Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: ரிஷபம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Rahu ketu Peyarchi 2019 Tamil | Rishabam | ராகு கேது பெயர்ச்சி 2019 ரிஷபம் ராசி- Oneindia Tamil

    சென்னை: ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 இன்றைய தினம் ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி மார்ச் 6ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

    ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

    Rahu Ketu Peyarchi Rasipalangal 2019 Rishapam Rasi

    நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

    இந்த ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் ராசிக்கும் கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

    [ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷம் , ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் ]

    குடும்ப ராகு அஷ்டம கேது

    அழகுணர்ச்சியும் அன்பு உணர்வும் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே... மூன்றாம் வீட்டில் உள்ள ராகு 2ம் இடத்திற்கும், ஒன்பதாம் வீட்டில் உள்ள கேது 8ம் இடத்திற்கு கேதுவும் வருகிறார்கள். ஏற்கனவே ராகு கேது இருந்த இடமும் யோகமான இடம் தான். 2ஆம் இடம் என்பது செல்வம், குடும்பம்,பணம் கையிறுப்பு, அசையும் சொத்துக்கள், கண்கள்,வாக்கு, நாணயம் இவைகளை குறிக்கும் பாவமாகும். இதில் ராகு வருவதால் ஆரம்பத்தில் சில கஷ்டங்கள் சங்கடங்கள் வந்தாலும் அதையும் தாண்டி உங்களுக்கு தேவைகேற்ப தனவரவு, நண்பர்கள் உதவி கிடைக்கும்.

    பேச்சில் கவனம் தேவை

    வாக்கு ஸ்தானத்தில் இருப்பதால், பேச்சினால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். சமயோசிதமாகச் சிந்தித்துப் பேசவேண்டியது அவசியம். நீங்கள் நல்லதைச் சொல்லப் போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளும் சூழல் ஏற்படும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடவேண்டாம். எதிர்பாராதச் செலவுகளும் ஏற்படக்கூடும். குடும்பத்தில் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்து போனாலும், மகிழ்ச்சிக்குக் குறையிருக்காது. தடைப்பட்டு வந்த சுபகாரியங்கள் சிறப்பான முறையில் நடைபெறும்.

    நிதானம் அவசியம்

    பூர்விக சொத்து மற்றும் வீடு மனைகளால் பிரச்சனை வரலாம். எதிலும் நிதானமாக பேசியும் அமைதியாகவும் செயல்படுவது நல்லது. அரசு மற்றும் வெளிநாட்டு வேலைகளுக்கு காத்து இருந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கை கூடிவரும். வீடு பூமி வாகனம் சம்பந்தபட்ட வகையில் சுப விரையம் ஏற்படும். அன்னிய இனத்தவர்களால் அனுகூலமும் ஆதாயம் உண்டு.

    திருமணம் கைகூடும்

    எதிர்பாராத அதிர்ஷ்டமும் ஆதாயம் வந்தாலும் யாரோ பட்ட கடனுக்கு நீங்கள் பொறுப்பேற்று கடனை அடைக்கும் நிலையும் வரலாம்.

    அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வந்த உங்களுக்கு இதுநாள் வரை தடைப்பட்ட காரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனி சுபமாக முடியும். கேது 8ல் இருப்பதால் தொட்டது துலங்கும்.

    புத்துணர்ச்சி கிடைக்கும்

    பெண்கள், இதுநாள்வரை சோம்பலாக இருந்தீர்கள். இனி சோம்பல் நீங்கி சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். விலையுயர்ந்த பொருள்களை மற்றவர்களுக்குக் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பத்திரமாக பார்த்துக்கொள்வது அவசியம். கொடுக்கல் -வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படவும். தேவையற்ற வம்பு வழக்குகள், பூர்வீக சொத்துக்களால் அனுகூலமற்ற நிலைகள் தோன்றும். பெரிய மனிதர்களின் ஆதரவுகளால் எதையும் சமாளிக்க முடியும்.

    குதூகலமான பெயர்ச்சி

    கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து சென்றால் பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். இது வரை யாரோ நமக்கு செய்வினை வைத்து விட்டார்களோ என்று பயந்து போன உங்களுக்கு கேது பகவான் போட்டி பொறாமை எதிரி எல்லாவற்றையும் அழிப்பார். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி குடும்பத்தில் குதூகலத்தையும், அதிக வருமானத்தையும் தருவார். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கைக்கு விளக்கு போட மேலும் நன்மைகள் நடக்கும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+