ராகு கேது பெயர்ச்சி 2023: கோடிகளை கொட்டித்தரப்போகும் ராகு.. கேதுவால் ஜாக்பாட் யாருக்கு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விடா முயற்சியும் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கக் கூடிய துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி நிம்மதி சந்தோஷத்தை தரப்போகிறது. மறைவு ஸ்தானங்களுக்கு போகும் ராகு கேதுவினால் நாக தோஷம் நீங்குகிறது. விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு
திடீர் ஜாக்பாட் போல எதிர்பார்க்காத இடத்தில் இருந்து பண வரவு வரும். என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.

துலாம்: ஜென்ம ராசியில் அமர்ந்து இருந்த கேது அக்டோபர் முதல் 12ஆம் வீட்டிற்கு செல்லப்போகிறார். களத்திர ஸ்தானத்தில் இருந்த ராகு ஆறாம் வீட்டிற்கு செல்லப்போகிறார். இந்த ராகு கேது பெயர்ச்சியால் அற்புதங்கள் நிகழப்போகிறது. ஆறாம் வீட்டில் ராகு மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது. செல்வ வளம் வரப்போகிறது மகாலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்கப் போகிறது. சங்கடங்களை மட்டுமே சந்தித்து வந்த நீங்கள் இனி சந்தோஷங்களை அனுபவிக்கப் போகிறீர்கள். மன குழப்பங்கள் நீங்கி நிம்மதி கிடைக்கும். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜா யோகமாக அமைகிறது இந்த ராகு கேது பெயர்ச்சி. கொடுத்த கடன் திரும்ப கிடைக்கும்.

Rahu ketu peyarchi palan 2023: Rahu Ketu Thulam and Viruchigam rasi palan and Parikaram

குடும்ப ஒற்றுமை: களத்திர ராகு குடும்பத்தில் கஷ்டத்தை கொடுத்தது. கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவு இருந்தது. கடந்த காலங்களில் வெளியில் சொல்ல முடியாத அளவிற்கு நெருக்கடிகளை சந்தித்து வந்த உங்களுக்கு துன்பங்களும் பிரச்சினைகளும் முடிவுக்கு வரும். வீட்டில் நிம்மதியில்லாமல் இருந்த உங்களுக்கு நெருக்கடிகள் நீங்கும். தடைகள் நீங்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புத்திர பாக்கியம் கிடைக்கும்.

அதிர்ஷ்டம் தேடி வரும்: கேது 12ஆம் வீட்டிற்கு வரப்போவதால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும் வேதனைகள் மறையும். வெளிநாட்டு யோகமும் தேடி வரப்போகிறது. வெளிநாடு வேலையை விட்டு விட்டு வந்தவர்களுக்கு மீண்டும் அழைப்புகள் வரும். கடுமையான உழைப்பு வெற்றியை கொடுக்கும். அதிர்ஷ்டம் தேடி வரும்.

பதவி தேடி வரும்: பெண்களுக்கு இனி நல்ல காரியங்கள் நிறைய நடைபெறும். பட்டம் பதவி புகழ் தேடி வரும். கணவன் மனைவி உறவில் இருந்த விரிசல் நீங்கும். கசப்புகள் நீங்கி ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வீர்கள். பயணங்களின் போது எச்சரிக்கை தேவை யாரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். அக்கம் பக்கத்தினரிடம் எந்த கருத்து வேறுபாடும் வைத்துக்கொள்ளாதீர்கள். மாணவர்களுக்கு நல்ல நேரம் வந்து விட்டது. பிடித்த பள்ளி, கல்லூரிகளில் படிக்க இடம் கிடைக்கும். கால்களில் பிரச்சினை வரும் எச்சரிக்கை தேவை. யாரையும் கடுமையாக பேச வேண்டாம்.

பரிகாரம்: வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். நீங்கள் செய்யப்போகும் முதலீடுகள் லாபமாக திரும்ப வரும். வேலை செய்பவர்களுக்கு அலுவலகத்தில் உயர் பதவிகள் தேடி வரும். தெய்வ வழிபாடு செய்வதற்கான நேரம் வந்து விட்டது. வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விநாயகர் மந்திரத்தை சொல்லுங்கள் நல்ல வேலை கிடைக்கும். சஷ்டி விரதம் இருங்கள் முருகன் அருளினால் சத்ரு தொல்லைகள் நீங்கும். கடன் பிரச்சினைகள் நீங்கும்.

விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி நாதனாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்கள் சாமர்த்தியசாலிகள். திறமையாக எதையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவீர்கள். எதிரியாக இருந்தாலும் உங்களுக்கு கெடுதல் செய்பவர்களுக்கும் நல்லதே நினைத்து நல்லதே செய்வீர்கள். ராகு உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சியாகப்போகிறார். கேது உங்க ராசிக்கு 11ஆம் வீடான லாப ஸ்தானத்திற்கு வரப்போகிறார். உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு வருவதால் மிகப்பெரிய திருப்புமுனையை தரப்போகிறார். குருவைப் போல ராகு செயல்படுவார். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு மன நிம்மதியை தரக்கூடியதாக இருக்கிறது.

Rahu ketu peyarchi palan 2023: Rahu Ketu Thulam and Viruchigam rasi palan and Parikaram

ஜாக்பாட்: உங்களை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் இனி உங்களை ஆச்சரியமாக பார்க்கும் அளவிற்கு உயர்வு கிடைக்கும். இந்த ராகு பெயர்ச்சியால் உங்களுக்கு புத்திர பாக்கியம், திருமண யோகம் கைகூடி வரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிரிகள் தொந்தரவு தீரும், கடன் சுமைகள் குறையும். உங்களை விட்டு விலகி போனவர்கள் எல்லாம் இனி உங்களை தேடி வருவார்கள். விலகிப்போன சொந்தங்கள் எல்லாம் ஒன்றாக தேடி வருவார்கள். கணவன் மனைவி இடையை இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்த வாழ்க்கை துணை உங்களைப்பற்றி தெரிந்து கொண்டு தேடி வருவார்கள். மன சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும்.

பண பிரச்சினை நீங்கும்: பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் தேடி வரும். பூர்வீக சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பெற்றோர்களுக்கு சின்னதாக மருத்துவ செலவுகள் வரும். உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில் பட்டம் பதவிகள் தேடி வரும். தெய்வ வழிபாடு உங்களுக்கு நல்ல பலன்களை தரப்போகிறது. குல தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதி சந்தோஷத்தைக் கொடுக்கப் போகிறது. புதன்கிழமைகளில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி வழிபடுங்கள். பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+