Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி 2019-20: மகரம் ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் வந்திருச்சு

மகரம் ராசிக்காரர்களே ஆறாம் வீட்டில் ராகு, 12ஆம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் நோய்கள் தீரும் போட்டி பொறாமைகள் பொடிப்பொடியாகும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். மகரம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் ராகு, 12ஆம் வீட்டில் கேது அமர்ந்திருப்பதால் நோய்கள் தீரும் போட்டி பொறாமைகள் பொடிப்பொடியாகும். ராகு கேது பெயர்ச்சி ராஜயோகத்தை கொடுத்துள்ளது. செல்வாக்கும் சொல்வாக்கும் உயரும் காலகட்டமாகும்.

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி மகரம் ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

[ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் ]

பதவி உயர்வு கைகூடி வரும்

பதவி உயர்வு கைகூடி வரும்

இந்த ராகு பெயர்ச்சியால் புதிய தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும்.வெளிநாட்டு தொடர்புடைய உத்யோகம் கிட்டும். பதவி உயர்வு பெற்று வருமானம் கூடும் வீடு மனை வாங்கும் யோகம் வரும். திருமணம் நீண்ட நாள் கனவான புத்திரசம்பத்து கிடைக்கும்.

எதிரிகள் தொல்லை தீரும்

எதிரிகள் தொல்லை தீரும்

6ஆம் பாவத்தில் ராகு அமர்ந்துள்ளதால் நினைத்தது நிறைவேறும் காலம் வந்து விட்டது. உறவினர்களின் பாசமும் நேசமும் அதிகரிக்கும். எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு அமர்ந்துள்ளதால் கடன் அடைப்படும் தீராத நோய் திரும். போட்டி பொறாமை பொடி பொடியாகும். முடியாத காரியங்களை முடித்து காட்டுவீர்கள். எதிரிகள் உங்களைக் கண்டு விலகி ஓடுவார்கள். புதிய ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும்.

யோக காலம் வந்து விட்டது.

யோக காலம் வந்து விட்டது.

ஆறில் ராகு இருப்பது அஷ்ட லட்சுமி யோகத்தை தரக்கூடியது. இதுநாள் வரை இருந்த துன்பங்கள் துயரங்கள் நீங்கும். கடன் பிரச்சினையில் இருந்தும் நோய்களில் இருந்தும் நிவாரணம் பெறுவீர்கள். தம்பதியரிடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். வியாபராத்தில் இருந்த தடைகள் முன்னேற்றங்கள் நீங்கும். பிள்ளைகள் வழியில் இருந்த செலவுகள் நீங்கும். மன உளைச்சல் நீங்கும்.

 புது வீடு யோகம் அமையும்

புது வீடு யோகம் அமையும்

கேது பகவான் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளதால் உலக ஞானத்தை அறிந்து கொள்வீர்கள். உங்களின் ஆரோக்கியம் அதிகரிக்கும். கோவில்களுக்கு பயணம் செய்வீர்கள். ஆன்மீக பயணம் அதிகரிக்கும். புது முயற்சிகள் கை கூடும்.வரவு எட்டணா செலவு பத்தணா நிலை மாறி சேமிப்புகள் உயரும்.சுப தேவைகளுக்கு கடன் பட நேரிடும். நிண்ட நாள் கடன்களும் அடையும். வண்டி வாகன மாற்றமும் வீடு மாற்றமும் சொந்த வீடு குடி போகும் சந்தர்ப்பங்கள் உருவாகும்.

பரிகாரம் என்ன

பரிகாரம் என்ன

அம்மாவின் உடல் நலனில் முன்னேற்றத்தை தரும். புது வீடு, உயர்பதவி யோகம் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் யோகத்தை கொடுக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியையும் ஏற்றத்தையும் கொடுக்கும். மகரம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி ராஜயோகத்தை கொடுத்து செல்வாக்கு சொத்து சுகத்தை அதிகரிக்கும். திருப்பதி, காளஹஸ்தி சென்று தரிசனம் செய்து வர மென்மேலும் உயர்வு அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+