Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மே மாத ராசிபலன்கள் 2019: விருச்சிக ராசிக்காரர்களே வாக்கில சனி நாக்கில் கவனம் தேவை

Subscribe to Oneindia Tamil

மதுரை: மே மாதம் உழைப்பாளர்கள் மாதம். வசந்த மாதம். கோவில்களில் கொடை விழாக்கள் அதிகம் நடைபெறும் மாதம் முருகனின் விசாக திருவிழா நடைபெறும் மாதம் மே மாதம்தான். இந்த மாதத்தில் சூரியன் தனது உச்ச வீட்டில் இருந்து உழைப்பின் வீட்டிற்குள் நுழைகிறார். கிரகங்களின் சஞ்சாரம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும் வாக்கு ஸ்தானத்தில் சனி இருப்பதால் கவனம் தேவை.

சூரியனின் சொந்த வீடு சிம்ம ராசி. கால புருஷ தத்துவப்படி பத்தாம் வீடு என்பது தொழிலைக் குறிக்கும். சூரியன் தனது உச்ச ராசியிலும், சொந்த ராசிக்கு பத்தாம் வீடாகிய தொழில் ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் காலமே மே மாதம். அரசனுக்கு உரிய கோளாகக் கருதப்படும் சூரியன் உழைப்பிற்கு உரிய வீட்டில் அமர்வதால் அரசன் முதல் சாமானியன் வரை அனைவரும் உழைக்க வேண்டிய காலமாக அமைந்துள்ளது. சாமானியனையும் உழைப்பினால் சாதிக்க வைக்கும் மே மாதம்.

நவகிரகங்களில் சூரியன், புதன், சுக்கிரன், செவ்வாய் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மே மாதத்தில் நிகழ்கிறது. சூரியன் மேஷத்தில் இருந்து 15ஆம் தேதி ரிஷபத்திற்கு மாறுகிறார். ரிஷபத்தில் உள்ள செவ்வாய் மே 7ஆம் தேதி மிதுனம் ராசியில் ராகு உடன் கூட்டணி சேருகிறார். மீனம் ராசியில் உள்ள சுக்கிரன் புதன் மேஷம் ராசியில் உச்சம் பெற்ற சூரியனுடன் கூட்டணி சேருகின்றனர். கிரகங்களின் சஞ்சாரத்தைப் பொறுத்து விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

திருமணம் நடக்கும் மாதம்

திருமணம் நடக்கும் மாதம்

சூரியன் 6ஆம் வீட்டில் இருக்கிறார். வேலை வாய்ப்பு கிடைக்கும். புதிய வேலைகள் கிடைக்கும். அரசு வேலைகள் கை கூடி வரும் சுக்கிரன் 5ஆம் வீட்டில் உச்சமாக இருப்பதால் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். கணவன் மனைவி உறவில் ஊடலுடன் கூடல் அதிகரிக்கும். வீட்டில் கெட்டிமேளச்சத்தம் கேட்கும் நேரம் வந்துவிட்டது.

கவனம் தேவை

கவனம் தேவை

ராசி அதிபதி செவ்வாய் 7ஆம் வீட்டில் 7ஆம் தேதி வரை இக்கிறார் அற்புதம். செவ்வாய் 7ஆம் தேதிக்கு மேல் ராகு உடன் 8ஆம் வீட்டில் இணைவதால் வண்டி வாகனத்தில் செல்லும் போது கவனம் தேவை. உடல் நலத்தில் அக்கறை தேவை காரணம் எட்டாம் வீட்டில் ராகு உடன் செவ்வாய் இணைகிறார்.

சனி கேது கூட்டணி

சனி கேது கூட்டணி

சனி, கேது இரண்டாம் வீட்டில் இருப்பதால் சண்டை சச்சரவுகள் அதிகமாகவே இருக்கும். பிரச்சினைகள் வீட்டில் கும்மியடிக்கும். கேது இரண்டாம் வீட்டில் அமரும் நேரத்தில் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகள் ஏற்படும். ஒன்பது மாதங்கள் சனி படுத்தி எடுக்கும். பேசும் வார்த்தையில் கவனம் தேவை.

தொழிலில் லாபம்

தொழிலில் லாபம்

தொழில் வியாபாரம் லாபத்துடன் வெற்றிகரமாக நடைபெறும். உடல்பயிற்சி, சரியான உணவை எடுத்துக்கொண்டால் உடல் நலக்கோளாறுகளை தவிர்க்கலாம். யாரையும் நம்பி எந்த ஜாமீன் கையெழுத்தும் போட வேண்டாம். புதன் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் கல்வியில் நல்ல நிலை ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் நன்றாக உள்ளது.

குருவினால் நன்மை

குருவினால் நன்மை

வருமானம் அதிகம் வந்தாலும் செலவு அதிகமாக இருந்தது. குரு வக்ரமடைந்து உங்க ராசியில் அமர்வது சிறப்பான அம்சம். விருச்சிக ராசிக்காரர்களுக்கு விரையம் அதிகம் நடந்திருக்கும். பணவரவு வந்தாலும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்தது. இனி அப்படி இருக்காது. குரு வக்ரமடைந்து இருக்கிறார். குரு உங்களுக்கு நல்ல நிலையை தருவார். வலிகள் சகிப்புத்தன்மையை தாங்கக் கூடிய சக்தியை தரும் கிரகம். அறிவின் தெளிவு கிடைக்கும். என்ன தவறு செய்தோம் என்பதை உணர்வீர்கள்.

முருகனை வணங்க நன்மைகள் நடக்கும்

முருகனை வணங்க நன்மைகள் நடக்கும்

சுக்கிரன் உச்சம் பெற்றிருப்பதால் மனைவி உறவுகள் மூலம் உதவி கிடைக்கும். மே 15ஆம் தேதிக்கு மேல் ஏழாம் வீட்டில் இருந்து சூரியன் பார்வை விருச்சிகத்தின் மீது விழுகிறது. கோள்களின் பார்வை சரியில்லை . நல்லவை நடக்க பொறுமை அவசியம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மனதில் இருந்த கஷ்டங்கள் நீங்கி நன்மைகள் நடைபெறும். முருகனையும், நரசிம்மரையும் வணங்க நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+