நாளை முதல் நதிகளுக்கெல்லாம் அந்த மூன்று நாட்களாமே...?

Posted By: Staff
Subscribe to Oneindia Tamil

சென்னை:இறைவனின் படைப்பில் சிறந்தது மானிடப்படைப்பாகும். மனிதர்களில் பெண்கள் மட்டுமே இயற்கை உடற்க்கூறு மாற்றம் அதிகம் கொண்டவர்கள்.ஒரு உயிரை உருவாக்கும் பெரும்பங்கு பெண்களையே சாரும் அதனால்தான் பெண்களை தெய்வத்திற்கு சமமானவர்கள் என்று சாஸ்திரம் போற்றுகின்றது. நதிகளையும் தெய்வத்தோடு இணைத்து வணங்குவது நமது மரபு.

the first three days of the tamil calendar aadi is observed as

ரஜஸ்வலா

ரஜஸ்வலா என்பது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தீட்டினை குறிப்பதாகும். நதிகளை பெண்களாக போற்றுவது நமது நாட்டின் பாரம்பரியம். எனவே ஆடி மாத ஒன்றாம் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்கு நதிகளுக்கெல்லாம் ரஜஸ்வலா எனும் தீட்டு என்கிறது சாஸ்திரம்.

ஆடிமாதப் பிறப்பான 17-07-2017முதல் 19-07-2017 முடிய மூன்று நாட்கள் காவேரி, நர்மதா, யமுனா, முதலிய அனைத்து புண்ய நதிகளுக்கும் அதன் கிளை நதிகளுக்கும் ரஜஸ்வலா ஏற்படுவதால் அசுத்தி. ஆகவே இந்த மூன்று நாட்களிலும் அனைத்து புண்ய நதிகளிலும் கிளை நதிகளிலும் ஸ்னானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.

ஜோதிடமும் மாதவிலக்கும்

ஒருபெண்ணுக்கு சந்தோஷமான தருனமான பூப்படையும் தன்மையை ஏற்படுத்த்வது சந்திரன் செவ்வாய் சேர்க்கை என்கிறது பாரம்பரிய ஜோதிடம்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன் உடம்பை குறிக்கும் கிரகமாகும். செவ்வாய் ரத்தத்தை குறிக்கும் கிரகமாகும். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் கோசார செவ்வாய் வயது வரும் பருமடைந்தவுடன் லக்னத்தையும் சந்திரனயும் ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளும்போது பருவமடைகிறாள் என மருந்துவ ஜோதிடம் கூறுகிறது.

ஒவ்வொரு மாத சுழற்சியில் ஜாதகத்தில் ஜனன செவ்வாயை கோசார சந்திரன் தொடுவதற்க்கு 5 மணி நேரத்திலிருந்தும் சந்திரன் செவ்வாயை கடந்து 5 மணி நேரம் வரையும் மாதவிடாய் இரத்தப்போக்கு ஏற்படும் என்கிறது மருத்துவ ஜோதிடம். அதாவது ஒரு ராசியில் சந்திரன் இரண்டரை நாள் பயனம் செய்வார். அவர் ராசியை அடைவதற்க்கு முன்பும் கடந்த பின்புமாக மொத்தம் மூன்று நாட்கள் மாதவிடாய் ஏற்படுவதின் காரணம் செவ்வாய் சந்திர தொடர்பே என்கிறது ஜோதிடம்.

ஒரு பெண்விரும்பாத தருணமான அதிக உதிரப்போக்குடன் கூடிய பெரும்பாடு எனப்படும் மாதவிடாய் கோளாரினை ஏற்படுத்துவதும் சந்திரன் செவ்வாய் சேர்க்கைதாங்க.

காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகத்தை ரத்தத்தின் தொடர்புள்ள பாவமாகவும் சந்திரனையும் ரத்தத்தின் அதிபதியாகவும் கூறப்படுகினறது.

தற்போது கோசாரத்தில் சந்திரன் மேஷத்தில் இருக்கிறது. மேஷத்தில் இருந்து சந்திரன் ஏழாம் பார்வையாக துலாராசியை பார்க்கிறது.

காலபுருஷனுக்கு நான்காம் வீடான கடகம் சந்திரனின் ஆட்சி வீடாகும். அனைத்து நீர்நிலைகளையும் குறிக்கும் கிரகம் சந்திரனாகும். சந்திரனின் ஆட்சி வீடு கடகம் ஆகும். கோசார செவ்வாய் தற்போது சூரியனோடு சேர்ந்து கடகத்தில் நிற்கிறது.

Villagers Blocked Water Lorries In krishnagiri-Oneindia Tamil

மேலும் தனது நான்காம் பார்வையால் துலாராசியை பார்க்கிறது. ஆக சந்திரனின் பார்வையும் செவ்வாயின் பார்வையும் இனைந்து பிறப்புறுப்பை குறிக்கும் இடம் மற்றும் காலபுருஷனுக்கு ஏழாம் வீடான துலாராசியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The first three days of Kataka masa (Aadi) is called
Please Wait while comments are loading...