For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ராகு கேது பெயர்ச்சி 2019-20 : தனுசு ராசிக்காரர்கள் தலை நிமிரும் நேரம் வந்தாச்சு

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி யோகத்தையும் பொருளாதார வரவையும் தரப்போகிறது. திறமைகள் பளிச்சிடும். உற்சாகமாக வலம் வருவீர்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    Rahu ketu Peyarchi 2019 Tamil | Thanusu | ராகு கேது பெயர்ச்சி 2019 தனுஷ் ராசி- Oneindia Tamil

    சென்னை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளனர். திருக்கணிதப்படி மார்ச் 6ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு மன மலர்ச்சியையும், பொருளாதார வரவையும் தரப்பேகிறார்.

    ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

    நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

    இந்த ராகு கேது பெயர்ச்சி தனுசு ராசிக்கும் கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

    [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷம் , ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் ]

    குடும்ப வாழ்க்கையில் கவனம்

    குடும்ப வாழ்க்கையில் கவனம்

    இது வரை 2 ம் இடத்தில் இருக்கும் கேதுவும் 8ஆம் இடத்தில் ராகு இருந்த நிலைமாறி ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். ஏற்கனவே இருந்த இடம் நல்ல இடம் தான். உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை. வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாழ்வுமனப்பான்மை, குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள். பாதியிலேயே நின்றுபோன பல வேலைகளை இனி முழு மூச்சுடன் முடிப்பீர்கள்.

    கடன் கொடுக்க வேண்டாம்

    கடன் கொடுக்க வேண்டாம்

    பணம் விசயங்களில் கவனம் தேவை. அண்ணன் தம்பியா இருந்தாலும் பணம் விசயத்தில் கவனம் தேவை. நமக்கு ரொம்ப வேண்டியவர்தானே என்று மற்றவர்களுக்காக ஜாமீன், கேரண்டர் படிவங்களில் கையெழுத்து போட வேண்டாம். கடன் வாங்கி கொடுக்க வேண்டாம். கொடுத்த பணம் திரும்ப வராமல் போய்விடும்.

    குடும்ப வாழ்க்கை

    குடும்ப வாழ்க்கை

    குலதெய்வத்துக்குச் செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை சிறப்பாக முடிப்பீர்கள். அரசாங்கக் காரியங்களில் இருந்து வந்த தடுமாற்றங்கள் விலகும். பிள்ளைகளின் வருங்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். ஊருக்கு ராஜாவாக இருந்தாலும் குடும்ப வாழ்க்கை கொஞ்சம் கசக்கதான் செய்யும். தேவை அறிந்து நோக்கம் அறிந்த மனைவி மக்கள் உங்க ராசிக்கு அமையாது என்பது ஜோதிட நூல்களின் கருத்து. பிள்ளைகள், உயர்கல்வியில் அதிக மதிப்பெண் எடுத்து வெற்றி பெறுவார்கள்.

    வேலையில் முன்னேற்றம்

    வேலையில் முன்னேற்றம்

    ராசியில் கேது அமர்வதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும். வருமானம் திருப்தி தரும். கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடியில் மூழ்கி உழைப்பு சம்பாத்தியம் அனைத்தையும் அசலுக்கு மேல் வட்டி கட்டி சோற்றுக்கே கடனை வாங்கி நொந்து போனவர்களுக்கு புதிய நட்பு கூட்டு தொழில் ஏதாவது உதவி கிடைத்து தலை நிமிரலாம்.

    போராட்டம் தீரும்

    போராட்டம் தீரும்

    உடல் நலத்தில் கவனம் தேவை. வெளி உணவுகளைத் தவிர்த்து விடுங்கள் சில நேரங்களில் வருமானம் அதிகரித்தாலும் சேமிக்க முடியாமல் திணறுவீர்கள். திடீர்ப் பயணங்கள் அடிக்கடி நிகழும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஜென்ம சனியால் இது வரை போராட்டம் ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் நல்ல செய்திகள் தேடி வரும் பொருளாதார நெருக்கடி தீரும்.

    English summary
    rahu ketu peyarchi 2019-2020,Rahu And Ketu peyarchi impact, Rahu Ketu Transit, ராகு கேது பெயர்ச்சி 2019, ராகு கேது பெயர்ச்சி பலன்கள், ராகு கேது பரிகாரங்கள்
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X