ராகு கிரகஸ்த சூரிய கிரகணம் - எங்கு தெரியும் என்ன பரிகாரம் செய்யலாம்
சந்திர,சூரிய கிரகணங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிகழக்கூடிய வானியல் நிகழ்வுகள் என்றாலும் சிலருக்கு கிரகணம் என்றாலே பயம் வந்து விடுகிறது. வரும் 10ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.
சென்னை: மங்களகரமான பிலவ வருடம் வைகாசி 27ஆம் தேதி ஜூன் 10ஆம் தேதி வியாழக்கிழமை பகல் 1.42 மணி முதல் மாலை 06.41 மணிவரை மிருகஷீரிடம் நட்சத்திரத்தில் நிகழும் ராகு கிரகஸ்த பகுதி சூரிய கிரகணம் நிகழப்போகிறது. இந்த ஆண்டில் முதல் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை.
சூரிய கிரகணம் ஏற்படும் அமாவாசை நாளில், சூரியன்-சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது, பொதுவான ஜோதிட கணிப்பாக இருக்கிறது.
ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும். ஒருமுறை முழு சூரிய கிரகணம் உண்டான அதே இடத்திலேயே, மீண்டும் தோன்ற ஏறத்தாழ 375 ஆண்டுகள் ஆகும்.

கிரகணங்கள் எப்படி
முழு சூரிய கிரகணகங்கள், இரண்டு அல்லது மூன்றாண்டுகளுக்கு ஒருமுறையே நிகழ்கின்றன. இது அறிவியல் பூர்வமானது. அதேபோல், சந்திர கிரகணம் நிகழ்ந்து சரியாக இரு வாரங்களில் சூரிய கிரகணம் நிகழும்.

கிரகணத்தால் என்ன பாதிப்பு
கடந்த 15 நாட்களுக்கு முன்பு சந்திர கிரகணம் நிகழ்ந்தது வரும் 10ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழப்போகிறது. அதாவது, சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.

ராகு உடன் இணைந்துள்ள சூரியன்
ராகு மறைக்கும்போது ராகு கிரஹஸ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது கிரஹஸ்தம் என்றும் சாஸ்த்திரங்கள் கூறுகின்றன. வரும் 10ஆம் தேதி நிகழும் சூரிய கிரகணம் ராகு உடன் சூரியன் இணைந்திருக்கும் போது நிகழ்கிறது.

கிரகண நேரத்தில் என்ன செய்யலாம்
சூரியனின் ஒளி வீச்சு பூமி மீது பதியாமல் தடைபடுகிற பொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன. இதில், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது. சூரிய கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது. சமயல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது.

கர்ப்பிணிகளுக்கு பிரச்சினையா
சூரிய கிரகணமோ, சந்திர கிரகணமோ எதுவாக இருந்தாலும் அப்போது வெளிப்படும் கதிர்வீச்சுகள் கர்ப்பிணிகளை பாதித்துவிடக் கூடாது என்றே அந்த நேரங்களில் வெளியே நடமாடக் கூடாது என்று சொல்கிறார்கள். முக்கியமாக கர்ப்பிணி பெண்கள் கிரகண நேரத்தில் சாப்பிடக்கூடாது, தண்ணீர் குடிக்கக்கூடாது, வீட்டில் சமையல் செய்யக்கூடாது, நகம் வெட்டக்கூடாது என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கிரகணத்தால் பாதிப்பு
கிரகணம் தொடங்குவதற்கு சில மணி நேரத்துக்கு முன்பாகவே நாம் சாப்பிட்டு விட வேண்டும். அதற்குப் பிறகு கிரகணம் முடியும்வரை எதுவும் சாப்பிடக்கூடாது. முதியவர்கள், குழந்தைகள், கருவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இந்த விஷயத்தில் விலக்கு அளித்திருக்கிறார்கள்.

தோஷத்தால் கெடு பலன்கள்
பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள். சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு. கிரகண தோஷத்தால் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. கிரகண காலத்தில் கோவில்களில் நடை அடைக்கப்படுவதுண்டு. இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது என்பதால் கோவில்களில் நடை அடைக்கப்படாது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications