Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2025இல் பண மழையில் நீச்சல் அடிக்கப் போகும் 6 நட்சத்திரங்கள் எது தெரியுமா?.. இனி எல்லாமே வெற்றிதான்

Subscribe to Oneindia Tamil

2025 புத்தாண்டு பலன்: 2024 ஆம் ஆண்டு முடிந்து 2025 புத்தாண்டு தொடங்கப் போகிறது. அந்த வகையில், புத்தாண்டில் எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம், பண வரவு, பொருளாதார மேம்பாடு உள்ளிட்டவற்றை பெறப் போகிறார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க...

2025 புத்தாண்டு பிறக்க சரியாக இன்னும் 30 நாட்கள் மட்டுமே உள்ளன. இந்தப் புத்தாண்டில் கல்வி, தொழில், வியாபாரம், அலுவலக வேலைகளில் முன்னேற்றம் ஏற்படாதா என எதிர்பார்ப்புடன் காத்திருப்பீர்கள். எல்லோருடைய வாழ்விலுமே பல்வேறு ஏற்றங்கள், இறக்கங்கள், சந்தோஷம், துக்கம் என கலவையான சம்பவங்களைத்தான் சந்தித்திருப்பீர்கள்.

puthandu palan

நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கும், என்ன விதமான சாதகங்கள், பாதகங்கள் உண்டாகும் என்பதை ஜோதிடம் கணித்துக் கூறுகிறது. கிரகங்கள் இடப்பெயர்ச்சி ஆகும்போது 12 ராசிகளிலும் 27 நட்சத்திரங்களிலும் பல்வேறு விதமான தாக்கங்கள் ஏற்படும். அந்த தாக்கங்கள் நற்பலன்கள் மற்றும் அசுப பலன்களை அளிக்கும்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு கிரகங்கள் அதிபதியாக இருக்கும். கிரகங்கள் இடப்பெயர்ச்சியாகும்போது நட்சத்திரங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் 6 நட்சத்திரங்கள் தங்களது வாழ்க்கையில் நல்ல செழிப்பான வளர்ச்சி, பொருளாதார மேம்பாடு என பண மழையில் திளைக்கப் போகிறார்கள். அந்த 6 நட்சத்திரக்காரர்கள் யார் யார் என தெரிந்து கொள்ளலாம் வாங்க..

ரோகிணி: வரும் 2025 புத்தாண்டு பல்வேறு நற்பலன்களை ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கப் போகிறது. இந்த ஆண்டு மிகுந்த அதிர்ஷ்டம் நிறைந்த ஆண்டாக உங்களுக்கு அமையும். வியாபரம் மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். லாபம் தொடர்ந்து அதிகரிக்கும். அனைத்து கடன் பிரச்னைகளும் விலகும். முதலீடு செய்வது குறித்து முடிவெடுப்பீர்கள். 2025 ஆம் ஆண்டில் அனைத்துப் பிரச்னைகளும் நீங்கி செல்வம் பெருகும்.

திருவோணம்: வரும் புத்தாண்டு நல்ல பல பலன்களைப் பெறும் ஆண்டாக திருவோண நட்சத்திரகாரர்களுக்கு அமையும். பொருளாதார பிரச்னைகள் சீராகும். புதிய முதலீடுகளைத் தொடங்குவீர்கள். பொருளாதாரம் நிலைத்தன்மை பெறும். புத்திசாலித்தனமாக அனைத்து விஷயங்களையும் அணுகுவீர்கள். அதிர்ஷ்டம் கொட்டும் ஆண்டாக உங்களுக்கு இருக்கும்.

ஆயில்யம்: எவ்வளவு உழைத்தாலும் அதற்கான பலன் எதுவும் இல்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த ஆண்டு முழுமையான பலன்களைத் தரும் ஆண்டாக அமையும். எதிர்பாராத விஷயங்கள் அத்தனையும் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றிக் கொடி நாட்டுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு பொருளாதாரம் மேம்படும். லாபம் பெருகும்.

அஸ்வினி: 2025 ஆம் ஆண்டில் அனைத்து விதமான செல்வங்களையும் அஸ்வினி ராசிக்காரர்கள் பெறப் போகிறீர்கள். பல்வேறு வகையிலான சிறப்பான பலன்களைப் பெறுவீர்கள். கடின உழைப்பு மற்றும் உங்கள் மன உறுதி உங்களுக்கு பல்வேறு விஷயங்களில் வெற்றி பெறச் செய்யும். எதிர்பாராத விதமான பண வரவுகள் உண்டாகும். வியாபாரம், தொழிலில் அதிர்ஷ்டம் உண்டாகும். மொத்தத்தில் உங்களுக்கு இந்த ஆண்டு ஜாக்பாட்தான்.

மிருகசீரிஷம்: 2025 ஆம் ஆண்டு மிருகசீரிஷ நட்சத்திரக்காரர்களுக்கு அருமையான ஆண்டாக இருக்கும். வேலை, தொழில், வியாபாரம், கல்வி என தொட்டதில் எல்லாம் வெற்றி காண்பீர்கள். அனைத்து விதமான செல்வங்களையும் அள்ளித் தரும் ஆண்டாக அமையும். உங்களுடைய கடின உழைப்பு மற்றும் முயற்சிகளுக்கான நற்பலன்கள் கிடைக்கும். இதுவரை நீங்கள் பட்ட துன்பங்கள் அனைத்தில் இருந்து விடுபட்டு அருமையான வாழ்வை தொடங்கப் போகிறீர்கள்.

பூசம்: செழிப்பான ஆண்டாக 2025 ஆம் ஆண்டு பூச நட்சத்தினருக்கு இருக்கப் போகிறது. பணத்தைப் பற்றிய கவலைகள் அனைத்தும் தூள் தூளாகப் பறக்கும். பொருளாதாரம் மேம்படும். பண வரவு அதிகரிக்கும். தாங்கள் மட்டும் வாழ்வில் முன்னேற்றம் காணாமல் தங்களை சுற்றியுள்ள அனைவரும் முன்னேறும் வகையில் உறுதுணையாக இருப்பீர்கள். வியாபாரம், தொழிலில் லாபம் உண்டாகும். நல்ல முன்னேற்றத்தைக் காணும் ஆண்டாக இந்த ஆண்டு உங்களுக்கு அமையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+