For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரத சப்தமி விரதம் 2020: நோய் நொடிகளின்றி நீண்ட ஆயுளோடு வாழ சூரியனை வழிபடுங்க

ரத சப்தமி நாளில் விரதம் இருந்தால் நீடித்த ஆயுளும் குறையாத ஆரோக்கியமும் கிடைக்கும். ரத சப்தமியன்று தொடங்கும் தொழில்கள் மிகவும் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த நாளில் செய்யப்படும் தான தர்மங்களுக்கும் ப

Google Oneindia Tamil News

சென்னை: சூரிய தேவன் உலகிற்கு எல்லாம் ஒளி கொடுக்கும் கடவுள். சூரிய வழிபாடு காலம் காலமாக கொண்டாடப்படுகிறது. தை முதல் நாளில் தமிழர் திருநாளாக சூரியனை வழிபடுகின்றனர். தை மாதம் வளர்பிறையில் ஏழாம் நாள் சப்தமி திதி ரத சப்தமியாக கொண்டாடுகிறோம். இதனை சூரிய ஜெயந்தியாகவும் கொண்டாடுகின்றனர். இந்த ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதி ரத சப்தமி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து சூரியனை வழிபட்டால் நீண்ட ஆயுளும் குறைவற்ற செல்வமும்

தை மாத வளர்பிறை சப்தமி அன்றுதான் ரத சப்தமி கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் நாளை மறுநாள் சனிக்கிழமை ரத சப்தமி திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து நீராடவேண்டும். தங்கம், வெள்ளி, தாமிரம் முதலான ஏதாவது ஒரு பாத்திரத்தில் எண்ணெய் வார்த்து தீபம் ஏற்றவேண்டும். சூரிய வடிவத்தை வரைந்து பூஜை செய்யவேண்டும்.

அதன் பிறகு அந்தத் தீபத்தை நீர் நிலைகளில் நீராட வேண்டும். இதன் பிறகு பித்ருக்களுக்கு உண்டான தர்ப்பணம் செய்ய வேண்டும். ரத சப்தமி நாளில் முறைப்படி தர்ப்பணம் செய்வதன் மூலம் ஏழு ஜன்ம பாவங்களும் விலகும்.

Ratha Sapthami 2020: Importance and Significance

ரத சப்தமி அன்று அதிகாலையிலேயே சப்தமி திதி இருந்தால், அன்றே விரதம் இருந்து பூஜை செய்யவேண்டும். ஒரு வேளை சப்தமி திதி இரண்டு நாள் தொடர்ந்து அதிகாலையில் இருக்கும்படி வந்தால், முதல் நாளிலேயே விரதத் தையும் பூஜையையும் செய்யவேண்டும்.

ஏழு எருக்க இலைகள், ஏழு இலந்தை இலைகள் எடுத்து ஒன்று சேர்த்து அவற்றுடன் அட்சதை, மஞ்சள்தூள் சேர்த்துத் தலையில் வைத்தபடி பெண்கள் குளிப்பது மரபு. ஆண்களாக இருந்தால் மேலே சொன்னவாறு எருக்கு, இலந்தை இலைகளுடன் அட்சதை மட்டும் சேர்த்து உச்சந்தலையில் வைத்து நீராடு வது மரபு. பெற்றோர் இல்லாதவர்கள் மேற் சொன்ன இலைகளுடன் பச்சரிசியும் எள்ளும் சேர்த்து வைத்து நீராடவேண்டும்.

Ratha Sapthami 2020: Importance and Significance

குளித்தபின்பு, சூரிய நமஸ்காரம் செய்து வழிபடவேண்டும். ஆதித்ய ஹிருதயம், விஷ்ணு சஹஸ்ரநாமம், சூரிய சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். காயத்ரி மந்திரம் ஜெபிக்கலாம். திருமாலின் அம்சமே சூரியன் என்பதால் ரத சப்தமி நாளில் விஷ்ணு ஆலயங்களில் சூரிய பிரபையில் எம்பிரான் எழுந்தருள்வார். அவரை அவசியம் தரிசிக்க வேண்டும்.

English summary
This year's Ratha Saptami Festival will be celebrated on the 1st of February at the Sri Venkateswara Swamy Temple, Tirumala. On that day, the Urchavar Malayappa Swamy alone, accompanied by the saints, Sridevi and Bhudevi Thayar, rose in a special decoration of seven vehicles and traveled on all four Mada Veethi to offer their devotion.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X