சின்ன நகர்வு கூட.. ஓகோன்னு மாற்றத்தை தரும்! மிதுன ராசிக்கு சனி வக்ர பெயர்ச்சி எப்படி இருக்கும்? பலன்
சென்னை: 2024 ஜூன் மாதம் நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம். அடுத்த 1 வருடம் உங்கள் வாழ்க்கையில் சனி என்னவெல்லாம் செய்ய போகிறார் என்று பார்க்கலாம்.
ஜோதிடத்தில் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு பெரிய பலம் சனிக்கு உண்டு. அது சிறு நகர்வு. சனியின் சிறு நகர்வும் கூட ஒருவரின் வாழ்க்கையை புரட்டி போடும் குணம் கொண்டது. சனி ஒருவரை தூக்கி வளர்க்கவும் செய்யவும்.. தூக்கி மிதிக்கவும் செய்யவும்.

சனி எந்த திசையில் செல்கிறார் .. உங்கள் ராசிக்கு எத்தனையாவது இடத்தில் இருக்கிறார் என்பதை வைத்து உங்களின் வாழ்க்கை மேலே போக போகிறதா கீழே வீழ போகிறதா என்று பார்த்து விடலாம். சனியின் மூலம் வாழ்ந்தவர்களும் இருக்கிறார்கள், வீழ்ந்தவர்களுக்கு இருக்கிறார்கள். அப்படி பட்ட சனிதான் தற்போது வக்ர பெயர்ச்சி அடைகிறார் .
அது என்ன வக்ர பெயர்ச்சி: அவ்வப்போது முன்பும், பின்னும் நகர்ந்து பலன்களை மாற்றுவார். சில சமயங்களில் ராசி ரீதியாக மாறாமல் நட்சத்திர ரீதியாக முன்னும் பின்னும் நகருவார். இப்படி சனி பின்னோக்கி நகர்வதை வக்ர பெயர்ச்சி என்று கூறுவார்கள். தற்போது கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி இருக்கிறார்.
இவர்தான் இந்த முறை வக்கிர பெயர்ச்சி அடைய போகிறார். கும்பத்தில் சனி பின்னோக்கி சதய நட்சத்திற்கு செல்கிறார். அதனால் இது வக்கிர பெயர்ச்சி. ஜூன் 30-ம் தேதி முதல் வக்ர பெயர்ச்சி அடைகிறார் சனி பகவான். அதன்பின் அக்டோபர் 5ம் தேதி மேலும் பின்நோக்கி சென்று அவிட்டம் நட்சத்திரத்தை அடைகிறார்.
பலன்கள்; 2024 ஜூன் மாதம் நடக்க உள்ள சனி வக்ர பெயர்ச்சி மிதுன ராசிக்கு என்ன மாதிரியான பலன்களை கொடுக்கும் என்று இங்கே பார்க்கலாம்.
மிதுன ராசிக்கு இந்த வக்ர பெயர்ச்சி மூலம் நிறைய பொருளாதார பலன்கள் கிடைக்கும். முழுக்க முழுக்க இது பொருளாதாரத்திற்கான பெயர்ச்சி என்று கூட உங்களுக்கு சொல்லலாம். பண ரீதியாக உங்களுக்கு மிகப்பெரிய அளவில் பலன்கள் கிடைக்கும். இத்தனை காலம் மாதம் 1-ம் தேதி சம்பளம் வாங்கி 5ம் தேதி அதை காலி செய்துவிட்டு 6ம் தேதி கடனை வாங்கி இருப்பீர்கள். இனி அப்படி இல்லை.
அதே சமயம் உங்களின் திருமண வாழ்க்கையில் பிரச்சனை வரலாம். திருமண ரீதியாக உங்களுக்கு பல குழப்பங்கள் ஏற்படலாம். சில சமயங்களில் பெண் பார்ப்பதில், மாப்பிள்ளை பார்ப்பதில் கூட சிக்கல் ஏற்படலாம்.
முக்கியமாக போக்குவரத்தில் கவனமாக இருங்கள்.நிலம் வாங்குவது, கடன் வாங்குவதில் கவனம் வேண்டும்., குழந்தைகளுக்கு வரன் தேர்வு செய்வதில் ஜாக்கிரதையாக இருங்கள்.
நீங்கள் பலகாலமாக எதிர்பார்த்த முதலீடு கைகூடும். வேலை நிமித்தமாக இடம் மாற்றம் வாய்ப்பு உண்டு. வேலை மாற்றமும் வாய்ப்பு உண்டு. வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டு. நினைத்த காரியங்களை கஷ்டப்பட்டு செய்தால் நிறைவேற்றுவீர்கள்.
பரிகாரம்; மதுரை மீனாட்சி கோவில்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் செல்வது நல்ல பரிகாரமாக அமையும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications