மீனத்தில் நீசமான புதன்... மூளை, நரம்பு பிரச்சினை ஏன் வருது தெரியுமா?
எல்லாம் புதன் மயம் என்று சொல்லும் அளவிற்கு புதன் கிரகம் ஒருவரின் புத்திக்கும், மூளை தண்டுவடத்திற்கும் காரணகர்த்தாவாகிறார்.
Recommended Video

சென்னை: மூளை,நரம்பு, தண்டுவடப் பிரச்சினைக்கு கரணம் ஒருவரின் ஜாதகத்தில் புதன் பாதிக்கப்பட்டிருப்பதே.
ஒருவரின் ஜாதகத்தில் புதன் வக்கிரம், அஸ்தங்கம், வக்ராஸ்தமனம் பெற்றிருந்தால் நரம்பு பிரச்சினை இருக்கும்.
மனிதனின் நரம்பு மண்டலமே உடல் செய்யும் அனைத்து செயல்களுக்கும் அடிப்படையாக உள்ளது. மூச்சு விடுவது முதல் தசைகளின் அசைவுகளை நரம்பு மண்டலம் கட்டுப்படுத்துகிறது. நல்லா பேசிட்டு இருந்தாரு திடீர்னு இப்படி கை கால் வராம விழுந்துட்டாரே என்று பேசிக்கொள்வார்கள். இதற்குக் காரணம் புதன் பாதிப்புதான். மனிதர்களின் நரம்பு மண்டலத்தை கட்டுப்படுத்துவதில் புதன் முக்கிய பங்கு வகிக்கிறார்.
நரம்பு பிரச்சினை, பேசுவதில் பிரச்சினை உள்ளவர்கள் மகாவிஷ்ணுவை வணங்கி துளசி தீர்த்தம் சாப்பிடலாம்.
செம்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி வைத்து தினமும் குடிப்பது, காலை துளசி இலை மெல்லுவதல் அந்த பாதிப்பை குறைக்கலாம். புதன் பாதிக்கப்பட்டால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் எனவும், அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

புதன் நீசம்
புதன் பகவான் இப்போது மீன ராசியில் உச்சம் பெற்ற சுக்கிரனுடன் இணைந்து நீசமான நிலையில் அமர்ந்துள்ளார். இந்த காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைகளின் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சத்தில் இருந்தாலும், புதன் நீசமாக இருப்பார். எனினும் சிலருக்கு நீசபங்க ராஜயோகமாகவும் மாறி விடும் வாய்ப்பு உள்ளது.

நரம்புகளின் நாயகன்
புதன்தான் மூளை மற்றும் நரம்பு மண்டலங்களை ஆள்பவர். ஆண்களுக்கு ஆண்மை குறைவையும், பெண்களுக்கு பெண்மை குறைவையும் தரக்கூடிய அலி கிரகம். புதன் ஒருவரின் ஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் பட்சத்தில் அவருக்கு ஏதாவது ஒரு காலகட்டத்தில் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் சில கோளாறுகள் ஏற்படும்.

உடல் நடுக்கம்
ஜாதகத்தில் புதன் நீசமாகவும், 6, 8, 12 ஆகிய கிரகங்களுடன் சேர்ந்தாலும் ஒற்றைத் தலைவலி, கை, கால் வலிப்பு, நரம்புத் தளர்ச்சி, முடக்குவாதம், வலிப்பு, அலித்தன்மை, மறதி, நடுக்கம் போன்றவை ஏற்படும்.
பாவ கிரகங்களின் சேர்க்கை, அல்லது சனி, செவ்வாய் கிரகங்களின் பார்வை பெற்றால் தலையில் இரத்த ஒட்டம் பாதிக்கும். மூளையில் கட்டி, அடிக்கடி தலை வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தூக்க குறைபாடு
புதனுக்கு வக்ரம், அஸ்தங்கம், நீச்சம் போன்ற பலம் குறையும் கால கட்டங்கள் உண்டு. இந்தக் கால கட்டத்தில் பிறந்த குழந்தைகள் புதனின் ஆற்றலை குறைவாக பெற்றிருப்பார்கள். சிலருக்கு இளம் வயதிலேயே நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை ஏற்படும். தலைச்சுற்றல், தலைவலி வரும், கை, கால்கள் மரத்துப்போகும் இவர்களின் ஜாதகத்தை பார்த்தால் புதன் பலம் குன்றியிருப்பார்.

கை கால் வலி
இன்றைக்கு இளம் வயதிலேயே பெண்கள் கைகால் குடைச்சல், இடுப்பு வலி, குதிகால் வலி என்று அவஸ்தைக்கு உள்ளாகிறார்கள். இதற்குக் காரணம் புதன் பாதிக்கப்பட்டிருப்பதே இந்த கோளாறுகளுக்குக் காரணம். ஜாதகத்தில் புதன் வலுவாக இருக்கும் பெண்களுக்கு இது போன்ற தொந்தரவுகள் ஏதும் ஏற்படாது.

புதன் சனி கூட்டணி
ஜாதகத்தில் புதன் செவ்வாய் கூட்டணி அமைத்து 6,8, 12ஆம் இடங்களில் இருந்தால் ஒய்வில்லாத பணி, யோசனையால் தலைவலி, எரிச்சல், கோபம் ஏற்படும். புதன் மற்றும் சனி கூட்டணி அமைத்திருந்தாலும் மனக்கவலை, தலை வலியால் சோர்வு, தூக்கமின்மை, நரம்பு தளர்ச்சி ஏற்படும். தலை சுற்றல், மயக்கம், கிறுகிறுப்பு வந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம். மருத்துவரை உடனே அணுகவேண்டும்.

பச்சை வெண்டைக்காய்
புதனுக்குரிய பச்சைப்பயறு தினமும் சிறிதளவு ஊறவைத்து பச்சையாக சாப்பிடுதல், பச்சை வெண்டைக்காய், பச்சையாக முட்டைகோஸ் சிறிதளவு, உப்பு நீரில் ஊறவைத்த முழு நெல்லிக்காய் ஒன்று என தினமும் சாப்பிட்டு வந்தாலே நரம்பு பலகீனமாக இருப்பவர்கள் வலிமை அடைவார்கள். புதன்கிழமைகளில் பச்சை நிற ஆடைகளை அணியலாம்.

மகாவிஷ்ணுவை வணங்கலாம்
இது பொதுவான கருத்துதான். ஜாதகத்தில் நல்ல தசாபுத்தி நடந்தால் கிரக அமைப்பை பொறுத்து பாதிப்பு ஏற்படாது. புத பகவானுக்கு அதி தேவதை ஸ்ரீமஹாவிஷ்ணு ஆவார். புதன் கிழமைகளில் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். ஜன்ம நட்சத்திர தினத்தில் திருவெண்காடு சென்று புத பகவானை வழிபடுவதும், புதன் வலுவடைய மதுரை மீனாட்சி சொக்கநாதரையும், திருப்பதி ஏழுமலையானையும் வழிபடலாம். செம்பு பாத்திரத்தில் துளசி போட்டு அருந்த பாதிப்பு குறையும்.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications