For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்னையர் தினம்... அம்மாவிற்கு உடல் நலம் எப்படி இருக்கும்? - உங்க ஜாதகத்தை பார்த்து கூறலாம்

4ஆம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்து, சந்திரனும் சுபர்களின் சம்மந்தம் பெற்றால் அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய தாயார் அமைவார் எனக் கூறலாம்.

Google Oneindia Tamil News

சென்னை: மாத்ரு தேவோ பவ: என்றும் மாதா,பிதா,குரு, தெய்வம் என்றும் அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்றும் போற்றும் நமது மரபில் தாய்க்கு எப்போதுமே முதலிடம்தான் வழங்கப்பட்டிருக்கிறது. நாம் இந்த பூமிக்கு வரவும் உயிர் வாழவும் காரணமாகத் திகழும் அந்த கண்கண்ட தெய்வத்தை வாழ்த்தி வணங்கி, பணிவிடைகள் செய்து மகிழ்விக்க ஒருநாள் போதுமா? அன்னையர் தினம் சில தினங்களில் கொண்டாடப்பட உள்ள நிலையில் அன்னையர் தினம் பற்றியும் ஜோதிடத்தில் அன்னைக்கும் அதற்கு காரகமாக உள்ள கிரகங்ளைப்பற்றியும் பார்க்கலாம்.

அன்னையர் தினம் இந்த ஆண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை மே 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினத்தை நமக்கு வசதியான ஞாயிற்றுக்கிழமையில் கொண்டாடி மகிழ்ந்தாலும் ஜோதிடத்தில் தாயை குறிக்கும் கிரகம் இன்றைய நாயகர் சந்திர பகவானே ஆகும். நாலாம் வீடு தாய்ஸ்தானம் என போற்றப்படுகிறது. காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகமும் அதன் அதிபதியான சந்திரனும் தாயைபற்றி கூறும் கிரக அமைப்பாகும்.

இந்த வயசுலயா? 8ஆம் வகுப்பிலேயே 5 மாத கர்ப்பம்! பெற்றோர் முன் சிறுமி செய்த செயல்! மிரண்டு போன மதுரை.!இந்த வயசுலயா? 8ஆம் வகுப்பிலேயே 5 மாத கர்ப்பம்! பெற்றோர் முன் சிறுமி செய்த செயல்! மிரண்டு போன மதுரை.!

ஜோதிடத்தில் கால புருஷ நான்காம் பாவமான கடகமும், ஜென்ன ஜாதக நான்காம் பாவமும் தாயை மற்றும் மட்டுமல்லாமல் வீடு வாகன யோகத்தினையும் தெரிவிக்கிறது, இதனை சிறிது சிந்தித்து பார்த்தால் தாயின் கருவறையே நமக்கு முதல் வீடாக அமைந்ததை குறிப்பிடுவதை உணரலாம். மேலும் கருவில் இருக்கும்போதும் குழந்தையாய் பிறந்த பிறகும் நம்மை பெற்ற தாயே நம்மை பல இடங்களுக்கும் சுமந்து சென்றிருப்பார், அதாவது நமக்கு முதல் வாகனமாகவும் இருந்திருப்பார், இதிலிருந்து நான்காம் பாவத்தினை தாய், வீடு மற்றும் வாகனத்திற்கான பாவமாக ஒதுக்கியதின் சிறப்பை உணரமுடியும்.

சொந்த வீடு

சொந்த வீடு

ஒருவர் நிரந்தரமாகக் குடியிருக்கும் வீட்டைக் குறிக்கிறது. ஒருவருக்கு சொந்த வீடு இருக்குமா? அல்லது இருக்காதா? என்பதும் இந்த வீட்டை வைத்துக் கூறிவிடலாம். வீடுமட்டுமல்ல; ஸ்திர சொத்துக்களான நில, புலன்கள் ஒருவருக்குக் கிட்டுமா? அல்லது கிட்டாதா? என்பதையும் இந்த வீட்டை வைத்துக் கூறி விடலாம். செவ்வாய் 4ஆம் வீட்டில் இருந்தாலோ அல்லது 4 ஆம் வீட்டைப் பார்த்தாலோ அல்லது 4ஆம் வீட்டின் அதிபதியுடன் சேர்ந்து இருந்தாலோ அல்லது பார்த்தாலோ ஒருவருக்கு ஸ்திர சொத்துக்கள் வாங்க யோகம் உண்டு என்று கூறலாம்.

சொந்த வாகன யோகம்

சொந்த வாகன யோகம்

4ஆம் வீட்டுடன் சுக்கிரன் சம்மந்தப் பட்டால் அவர்களுக்கு வாகனம் கிட்டும். வாகனம் என்றால் அது நான்கு சக்கரங்களுள்ள காராக இருக்கலாம்; அல்லது மோட்டார் சைக்கிள், ஸ்கூட்டர் போன்ற இரண்டு சக்கர வாகனங்களாகவும் இருக்கலாம், எப்படி இருப்பினும் அவர்களுக்கு வாகன யோகம் உண்டு. 4ஆம் வீடென்பது பட்டப் படிப்பு வரையிலான படிப்பைக் குறிக்கிறது. அதற்கு மேலுள்ள படிப்பை 9ஆம் வீடு குறிக்கிறது. சூரியனும், புதனும் ஒரு வீட்டில் சேர்ந்து இருப்பார்களேயாகில் அவர் படிப்பில் கெட்டிக்காரராக இருப்பார் எனக்கொள்ளலாம்.

கலைகளின் அதிபதி

கலைகளின் அதிபதி

சூரியனுடன் எந்த கிரகம் சேர்ந்து இருந்தாலும் அந்த கிரகத்தின் காரகத்துவம் மிகச்சிறந்து விளங்கும். உதாரணமாக புதன் கல்விக்குக் காரகம் வகிப்பவர். அவர் சூரியனுடன் சேர்ந்து இருந்தால் அவர் கல்வியில் சிறந்து விளங்குவார். சுக்கிரனும், சூரியனும் சேர்ந்து இருந்தால் அவர் கலைகளில் திறமை உள்ளவராக இருப்பார்.
சிலர் சூரியனுடன் ஏதாவது கிரகம் சேர்ந்து இருந்தால் அந்த கிரகம் சூரியனால் எரிக்கப் பட்டுவிடும் எனக் கூறுவர். அது தவறான கருத்து. அந்தக் கிரகத்தின் காரகத்துவம் சூரியனால் அதிகரிக்கப்படும் என்பதுதான் உண்மை.

சந்திரனும் அம்மாவும்

சந்திரனும் அம்மாவும்

காளிதாசன் "உத்திர காலாம்ருதத்தில்" கால்நடை கல், நிலங்களிலிருந்து கிடைக்கும் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள், எண்ணை வித்துக்கள் ஆகியவற்றையும் 4-ம் வீட்டை வைத்துத்தான் கூறவேண்டுமெனக் கூறுகிறார்.
4ஆம் வீடு தாயாரையும் குறிக்கிறது. சந்திரனும் தாயாருக்குக் காரகம் வகிப்பவர்தான். 4ஆம் வீடு தாயாரையும் குறிக்கிறது. சந்திரனும் தாயாருக்குக் காரகம் வகிப்பவா்தான்.

அம்மாவின் உடல்நிலை

அம்மாவின் உடல்நிலை


4ஆம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்து, சந்திரனும் சுபர்களின் சம்மந்தம் பெற்றால் அந்த ஜாதகருக்கு நீண்ட ஆயுளுடன் கூடிய தாயார் அமைவார் எனக் கூறலாம். தாயாரை குறிக்கும் மாத்ரு காரகன் சந்திரன் ஒருவரின் பிறந்த ஜாதகத்தில்ஆட்சி, உச்சம், நட்பு என்ற வகையில் வலுவாக இருக்க வேண்டும். சந்திரன் பகை வீட்டிலோ அல்லது பாவிகளுடனோ 6,8,12 ஆமதிபதிகளுடனோ தொடர்பில் இருக்கக்கூடாது. நீசமடைந்திருக்கக்கூடாது. அப்படி நீசமடைந்தாலும் நீசம் பங்கமடைந்திருக்க வேண்டியது அவசியம்.

சந்திரன் கேது சேர்க்கை

சந்திரன் கேது சேர்க்கை

பெண்கள் ஜாதகத்தில் சந்திரனும் ஜனன ஜாதக நான்காம் அதிபதியும் கேதுவோடு எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல் இருக்க வேண்டும். கேதுவோடு சேர்க்கை பெற்று நின்றால் நம்மை பெற்றவருடன் உள்ள உறவு நிலை பாதிப்பதோடு தாய்மை பேறு பெருவதையும் தடுக்கிறது, பெண்கள் ஜாதகத்தில் சந்திரன் கேது சேர்க்கை பெற்றவர்களுக்கு அடிக்கடி அபார்ஷன் ஆகும் நிலையை காணலாம்.

மாத்ரு தோஷம் நீங்க பரிகாரம்

மாத்ரு தோஷம் நீங்க பரிகாரம்

அம்மாவின் மனம் குளிரும் வகையில் செயல்களை செய்ய வேண்டும். அம்மாவின் மனதை வேதனையடையச் செய்தால் மாத்ரு தோஷம் உண்டாகும். எனவே பெற்ற தாய் உயிருடன் இருக்கும்வரை சந்தோஷமாக இருக்க செய்வது. இறந்தபின் பித்ரு கடன்களை சரிவர செய்வது அவசியம். சந்திரஸ்தலமான திங்களுர், திருப்பதி, குணசீலம் போன்ற கோயில்களுக்கு சென்று வணங்கிவருவது. திருச்சி மலைகோட்டை தாயுமானஸ்வாமியை முக்கிய தினங்களிலும் சந்திரன் ஆதிக்கம் பெற்ற தினங்களிலும் தரிசித்து வணங்குவதால் தோஷம் நீங்கும்.

English summary
Mother’s Day is always celebrated on the second Sunday in May. It is a special day to honor all mothers and motherhood. This year May 8 mothers day celebrated in world wide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X