சென்னைக்கு புயல்... வெள்ளம் பாதிப்பு வருமா- பஞ்சாங்கம் சொல்வதென்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil
  வடகிழக்கு பருவமழை | உதவி எண்கள் | செம்பரம்பாக்கம் ஏரி -வீடியோ

  சென்னை: சென்னையை புயலும் வெள்ளமும் தாக்கும் என்று சமூக வலைத்தளங்களில் பீதி கிளப்பி வருகின்றனர். அப்படி எல்லாம் எதுவுமில்லை வதந்தி பரப்ப வேண்டாம் என்று வானிலை ஆய்வாளர்கள் ஆறுதல் செய்தி தெரிவிக்கின்றனர்.

  கடந்த 2015 ஆம்ஆண்டு மழை பற்றியும், 2016ஆம் ஆண்டு வர்தா புயல் பற்றியும் பஞ்சாங்கத்தில் கணித்திருந்தது பலித்தது. இந்த ஆண்டு ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் மழை புயல் பற்றி எதுவும் கூறவில்லை.

  அதே நேரத்தில் மார்கழி மாதத்தில் புயல், பலத்த மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் புயல் மழை சென்னையை தாக்குமோ என்று அச்சம் எழுந்துள்ளது.

  துல்லியமான கணிப்பு

  துல்லியமான கணிப்பு

  பண்டைய காலத்தில் நவீன வானியல் ஆய்வுக்கருவிகள் இல்லாத சூழ்நிலையில், முனிவர்கள் நவ கிரகங்களின் இயக்கத்தை துல்லியமாக கணித்தனர். தங்களது கணிப்புகளை சுலோகங்களாக (பாடல்களாக) எழுதியும் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் ஆண்டுதோறும் தமிழ் ஆண்டு பிறப்பை அடிப்படையாக வைத்து பஞ்சாங்கம் கணிக்கப்படுகிறது. இந்த பஞ்சாங்கங்களின் உதவியுடன் ஜாதகம் கணிப்பது, எதிர்கால பலன்களைச்சொல்வது போன்றவற்றை ஜோதிடர்கள் செய்கின்றனர்.

  இருவகை பஞ்சாங்கம்

  இருவகை பஞ்சாங்கம்

  பஞ்சாங்கம் இருவகைப்படும். திருக்கணித பஞ்சாங்கம், வாக்கியப்பஞ்சாங்கம். இந்த இரண்டு பஞ்சாங்கங்களின் கணிப்புகளுக்கு இடையே 6 மணி 48 நிமிடம் வித்தியாசம் இருக்கும். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு முனிவர்கள் எழுதிய சுலோகங்கள் அடிப்படையில் எழுதப்படுவது ‘வாக்கிய பஞ்சாங்கம்' எனப்படும். சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக்கொண்டு எழுதப்படுவது ‘திருக்கணித பஞ்சாங்கம்' ஆகும்.

  மழை வெள்ளம் கணிப்பு

  மழை வெள்ளம் கணிப்பு

  கடந்த 2015ஆம் ஆண்டு பருவமழையைப் பற்றி பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது பலித்தது. அதே போல 2016ஆம் ஆண்டு அரசியல் தலைவி ஒருவரின் மரணம், வர்தா புயல் பற்றி கணித்தது பலித்தது.

  காற்றழுத்த தாழ்வுநிலை

  காற்றழுத்த தாழ்வுநிலை

  வடகிழக்குப் பருவமழை காலங்களில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி மேற்கு நோக்கி நகர்ந்து அது மழையைத் தருவதாக இருக்கும். அதே போல மேற்கு பகுதியில் காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகி அதுவும் போதுமான அளவுக்கு மழையைத் தரும்.

  மூழ்கிய வெள்ளம்

  மூழ்கிய வெள்ளம்

  கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்ததால்தான் கனமழை பெய்தது. நவம்பர் பெய்த மழையின் காரணமாகத்தான் நீர் நிலைகள் நிரம்பியிருந்தன. பின்னர் டிசம்பர் மாதமும் மழை பெய்ததால்தான், ஏற்கெனவே நிரம்பியிருந்த நீர்நிலைகள் மீண்டும் பெய்த மழைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் சென்னையில் வெள்ளம் சூழ்ந்தது.

  தண்ணீர் பஞ்சம்

  தண்ணீர் பஞ்சம்

  அதே நேரத்தில் 2016ஆம் ஆண்டு சரியான அளவில் வடகிழக்குப் பருவமழை பெய்யவில்லை. வர்தா புயலால் மரங்கள் முறிந்து விழுந்தனவே தவிர ஏரிகளின் நீர்மட்டம் உயரவில்லை. கோடையில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது. இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 30 முதல்தான் தீவிரமடைந்துள்ளது.

  வெள்ளம் வர வாய்ப்பு இல்லை

  வெள்ளம் வர வாய்ப்பு இல்லை

  இந்த ஆண்டு நீர் நிலைகள் எல்லாம் மழை நீரை சேமிக்கும் அளவுக்கு காலியாக உள்ளன. பல குளங்களை அரசியல் கட்சியினர் தூர்வாறியுள்ளதால் எனவே கடந்த 2015ஆம் ஆண்டைப்போல பாதிப்புகள் இருக்காது என்றே கூறப்படுகிறது.

  புயல் வந்தாலும் பாதிப்பில்லை

  புயல் வந்தாலும் பாதிப்பில்லை

  சென்னையில் டிசம்பர் மாதம் புயல் ஏற்பட்டு சேதாரம் ஏற்படும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது. பஞ்சாங்கம் கணித்தபடி புயல் தாக்கினாலும் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றே தெரிகிறது. சென்னைவாசிகளே அஞ்சவேண்டாம், மழையை தைரியமாக எதிர்கொள்ளலாம் என்கின்றனர் ஜோதிடர்கள்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Chennai Rains and cyclone Predicted In Tamil Panchangam 2017.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற