• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆங்கில புத்தாண்டு ராசி பலன்கள்- 2017: தனுசு

By Mayura Akilan
|

சென்னை: தனுசு ராசி நேயர்களே! ஆண்டின் ஆரம்பத்திலேயே சனிபகவான் உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது சுய முயற்சி மூலம் பண வரவை அதிகமாகக் கொடுக்கும்.

இந்த ஆண்டு துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசிக்கு பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் சொந்தமாக செய்யும் தொழில் சிறப்பாக இருக்கும்.

New year Rasi palan 2017 - Dhanushu

செப்டம்பர் மாதம் குரு உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் மனதில் நினைப்பவை எல்லாம் எளிதில் நிறைவேறும்.

இவ்வாண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் ராகு கேது பெயர்ச்சி சுபஅசுப பலன்களை கலந்து கொடுக்கும். ராகு எட்டாமிடத்திற்கு வருவது சிறப்பு அல்ல கேது இரண்டாமிடத்திற்கு வருவது நற்பலனைத் தரும்.

ஜனவரி:

ஆண்டின் துவக்கத்தில் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கும் சூரியன் தலைமைப் பதவியைத் தருவார். இம்மாதம் 14ம் தேதி இரண்டாமிடத்திற்கு சூரியன் வருகிறார் அப்பா மூலம் பண வரவு உண்டாகும் செவ்வாய் இம்மாதம் 20ம் தேதி நான்காம் இடத்திற்கு வருகிறார் புதிதாக நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். புதன் இம்மாதம் முழுவதும் உங்கள் ஜென்ம ராசியில் இருப்பது சமயோசிதமாக செயல்பட்டு எல்லாவற்றிலும் வெற்றி பெறுவீர்கள். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருப்பது சொந்தமாக செய்யும் தொழிலில் மேன்மையைக் கொடுக்கும் சுக்கிரன் மூன்றாமிடத்திலிருப்பது வெளியூர் பயணத்தைக் கொடுக்கும் இம்மாதம் 27ம் தேதி நான்காமிடத்திற்கு மாறுகிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள். சனி வருட ஆரம்பத்தில் பன்னிரெண்டாமிடத்தில் இருந்தாலும் இம்மாதம் 26ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருவது உடல் உழைப்பை அதிகப்படுத்தும் ராகு ஒன்பதாமிடத்தில் இருப்பது வெளிநாடு செல்லும் யோகத்தைக் கொடுக்கும் கேது மூன்றாமிடத்திலிருப்பது அடிக்கடி பயணம் செய்யும் நிலையைத் தரும்.

பிப்ரவரி:

சூரியன் இம்மாதம் 13ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருகிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் உண்டாகும். புதன் இம்மாதம்03ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருவது வாக்கு வன்மை அதிகரிக்கும் 22ம் தேதி மூன்றாமிடத்திற்கு வருவது சுப மங்கல தகவல் வரும்.

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி கிடையாது கடந்த மாத பலன்களையே இம்மாதமும் தொடர்ந்து கொடுப்பார்கள்.

மார்ச்:

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி நான்காமிடத்திற்கு வருகிறார் வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். செவ்வாய் 02ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குல தெய்வ கோயிலுக்கு செல்வீர்கள் புதன் 11ம் தேதி நான்காமிடத்திற்கு வருவது சில்லறை வியாபாரத்தில் லாபத்தைத் தரும் 27ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும். குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஏப்ரல்:

சூரியன் இந்த மாதம் 14ம் தேதி ஐந்தாம் இடத்திற்கு வருகிறார் பூர்வீக சொத்து கிடைக்கும் செவ்வாய் இந்த மாதம் 13ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உடன் பிறப்புகளால் தொல்லை உண்டாகும். புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது இம்மாதம் பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

மே:

சூரியன் இந்த மாதம் 15ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் உயர் அதிகாரிகளால் தொல்லை உண்டாகும் செவ்வாய் இந்த மாதம் 27ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு வியாபாரம் விருத்தியாகும். சுக்கிரன் இந்த மாதம் 27ம் தேதி ஐந்தாமிடத்திற்கு வருகிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள். இந்த மாதம் புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூன்:

இந்த மாதம் சூரியன் 15ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் அடிக்கடி வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும். புதன் இந்த மாதம் 03ம் தேதி ஆறாம் இடத்திற்கு வருகிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகளை தவிர்க்கவும் 18ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரம் விருத்தியாகும். சுக்கிரன் இம்மாதம் 29ம் தேதி ஆறாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் தொல்லை உண்டாகும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஜூலை:

சூரியன் இந்த மாதம் 17ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் மன உளைச்சல் உண்டாகும் செவ்வாய் 11ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் நெருப்பினால் காயம் உண்டாகலாம் கவனம் தேவை. புதன் இந்த மாதம் 03ம் தேதி எட்டாம் இடத்திற்கு வருகிறார் தாய் மாமனுடன் மனஸ்தாபம் உண்டாகும் 21ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் தொழில் வியாபாரம் சம்பந்த்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் சுக்கிரன் 26ம் தேதி ஏழாமிடத்திற்கு வருகிறார் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். இந்த மாதம் செவ்வாய், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

ஆகஸ்ட்:

சூரியன் 17ம் தேதி உங்கள் ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் அப்பாவின் தொழில் சிறப்படையும் செவ்வாய் 27ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் பரம்பரை சொத்துகளில் பங்கு கிடைக்கும். சுக்கிரன் 21ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் பெண்களால் மனக் கஷ்டம் உண்டாகும் ராகு இம்மாதம் 18ம் தேதி எட்டாமிடத்திற்கு வருகிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை. கேது 18ம் தேதி இரண்டாமிடத்திற்கு வருகிறார் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது சிறப்பு.

இந்த மாதம் புதன், குரு, சனி, பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

செப்டம்பர்:

சூரியன் 17ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் பரம்பரையாக செய்து வந்த தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் செவ்வாய் 13ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் விளையாட்டு வீரர்களுக்கு புகழ் கிடைக்கும் புதன் 27ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தரகு கமிஷன் வியாபாரம் மிகவும் முன்னேற்றம் அடையும். குரு 12ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். சுக்கிரன் 15ம் தேதி ஒன்பதாமிடத்திற்கு வருகிறார் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். இந்த மாதம் சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

அக்டோபர்:

சூரியன் 18ம் தேதி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் தொழில் லாபம் அதிகரிக்கும் செவ்வாய் 30ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் விளையாட்டு வீரர்களுக்கு பண வரவு அதிகரிக்கும் புதன் 30ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும். சுக்கிரன் 15ம் தேதி பத்தாமிடத்திற்கு வருகிறார் தொழிலில் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும்.

இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

நவம்பர்:

சூரியன் 17ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் அரசு நிறுவனங்களில் முதலீடுகள் அதிகரிக்கும் புதன் 02ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் வியாபாரத்திற்க்காக வெளியூர் பயணம் செல்லும் நிலை உண்டாகும் 24ம் தேதி உங்கள் ஜென்ம ராசுக்கு வருகிறார் புத்திகூர்மை அதிகரிக்கும் சுக்கிரன் 03ம் தேதி பதினொன்றாமிடத்திற்கு வருகிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் 26ம் தேதி பன்னிரெண்டாமிடத்திற்கு வருகிறார் பொன்னகைகள் வாங்குவீர்கள்.

இந்த மாதம் குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

டிசம்பர்:

சூரியன் 16ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் பதவி உயர்வு உண்டாகும் சுக்கிரன் 20ம் தேதி உங்கள் ஜென்ம ராசிக்கு வருகிறார் முக வசீகரம் அதிகரிக்கும்.

இந்த மாதம் செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது பெயர்ச்சி இல்லை கடந்த மாதம் கொடுத்த பலன்களையே தொடர்ந்து இந்த மாதமும் கொடுப்பார்கள்.

 
 
 
English summary
Here is the New year Rasi Palan for 2017 horoscope of Dhanushu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
X