வமாகவும், குல தெய்வமாகவும் வழிபட்டு வருகிறார். சிவனின் அம்சமான இவரை வழிபட்டால் எந்த ஆபத்தும் நம்மை நெருங்காது என்பது நம்முடைய நம்பிக்கையாகும். முனிவர்களுக்கெல்லாம் ஈஸ்வரனாக இருந்து ஞானத்தை வழங்கிய முனீஸ்வரன் உக்ர தெய்வமாகவும் காவல் தெய்வமாகவும் விளங்குகிறார். வீரர்களுக்கெல்லாம் மகா வீரனாக இருந்து எங்கள் குலத்தையே காத்து ரட்சிக்கும் முனீஸ்வரருக்கு இன்று 19.02.2019 செவ்வாய்கிழமை பௌர்ணமி நண்பகல் 12.00 மணியளவில் மஹா அபிஷேகத்துடன் பொங்கல் வைத்து படையலிட்டு வருகிற மார்ச் மாதம் 13 முதல் 17 வரை நடைபெற உள்ள 15 ஆம் ஆண்டு விழாவும், 16 திருக்கல்யாணமும், ஸ்வாமிகளின் 58 ஆவது ஜெயந்தி விழாவும், 1000 நாதஸ்வர கலைஞர்கள் பங்கேற்கும் நாதசங்கம நிகழ்ச்சியும், இதர வைபவங்களும் தடையின்றி நடைபெறவும் 22.02.2019 வெள்ளிக்கிழமை அன்று காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரை நடைபெற உள்ள பந்தக்கால் முஹூர்த்தம் சிறப்பாக நடைபெற முனீஸ்வரருக்கு பொங்கல் வழிபாடு நடைபெற உள்ளது.

Masi Pournami day special Yagam

நவகன்னி வழிபாடு

பெண்கள் நலமுடன் வாழவும், அவர்களுக்கு மாங்கல்ய பலம் கூடவும், சுப காரியங்கள் தடையில்லாமல் நடைபெறவும் நவசக்திகளின் அனுக்கிரகம் பெற்ற நவகன்னிகளுக்கு பொங்கலிடும் வழிபாடு நடைபெற உள்ளது. தொடர்புக்கு: ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

Masi Pournami day special Yagam
Masi Pournami day special Yagam
Masi Pournami day special Yagam
Masi Pournami day special Yagam

அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

English summary
Masi Pournami day special Yagam at Dhanvantri arokya peedam Maha Abhishegam at walajapet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X