ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷம் ராசிக்கு பலன்கள் பரிகாரங்கள்
பாம்பு கிரகங்களான ராகு கேது வாக்கியப்பஞ்சாங்கப்படி இன்று இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரகங்களின் இடப் பெயர்ச்சியால் மிகப்பெரிய மாற்றங்கள் சிலருக்கு ஏற்படும். மேஷம் ராசிக்காரர்களுக்கு பலன்களையும் பரி
Recommended Video

சென்னை: ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். இப்போது கடக ராசியில் ராகுவும், மகர ராசியில் கேதுவும் அமர்ந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி 2019 இன்றைய தினம் ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைகின்றனர். திருக்கணிதப்படி மார்ச் 6ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் ராசிக்கும் கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் ராசிக்கும் கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.
[ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019: மேஷம் , ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம் , கன்னி, துலாம் , விருச்சிகம் , தனுசு , மகரம் , கும்பம் , மீனம் ]
மேஷம்:
வீர பராக்கிரமமும் விவேகமும் கொண்ட மேஷ ராசிக்காரர்களே... இந்த ராகு கேது பெயர்ச்சியால் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நிகழப்போகிறது.
இது நாள் வரை உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் இருந்த ராகு 3ம் இடத்திலும் 10ம் இடத்தில் இருந்த கேது 9ம் இடத்திற்கும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார்.
"ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும். காரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம்" என்ற ஜோதிட பாடல் படி ராகு இப்பொழுது யோகத்தை வழங்க போகிறார்.
கடந்த ஓன்றறை ஆண்டுகளாக வரன் தேடியும் அமையாத திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். செய்யும் தொழிலிலோ பார்க்கிற வேலையிலோ திருப்தி இல்லாத நிலைமாறி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். வீடு கட்டும் யோகம் அமையும் வண்டி வாகனம் வாங்குவீர்கள்.

ராகு பெயர்ச்சி
புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். உங்களை இது நாள் வரைக்கும் ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள்.செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும். அதனால் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும்.
குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் உடலிலும் உற்சாகம் கூடும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி கிடைக்கும்.
மாணவர்கள்
மாணவர்களுக்கு இது அருமையான கால கட்டம். தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிடைக்கும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.
கேது பெயர்ச்சி
மனிதர்களுக்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது பத்தாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் உங்களுடைய பிரச்சனைகளுக்காக கோயில் பூஜை பரிகாரம் செய்தும் நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கும்.
பெண்களுக்கு லாபம்
பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ஆம் பாவம், அந்த 9ஆம் இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் உற்றார் உறவினர் பகை மறந்து சந்தோசமாக இணையலாம். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். அடகில் இருந்த நகைகளை மீட்கும் நேரம் வந்து விட்டது.
பரிகாரம்: ராகு காலத்தில் துர்க்கை வழிபாடு அவசியம். விநாயகரை வழிபட நன்மைகள் நடைபெறும். அதிர்ஷ்டகரமான கால கட்டம் இதுவாகும். வெற்றிநடை போடுங்கள்.












Click it and Unblock the Notifications