• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தை கிருத்திகை விரதம்: செவ்வாய் தோஷ திருமணத்தடை நீங்கும், மூடிய கருப்பை திறக்கும்

|

மதுரை: மனிதர்களாக பிறந்த அனைவருக்குமே திருமணம் நடைபெற வேண்டும், கடவுள் அருளால் பிள்ளைச் செல்வம் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஏதாவது ஒரு தடையோ, தோஷமோ இருந்தால் இந்த இரண்டுமே அமையாது. தை கிருத்திகை தினத்தில் விரதமிருந்து முருகனை வணங்கினால் நிச்சயம் கைமேல் பலன் கிடைக்கும். திருமண தடை நீங்கும், பிள்ளை இல்லாத தம்பதியனருக்கு மழலைச் செல்வம் கிடைக்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாக உள்ளது.

சஷ்டி திதி முருகனுக்கு உகந்தது. சஷ்டி விரதம் சக்தி வாய்ந்தது. அதுபோல 27 நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரம் முருகப் பெருமானுக்கு உகந்த நட்சத்திரம். மாதம்தோறும் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானது. சரவணப் பொய்கையில் தாமரை மலரில் மிதத்து வந்த முருகனை ஆறு கார்த்திகைப்பெண்கள் எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றதாக கூறுகிறது ஸ்கந்த புராணம். கார்த்திகைப் பெண்களை சிறப்பிக்கும் வண்ணம் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது.

உலகம் முழுவதும் பல்வேறு தலங்களில் முருகப் பெருமான் குடிகொண்டிருந்தாலும் தமிழகத்தில் உள்ள அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், சுவாமிமலை, பழநி, திருத்தணி, பழமுதிர்சோலை என முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கள், உற்சவங்களில் தைக்கிருத்திகையும் விழாவும் ஒன்று.

முருகனுக்கு உகந்த கிருத்திகை

முருகனுக்கு உகந்த கிருத்திகை

ஆண்டுக்கு மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயன துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். உத்தராயன புண்ணிய காலம் இன்னும் சில தினங்களில் தொடங்க உள்ளது. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும், நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக தை கிருத்திகை, தை பூசம் நாளை கொண்டாடுகிறார்கள்.

செவ்வாய்க்கு அதிபதி முருகன்

செவ்வாய்க்கு அதிபதி முருகன்

ஜோதிட சாஸ்திரத்தின்படி செவ்வாய்க்கு அதிபதி முருகப்பெருமான் என்பதால் தை கிருத்திகை நாளில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்குச் சென்று தரிசித்து செவ்வாய் பகவானின் அருளைப் பெறலாம். செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத்தடை, செவ்வாய் தோஷ தடை, கர்ம புத்திர தோஷம், மண், மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதரர்களால் சங்கடங்கள் குரு திசை, செவ்வாய் திசையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த தைக் கிருத்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் கவலைகளும் பிரச்னைகள் நீங்குவதோடு வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும்.

கந்தர் சஷ்டி கவசம்

கந்தர் சஷ்டி கவசம்

கார்த்திகை விரதத்தினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றி நாரதர் தேவரிஷி என்ற பெரும் பேற்றினைப் பெற்றார்.

திரிசங்கு, பகீரதன், அரிசந்திரன் ஆகியோர் பேரரசர்கள் ஆனார்கள். விரத தினத்தன்று கந்த சஷ்டி, கந்தபுராணம், சண்முக கவசம், கந்தர் கலிவெண்பா உள்ளிட்ட முருகனைப் பற்றியவற்றை பராயணம் செய்யலாம். இவ்விரத முறையினை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகள் பின்பற்றுவதால் வாழ்க்கையின் பெரும் வெற்றிகளைப் பெறலாம்.

குணமுள்ள குழந்தைகள்

குணமுள்ள குழந்தைகள்

வேலனை வணங்குவதே நமது முதல் வேலை என்று சொல்வது போல், வேல் முருகனை வணங்கினால் அனைத்து வகையான தோஷங்களும் நீங்கும். வேண்டியவை யாவும் அருளும் குணம் கொண்டவர் குமரன். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள பிள்ளைகளை அருளுவார் முருகப்பெருமான்.

குழந்தை செல்வம்

குழந்தை செல்வம்

திருமணம் ஆகியும் நீண்ட நாட்கள் பிள்ளைச் செல்வம் இல்லாத பெண்மணிகள் தமிழ் மாதத்தில் பத்தாவது மாதமான தை கிருத்திகையில் தமிழ்கடவுள் முருகனை மனமார நினைத்து விரதம் இருந்துவழிபட்டால், அவர்களின் மூடிய கருப்பை திறக்கும் கட்டாயம் குழந்தையும் பிறக்கும் என்பதைத்தான் 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று கூறினார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இந்தப் பழமொழி, தை பொங்கலோடும் தொடர்புடையது!

உப்பில்லா உணவு

உப்பில்லா உணவு

தை கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும். முருக பக்தர்கள், அன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடி, முருகனை வழிபடுவார்கள். பழநியில், பக்தர்கள் சண்முகா நதியில் நீராடி முருகனை வணங்கி, தங்களின் விரதத்தை பூர்த்தி செய்வார்கள். விரதம் இருப்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விரதமுறைகளே இதற்கும் பொருந்தும் என்றாலும் உப்பில்லா உணவை எடுத்துக் கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானது. இது உயர்வாகவும் கருதப்படுகிறது. தை கிருத்திகை தினத்தன்று ஆலயத்துக்கு சென்று முருகனை வழிபட்டால் வேண்டியவை எல்லாம் கிடைக்கும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

lok-sabha-home

 
 
 
English summary
Krithigai is the naksathira of Lord Muruga. According to Skanda Purana, Lord Muruga took birth from third eye of Lord Shiva as six flames.Kaarthigai Pengal took care of the six babies from Lotus flowers in Saravana poigai. Thai Krithigai is celebrated on 16th January2019. Generally on all Krithigai special abhishekam, alankaram and pujas are done to Lord Muruga in temples.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more