Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி 2019-20: மீனம் ராசிக்காரர்களுக்கு யோக காலம் தேடி வந்து விட்டது

மீனம் ராசிக்காரர்களே ராகு கேது பெயர்ச்சியினால் உங்களுக்கு மாற்றமும், இடமாற்றமும் நிகழப்போகிறது. யோக பலனை அளிக்கப்போகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றரை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியினால் மீனம் ராசிக்காரர்களுக்கு கனவுகள் கைகூடி வரும் காலம் வந்து விட்டது. எண்ணங்கள் நிறைவேறும். ஆன்மீக சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்கல்வி யோகம் தேடி வரும். சிலருக்கு இடமாற்றமும் முன்னேற்றமும் நிகழப்போகிறது.

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி மீனம் ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

[ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் ]

அம்மாவின் உடல் நலம்

அம்மாவின் உடல் நலம்

உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் ராகுவும் 10ஆம் வீட்டில் கேதுவும் அமர்ந்திருக்கின்றனர். 4ஆம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்கு ராகு வருகிறார். சனியின் பார்வையை பெறுகிறார். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். அம்மாவின் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மருத்துவ செலவுகள் வரும். தாய்வழி உறவினர்களுக்கு இழப்பும் ஏற்படும். பத்தாம் இடத்தில் கேது அமர்வதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 வீடு கட்டும் யோகம்

வீடு கட்டும் யோகம்

பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். வீடு கட்டவேண்டும் என்கிற நீண்ட நாள் கனவுகள் நனவாகும். கடன்கள் அடைபடும். கடந்தகால பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும்.

 ஆன்மீக பயணம்

ஆன்மீக பயணம்

இந்த ராகு கேது பெயர்ச்சியினால் நல்ல வேலை வாய்ப்பு அமையும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். அவப்பெயர் நீங்கும். மூத்தவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். புதிய வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா பயணங்கள் அதிகரிக்கும்.

 தொழிலில் இடமாற்றம்

தொழிலில் இடமாற்றம்

பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். தொழிலில் இடமாற்றம் ஏற்படும். பெண்களுக்கு உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும். தொழிலில் இடமாற்றம் உத்யோக உயர்வை கொடுக்கும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். பூர்வீக இடத்தை விட்டு விட்டு சிலருக்கு தொழில் ரீதியாக இடமாற்றம் வரலாம். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பாராத திருப்பத்தை தரும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+