
செப்டம்பர் மாத ராசி பலன் 2022.. கஜகேசரி யோகம் போல கர்ஜனை செய்யப்போகும் ராசிக்காரர் யார் தெரியுமா?
சென்னை: செப்டம்பர் மாதம் நவ கிரகங்களின் சஞ்சாரத்தினால் சிம்ம ராசிக்காரர்களின் பலம் அதிகரிக்கப்போகிறது. நினைத்த காரியம் நிறைவேறப்போகிறது. சூரியன் சிம்மம், கன்னி ராசிகளில் பயணம் செய்வார். புதன் உச்சம் பெற்று கன்னி ராசியில் பயணம் செய்வார். மாத பிற்பகுதியில் சூரியனும் உச்சம் பெற்ற புதனும் இணைந்து புதாத்திய யோகத்தை தரப்போகின்றனர். செப்டம்பர் மாதத்தில் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கப் போகிறது என்று விரிவாகப் பார்க்கலாம்.
செப்டம்பர் மாதம் கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் ரிஷப ராசியில் செவ்வாய், சூரியன் 17ஆம் தேதி கன்னி ராசிக்கு சென்று உச்சம் பெற்ற புதனோடு இணைகிறார். சுக்கிரன் சிம்ம ராசியில் பயணம் செய்கிறார். குரு மீன ராசியிலும் சனி பகவான் மகர ராசியிலும் வக்ரமடைந்து பயணம் செய்கின்றனர்.
கன்னி ராசியில் உச்சம் பெற்றிருக்கும் புதன் செப்டம்பர் 10 ஆம் தேதி வக்ரமடைகிறார். மாத இறுதியில் சுக்கிரன் கன்னி ராசியில் புதன், சூரியனுடன் இணைகிறார். இது புதுவித யோகத்தை தரப்போகிறது. நவகிரகங்களினால் சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
விநாயகர் சதுர்த்தி..பிள்ளையார் சுழி போட்டு செயல் எதுவும் தொடங்கு..காரியத்தடைகள் நீங்கும்!

சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு செப்டம்பம் மாதத்தில் ராசியில் ஆட்சி பெற்ற சூரியன் கூடவே சுக்கிரன் பயணம் செய்கிறார். இரண்டாம் வீட்டில் ஆட்சி உச்சம் பெற்ற புதன், மூன்றாம் வீட்டில் கேது, 6ல் சனி வக்ரம், எட்டாம் வீட்டில் குரு ஒன்பதாம் வீட்டில் ராகு, செவ்வாய் பகவான் பத்தாம் வீட்டில் என கிரகங்கள் பயணம் செய்கின்றன. உங்களுக்கு இந்த மாதம் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். நல்ல காரியங்கள் அதிகம் நடைபெறப்போகிறது. ஆட்சி பெற்ற கிரகங்களினால் உங்களின் பலம் அதிகரிக்கும். தன்னம்பிக்கை, தைரியம் கைகூடும்.

பதவி தேடி வரும்
தொழில் வேலை விசயமாக எடுக்கும் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும், அதிகார பதவி கிடைக்கும். புரமோசன் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். குடும்பத்தில் வாதங்கள் செய்வதை தவிர்ப்பது நல்லது. விட்டுக்கொடுத்து செல்லுங்கள் எந்த பிரச்சினைகளையும் சமாளிப்பீர்கள். சிங்கத்தின் பலம் அதிகரிக்கும்.
வருமானம் உயரும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகமாக வரும் பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள் உங்களின் எதிர்கால செலவுகளுக்குப் பயன்படும்.

குடும்பத்தில் ஒற்றுமை
குடும்பத்தில் ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் அன்பைப் பொழிவீர்கள். அக்கறை செலுத்துவீர்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண சுப காரியங்களை இந்த எடுக்க வேண்டாம். தள்ளிப்போடுங்கள். காதலிப்பவர்களுக்கும் சின்னச் சின்ன பிரச்சினைகள் வந்து போகும். தசாபுத்தி நன்றாக இருந்தால் பிரச்சினையில்லை. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். பெண்களுக்கு சாதகமான மாதம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

உணவு விசயத்தில் கவனம்
மாணவர்களுக்கு இது நல்ல மாதம் உயர்கல்வி யோகம் கை கூடி வந்துள்ளதால் நினைத்த கல்லூரியில் இடம் கிடைக்கும். படித்து முடித்து நல்ல வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு கை மேல் பலன் கிடைக்கும். பெற்றோர்கள் உறவினர்களின் உதவி கிடைக்கும். காரமான, புளிப்பான உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஜீரண கோளாறுகள் ஏற்படலாம். சரியான நேரத்திற்கு சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. ஆவணி ஞாயிறன்று விரதம் இருந்து சூரியனை வணங்கினால் கண் பிரச்சினைகள் சரியாகும்.