செப்டம்பர் மாத ராசிபலன் 2019: அஷ்டம குரு, வக்ர நிவர்த்தி சனி மேஷத்திற்கு எப்படி
செப்டம்பர் மாதம் கிரகங்கள் சிம்ம ராசியிலும் கன்னி ராசியிலும் கூட்டணி சேருகின்றன. குருவும் சனியும் வக்ர நிவர்த்தி அடைந்துள்ளனர். இந்த கிரகங்களின் சஞ்சாரத்தினால் மேஷம் ராசிக்கு பலன்கள் எப்படி என்று பார்
Recommended Video
சென்னை: செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம மாதத்திலும் கன்னி மாதத்திலும் சஞ்சரிக்கிறார். மாத முற்பகுதியில் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் கன்னியில் கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. இந்த மாதம் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். அஷ்டமத்து குரு, வக்ர நிவர்த்தி அடைந்த சனியால் மேஷம் ராசிக்கு செப்டம்பரில் நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் ஏற்படும்.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் செப்டம்பர் 10,11 தேதிகளில் சுக்கிரன், புதன் கிரகங்கள் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 25ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு நகர்கிறார். சனிபகவானும் நேர்கதியில் சஞ்சரிப்பது சாதகமான அம்சம்.
மாத முற்பகுதியில் சிம்மம் ராசியில் இணைந்திருந்த 4 கிரகங்கள் மாத இறுதியில் கன்னி ராசியில் சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணியால் மேஷம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடக்கும் பணவருமானம், கல்வி, வேலை வாய்ப்பு எப்படி என்று பார்க்கலாம்.

கிரகங்களின் கூட்டணி
மேஷம் ராசிக்கு ஐந்தாம் வீடான சிம்ம ராசியில் சூரியன் சுக்கிரன் புதன், செவ்வாய் பலமாக கூட்டணி அமைத்திருக்கின்றனர். மாத முற்பகுதியில் சுப பலன்கள் அதிகம். சூரியன் 5ல் இருப்பதால் அரசு துறை சார்ந்தவர்கள். கல்வி சார்ந்த தொழில் உடையவர்கள். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு அற்புதங்கள் நிகழும். கோள்கள் அற்புதமாக இருப்பது நன்மை தரும் விசயம். ஐந்தாம் வீட்டில் சூரியன் செவ்வாய் இணைவது ராஜயோகம். ஒன்று மற்றும் 5க்கு உடையவன் ஐந்தாம் வீட்டில் இணைவதால் மனதில் உள்ள ஆசைகள் நிறைவேறும். தொழில் நன்மைகள் நடக்கும். வேலையில் மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது.

சுக்கிரன் புதன் என்ன பாதிப்பு
செப்டம்பர் 10 ஆம் தேதி கன்னி வீட்டில் சுக்கிரன் நீசம் அடைகிறார் அதே போல 11 ஆம் தேதி புதன் ஆட்சி உச்சம் பெற்று அமரப்போகிறார். ஆறாம் வீட்டில் புதன் ஆட்சி பெற்று அமர்வதால் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். ஆறில் சுக்கிரன் புதனோடு கூட்டணி சேருவதால் குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சினைகளை ஏற்படுத்துவார். வாக்குவாதங்களை தவிர்க்கவும்.

ஆறாம் வீட்டில் கிரகங்கள்
இந்த மாதத்தில் 17ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்கு நகர்கிறார். கன்னி ராசியில் சூரியன், புதன் சுக்கிரன் செவ்வாய் 25 ஆம் தேதி கன்னியில் கூட்டணி சேருகிறார். குடும்பம் வருமானம், கல்வி, மாத முற்பகுதியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய கிரகங்கள் மாத பிற்பகுதியில் எதிர்ப்புகளையும், தடங்களையும் ஏற்படுத்தும். இழுபறி கால தாமதத்தை ஏற்படுத்தும்.

மேஷம் நிதானம் தேவை
ராசிக்கு ஆறாம் வீட்டில் கிரகங்கள் இணைய இணைய எதிர்ப்புகள் வலுக்கும். போட்டி பொறாமை, எதிர்ப்புகளை ஏற்படுத்தும். 18ஆம் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி முன்னோக்கி நகர்கிறார். சனியும் கேதுவும் இணைவினால் சில குழப்பங்கள் வரும். சனி வக்ர நிவர்த்தி அஷ்டமத்தில் குரு கிரகங்கள் இருப்பதால் செப்டம்பரில் மேஷ ராசிக்காரர்கள் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications