ராகு கேது பெயர்ச்சி 2019-20: கும்பம் ராசிக்காரர்களுக்கு பொற்காலம் பிறந்து விட்டது
ஐந்தாம் வீட்டில் ராகுவும், லாப வீடான 11வது இடத்தில் கேதுவும் அமர்வதால் சந்தோஷங்கள் அதிகரிக்கும் பணவரவு பல பக்கமிருந்தும் வரும்.
சென்னை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். கும்பம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் ராகு, 11ஆம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் தடைபட்ட திருமணம் கை கூடி வரும் பணவரவு பலவகையிலும் கிடைக்கும். சாதனைகள் புரிந்து சமூகத்தில் மிகப்பெரிய மதிப்பை பெறுவீர்கள்.
ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி மகரம் ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
[ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் ]

பணவரவு அதிகரிக்கும்
சர்ப்ப கிரகங்களான ராகு கேது சஞ்சாரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு நன்மையை தரும் வகையில் அமைந்துள்ளது. மனதில் இருந்து வந்த கவலைகள் தீரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு கிடைக்கும். பொருளாதாரத்தில் மேன்மையையும் சிறப்பையும் அடைவீர்கள். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கவுரவப்பதவி தேடி வரும்.

வெற்றிகள் தேடி வரும்
ஐந்தாமிடம் என்பது புத்திரபாக்கியம்,தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் உல்லாசம் கேளிக்கை அனைத்தும் 5 இடத்தின் காரகத்துவங்கள். இந்த இடத்தில் ராகு பகவான் அமர்ந்திருப்பதால் பிள்ளைகளால் சிறு சிறு சஞ்சலங்கள் வந்து செல்லும். உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. அடிக்கடி ஆன்மீக பயணம் செல்வீர்கள். எதிர்பாராத அளவில் வெற்றிகள் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடைகள் விலகும்.

பதவி உயர்வு தேடி வரும்
செய்யும் தொழிலை விரிவு படுத்துவீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும், மன சஞ்சலத்துடன் இருந்தவர்களுக்கு மன மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கி கொடுக்கும். 11ஆம் இடம் என்பது லாப ஸ்தானம், இந்த இடத்தில் கேது பகவான் அமர்வதால் அலுவலகத்தில் பதவி உயர்வுடன் சம்பள உயர்வும் கிடைக்கும்.

சந்தோஷம் அதிகரிக்கும்
கேது 11ஆம் அமர்ந்துள்ளதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் செய்யும் முயற்சிகள் வெற்றி பெறும். இதுவரை தடைபட்ட காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இது வரை திருமணம் ஆகி புத்திரபாக்கியம் தடைப்பட்ட தம்பதியினருக்கு புத்திரபாக்கியமும் கிடைக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும் இந்த ராகு கேது பெயர்ச்சி தோஷம் நீங்கி சந்தோஷத்தை அதிகரிக்கச் செய்யும் நிம்மதியை தரும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications