ராகு கேது பெயர்ச்சி 2019: ஜென்ம ராகு மிதுன ராசிக்கு என்ன செய்யப்போகிறார் தெரியுமா?
Recommended Video

சென்னை: ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளனர். திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மார்ச் 6ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி மிதுனம் ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த ராகு கேது பெயர்ச்சி மிதுன ராசிக்கும் கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
[ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷம் , ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் ]

செல்வம் புகழ் உயரும்
ராகுபகவான் இது வரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிலும் கேது பகவான் எட்டாவது வீட்டிலும் சஞ்சரித்தனர். இப்பொழுது ஜென்ம ராசியில் வரும் ராகுவிற்கு சனியின் பார்வையும்,கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடமாகும்.

கெட்டிமேளச்சத்தம் கேட்கும்
நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். ராகுவை சனி பார்ப்பதால் தேவையில்லாத விரைய செலவை கொடுக்கும். சிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்

உயர்கல்வி யோகம்
உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். உங்களை சிலர் அவமதித்து பேசினாலும் அதற்கு சரியான பதிலடி கொடுப்பீர்கள். உங்களின் களத்திர ஸ்தானத்தை ராகு பார்வையிடுவதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும்.உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு கைகூடி வரும். வெளி உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். நேரம் கடந்து சாப்பிடும் வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்.

சனி கேது கூட்டணி
சனியோடு கேது 7லும் இருப்பதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். கணவன், மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள் அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.

பரிகாரம் என்ன
தொழில் ரகசியங்களை யாரிடமும் வெளியிடவேண்டாம். உத்தி யோகத்தில் பதவி உயரும். மேலதிகாரியை பகைத்துக்கொள்ள வேண்டாம்.
ராகு கொடுத்தால் கேது கெடுப்பார் அதன் அடிப்படையில் அவர்களின் பெயர்ச்சிக்கு 3மாதத்திற்கு முன்னே அவர்களின் ஆட்டத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டனர். இனி எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுங்கள். ராகு, கேதுப் பெயர்ச்சி, கவலைகளிலிருந்து உங்களை விடுவித்து முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும். திருவோண நாளில் விரதம் இருந்து பெருமாளை தரிசனம் செய்ய நன்மைகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications