ஸ்ரீரங்கம் ஆதிபிரம்மோற்சவம் - நம்பெருமாள் தங்கக் கருட வாகன சேவை தரிசனம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடந்து வரும் ஆதிபிரம்மோற்சவம் என்ற பங்குனி உற்சவத்தின் 4ம் நாளான்று மாலை, உற்சவர் நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி கோயில் கருட மண்டபத்தில் வீற்றிருந்தார்.

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கநாதர் கோவிலில் ஆதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நான்காம் நாளன்று கருடவாகனத்தில் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் எழுந்தருளி அருள்பாலித்தார். பக்தர்கள் பங்கேற்பின்றி ஸ்ரீரங்கத்தில் ஆதிபிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது.

Srirangam Sri Ranganathaswami Temple Adhi Brahmotsavam Sri Namperumal on Garudavahana sevai

ஸ்ரீரங்கம் அருள்மிகு ஸ்ரீரங்கநாத ஸ்வாமி திருக்கோவில் ஆதி பிரம்மா திருநாள் கொடி ஏற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பொதுமுடக்கத்தால் ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றாடம் நடைபெறக்கூடிய பூஜைகள் மட்டும் நடைபெற்றது. கொரோனா பொதுமுடக்கத்தால் கோயிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதியில்லை. குறைந்த எண்ணிக்கையிலான பட்டர்கள் மட்டுமே சேவை செய்து வருகின்றனர்.

Srirangam Sri Ranganathaswami Temple Adhi Brahmotsavam Sri Namperumal on Garudavahana sevai

ஆகம விதிப்படி பெரிய கோயில்களில் வழக்கமாக நடைபெற்று வரும் திருவிழாக்களை நடத்தாமல் விட்டு விடக்கூடாது என்பதால், பங்குனித் தேர் திருவிழாவான ஆதி பிரம்மோற்சவ விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொரோனா லாக்டவுன் அமலில் உள்ளதால் பொதுமக்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றாலும் வழக்கமாக நடைபெற்று வரும் தினசரி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

Srirangam Sri Ranganathaswami Temple Adhi Brahmotsavam Sri Namperumal on Garudavahana sevai

தினசரியும் பல்வேறு வாகனங்களில் நம்பெருமாள் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். நான்காம் நாளன்று பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தளினார். ஆதி பிரம்மோற்சவத்தின் நிறைவாக வரும் 22ஆம் தேதி ஸ்நம்பெருமாள் தேரில் எழுந்தருளாமல், கருட வாகனத்தில் கோயிலுக்குள் எழுந்தருளி, இரவு 9 மணிக்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

Srirangam Sri Ranganathaswami Temple Adhi Brahmotsavam Sri Namperumal on Garudavahana sevai

ஸ்ரீரங்கத்தில் கொடியேற்றம் முதல் நடைபெறும் அனைத்து விழாக்களையும் ஆலய இணையதளத்தில் நேரலையாக பக்தர்கள், பொதுமக்கள் கண்டுகளிக்கலாம் என ஸ்ரீரங்கம் கோயில் இணை ஆணையர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

Srirangam Sri Ranganathaswami Temple Adhi Brahmotsavam Sri Namperumal on Garudavahana sevai

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+