தை பொங்கல் ராசி பலன் 2024: தை பிறந்தால் யாருக்கு வழி பிறகும்.. பிரச்சினை தீர செய்ய வேண்டிய தானம்!
சென்னை: தை முதல் நாளில் சூரியன் மகர ராசியில் பயணத்தை தொடங்குகிறார். தமிழ்நாட்டில் தை பொங்கல் கொண்டாடும் அதே நாளில் வட இந்தியாவில் மகரசங்கராந்தி பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்கள் என்னென்ன தானம் செய்யலாம். தை பிறந்த உடன் யாருக்கெல்லாம் அஷ்டலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பதவியில் உயர்வு, புரமோசன் கூடிய சம்பள உயர்வு தேடி வரும். வருமானம் அதிகரிக்கவும் கடன் பிரச்சினை தீரவும் மஞ்சள் நிற இனிப்பு பண்டம் தயார் செய்து மாலை நேரத்தில் பசுவுக்குக் கொடுத்து வர கடன் பிரச்சினைகள் நீங்கும். மகாலட்சுமியின் அருளால் பொருளாதார நிலை உயரும்.

ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களே..சுக்கிரனின் அருள் உங்களுக்கு தை மாதம் முதல் பரிபூரணமாக கிடைக்கப்போகிறது. உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் கிரகங்கள் கூடி உள்ளதால் நீங்கள் ஆலய தரிசனத்திற்காக ஆன்மீக பயணம் செல்வீர்கள். கடன் பிரச்சினைகள் நீங்கி மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். பசுவிற்கு மாலை வேளையில் பச்சரிசி வெல்லம் கலந்து கொடுத்து வர பொருளாதார வளம் அதிகரிக்கும்.
மிதுனம்: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் சூரியன் உள்ளிட்ட கிரகங்கள் பயணம் செய்கின்றன. செய்யும் செயல்களில் கவனமும் நிதானமும் தேவைப்படும். நினைத்த காரியம் நிறைவேற நீங்கள் தை பொங்கல் நாள் முதல் தினசரி சூரிய தரிசனம் செய்து வணங்கவும். ஏழைகளுக்கு ஞாயிறுக்கிழமைகளில் தயிர் சாதம் தானமாக கொடுக்க நன்மைகள் நடைபெறும்.
கடகம்: சந்திர பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே.. உங்களுக்கு இந்த தை திருநாள் முதல் எதிர்பாராத மாற்றங்கள் நடைபெறப்போகிறது. உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் சூரியன், செவ்வாய், புதன் இணைந்து பயணம் செய்யப்போவதால் திடீர் மாற்றங்கள் ஏற்படும். மூன்று கிரகங்களின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. அச்சு வெல்லம் வாங்கி ஏழைகளுக்கு தானமாக கொடுத்து வர பொருளாதார நிலை உயரும் நன்மைகள் நடைபெறும்.
சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் கிரகங்கள் பயணம் செய்வதால் நோய்கள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்கள் ராசி அதிபதி சூரியன் ஆறாம் வீட்டில் பயணம் செய்தாலும் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது. கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கப்போகிறது. தீராத பிரச்சினைகளை தீர்த்து வைக்கப்போகிறார் சூரிய பகவான். அச்சுவெல்லம் எள் சேர்த்து செய்த இனிப்புகளை ஏழைகளுக்கு தானமாக கொடுக்க நன்மைகள் நடைபெறும்.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானம் வலிமையடைந்துள்ளது. எத்தனையோ சிக்கல்களை கடந்து வந்திருப்பீர்கள். மன குழப்பம் நீங்கும் உங்கள் வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். துளசிக்கு தினசரி தண்ணீர் ஊற்றி அகல் விளக்கு ஏற்றி வழிபட கடன், நோய் பிரச்சினை நீங்கும். உங்களுக்கு ஏற்பட்ட சங்கடங்கள் நீங்க தடைகள் நீங்கி காரிய வெற்றி உண்டாக ஏழைகளுக்கு சனிக்கிழமைகளில் உளுந்து வடை தானம் செய்யவும்.
துலாம்: சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சூரியன், சுக்கிரன், சனி கூடியிருக்கும் போது பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. சொத்து சேர்க்கை ஏற்படும். சூரியனும் சுக்கிரனும் இணைந்து உங்களுக்கு ஆடம்பர பொருள் சேர்க்கையை ஏற்படுத்துவார்கள். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். கோதுமை மாவில் நெய், சர்க்கரை சேர்த்து செய்த உணவுப்பொருளை தானமாக கொடுக்க கடன் பிரச்சினைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். திடீர் யோகமும் பண வரவும் கிடைக்கும்.
விருச்சிகம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானத்தில் சூரிய பகவான் செவ்வாய், புதன் உடன் பயணம் செய்யப்போகிறார். புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். சொத்து பிரச்சினைகள் முடிவுக்கு வரும். இனிப்பு உளுந்து வடை தானமாக கொடுக்க எவ்வளவு பெரிய பிரச்சினை இருந்தாலும் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக நல்ல வேலைக்காக எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான மகர ராசியில் சூரியன் பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களுக்கு முன்பு கடனாக கொடுத்த பணம் எல்லாம் திரும்ப வரும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் நீங்கும். நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வயதானவர்களுக்கு நோயாளிகளுக்கு ஞாயிறுக்கிழமைகளில் மருந்து மாத்திரை முடிந்த அளவு வாங்கி கொடுக்க உங்களுடைய தீராத கடன்கள் தீரும்.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்குள் சூரியன் பயணம் செய்கிறார். எத்தனையோ சிக்கல்கள் வந்தாலும் இந்த பொங்கல் முதல் உங்களுடைய பிரச்சினைகள் தீருவதற்கான வழி பிறக்கப்போகிறது. மன கலக்கம் நீங்கப்போகிறது. மாத பிற்பகுதியில் புதன், செவ்வாய் இணையப்போகின்றனர். நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்க எள், வெல்லம் சேர்த்த எள் உருண்டை செய்து தானமாய் கொடுத்து வர கடன் பிரச்சினை நீங்கும் நிம்மதி அதிகரிக்கும்.
கும்பம்: உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12வது வீட்டில் சூரியன் பயணம் செய்கிறார். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். உங்களுக்கு தை மாதம் முதல் பண வரவு வருவதற்கான வழி பிறக்கப்போகிறது. உங்களின் நீண்ட நாள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போகிறது. உங்கள் கனவுகள் நனவாகப்போகிறது. பசும்பால் வாங்கி ஏழைகளுக்கு தானமாக கொடுத்து வர நன்மைகள் நடைபெறும். வியாழக்கிழமை லட்டு வாங்கி தானமாக கொடுக்க கடன் பிரச்சினைகள் நீங்கும். செல்வ வளம் அதிகரிக்கும்.
மீனம்: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியனுடன் கிரகங்கள் கூட்டணி சேரப்போவதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பிரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரப்போகிறது. எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அதை எளிதில் சமாளிக்கக் கூடிய மன தைரியத்தை சூரிய பகவான் உங்களுக்கு கொடுக்கப்போகிறார். ஞாயிறுக்கிழமை காலையில் சூரிய நமஸ்காரம் செய்து கோதுமையால் செய்த சப்பாத்தியை பசுவிற்கு தானமாக கொடுக்க பண வருமானம் அதிகரிக்கும். உங்களின் கடன் பிரச்சினைகள் நீங்கும்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications