ராகு கேது பெயர்ச்சி 2019-20: விருச்சிக ராசிக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தரப்போகிறது. எட்டில் ராகுவும் இரண்டில் கேதுவும் அமர்வதால் உதவிகள் அதிகரிக்கும்.
சென்னை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளனர். திருக்கணிதப்படி மார்ச் 6ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு மாற்றத்தையும், முன்னேற்றத்தையும், பணவருமானத்தையும் தரப்போகிறது.
ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசிக்கும் கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
[ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷம் , ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் ]

சிரமம் விலகும்
செவ்வாயை ஆட்சி நாதனாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே... இதுநாள் வரை கலக்கத்தில் இருந்த உங்களுக்கு ஓளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். பாத சனி படுத்தி எடுத்தாலும் இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெருமை புகழையும் தருவார். இதுநாள் வரை 3ஆம் இடத்தில் இருந்த கேது இப்பொழுது 2ம் இடத்திற்கும்,9ல் இருந்த ராகு 8ம் வீட்டிற்கும் வருகிறார்கள். ராகு கேதுவினால் இதுவரையிலும் பலவிதங்களிலும் சிரமப்பட்ட நீங்கள், இனி ஓரளவு நிம்மதி அடைவீர்கள். சிலரின் ஆலோசனையைக் கேட்டு தவறான பாதையில் சென்று பலவிதங்களிலும் சிக்கித் தவித்தீர்களே, இனி சரியான பாதையில் பயணிப்பீர்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

சுபகாரியம் நடைபெறும்
ராகு சூது கிரகம். எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். எதிர்பாராத வகையில் திடீர் செலவுகளும் வந்து சேரும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம்.

யோசித்து முடிவெடுங்கள்
தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான முதலீடுகளை தவிர்க்கப்பாருங்கள். யாருக்கும் பணம் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடு செய்வது நல்லது. ராகு நிழல் கிரகம் என்பதால் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். அலுவலகத்தில் சலுகைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கூடும். சிலருக்கு திறமைக்கு ஏற்ற வேலையும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.

மதிப்பு மரியாதை கூடும்
இதுநாள் வரை தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்த கேது பகவான் வாக்கு, தன ஸ்தானத்தில் அமர்வதால் உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் சிலரை தேடி வரும். பணவரவுக்கு ஏற்ப விரைய செலவுகளும் தேடி வரும். தூக்க குறைபாடு அதனால் மன உளைச்சல் ஏற்படும்.
சிலர் வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாடி வீடு கட்டும் யோகம் வரும். சொல்லும் செயலும் வெற்றியைத் தேடித் தரும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் நன்மைகளே அதிகம் நடக்கும்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications