உங்கள் குழந்தை சூரியனை போல தேஜஸுடன் இருக்க உபநயனம் செய்யுங்க!

Posted By:
Subscribe to Oneindia Tamil

-அஸ்ட்ரோ சுந்தரராஜன்

சென்னை: உபநயனம் என்பது இவ்விரண்டாவது பிறப்பின் வாயிலாக அமைகின்றது. 'உப' என்றால் பிரம்மத்திற்கு அருகில் என்பது பொருள். 'நயனம்' என்றால் குரு சிஷ்யனை அழைத்துச் செல்லுதல் என்பது பொருள்.

பிராமணர்கள் 8 வயதிர்க்குள்ளும், க்ஷத்ரியர்கள் 12 வயதிர்க்குள்ளும், வைஷ்யர்கள்16 வயதிர்க்குள்ளும், காமம் மனதிற்குள் புகுமுன் உபநயன தீக்ஷை பெற வேண்டும் என்பது வழக்கம்.

Upanayanam is one of the traditional saṃskaaras for an individual's entrance to a school in Hinduism.

உபநயனத்தில் குரு சிஷ்யனை ஒரு கல்லின் மேல் காலை ஊன்றி நிற்கச் சொல்லி ஆசீர்வதிப்பதாவது "இக் கல்லைப் போல் வலிமை கொண்ட உடலும், உறுதி படைத்த நெஞ்சம் உடையவனாக நீ இருக்க வேண்டும். உன் விரதங்களுக்கு ஊரு செய்பவர்களை எதிர்த்து போராடி நீ விரட்டி அடிக்க வேண்டும்.

நீ பிராமச்சாரியாகிவிட்டாய்.சந்தியாவந்தனத்தையும், மற்ற கடமைகளையும் தவறாமல் செய்யவேண்டும். அறியாமையினின்று விழித்தெழு" என்பது போல் ஆகும்.

உபநயனம் பண்ண வேண்டிய வயதை பற்றி காஞ்சி மகா பெரியவர் கூறியிருப்பது:

உபநயனம் செய்யவேண்டிய காலம் பிராம்மணனுக்கு கர்ப்பத்தைக் கூட்டி எட்டாவது வயசாகும்;அதாவது பிறந்து ஏழு வயது இரண்டு மாஸம் ஆனவுடன் பண்ண வேண்டும். க்ஷத்ரியர்கள் பண்ணிரண்டு வயது வரை உபநயனம் செய்யலாம்.

யது வம்சத்தில் பிறந்த கிருஷ்ண பரமாத்மாவுக்கு அப்படித்தான் செய்திருக்கிறது. வைச்யர்கள் பதினாறு வயசு வரை உபநயனம் பண்ணலாம்.

பிராம்மணர்களுக்கும்கூட எட்டு வயசு,பதினாறு வயசு (உச்ச வரம்பு) என்று சாஸ்திரங்கள், போனால் போகிறதென்று அவகாசம் கொடுத்திருக்கின்றன. பதினாறு வயசுக்கு அப்புறம் பூணூல் போடாமல் ஒரு பிராம்மணப் பிள்ளையை வைத்திருப்பது மஹத்தான தோஷமாகும்.

உபநயனமும் உத்திராயணமும்:

ஒருவனுக்கு இப்படி வயசுக் காலம் சொல்லியிருப்பதோடு, உபநயன ஸம்ஸ்காரம் என்பதைச் செய்வதற்கே உத்தராயணம்தான் உரிய காலம் என்றும் ஸூரியன் பூமியின் வடக்குப் பாதியில் ஸஞ்சரிக்கிற ஆறுமாஸத்திலேயே உபநயனம் செய்யவேண்டும். உபநயனம் மட்டுமின்றி விவாஹமும்

இந்த ஆறுமாஸத்தில்தான் செய்யலாம். இதிலும் வஸந்த காலம் (சித்திரை, வைகாசி) தான் விவாஹத்துக்கு ரொம்பவும் எடுத்தது. அதே மாதிரி 'மாசிப் பூணூல் பாசி படரும்'என்பதாக மாசி மாதத்தில் பூணூல் போடுவதை விசேஷமானதாகச் சொல்லியிருக்கிறது.

தக்ஷிணாயனத்தில் (ஆடியிலிருந்து மார்கழி முடிய) இவற்றைச் செய்வது செய்வது சாஸ்திர ஸம்மதமல்ல என்று மகா பெரியவர் உபநயனம் செய்யும் காலம் பற்றி கூறியிருக்கிறார்.

வாமன மூர்த்திக்கு சூரிய பகவான் உபநயனம் செய்வித்தல்:

மகா விஷ்ணு பூலோகத்தில் பல அவதாரங்களை எடுத்து தர்மத்தை நிலைநாட்டினார். அதில் வாமன அவதாரமும் ஒன்று. அதிதி காஷ்யபரின் பிள்ளையாக அவதரித்த வாமன மூர்த்திக்கு சூரியபகவானே உபநயனம் (பூணூல் அணிவித்தல்) செய்தார். பகவானே பூணூல் அணிந்து கொண்டதன் மூலம், இச்சடங்கின் சிறப்பினை உணரமுடியும். பூணூல் அணிபவர்களும், அதனைத் தயாரிப்பவர்களும் ஆச்சார அனுஷ்டானங்களில் இருந்து சிறிதும் விலகுதல் கூடாது. ஆவணி அவிட்டத்தன்று பூணூல் அணியும் இளைய தலைமுறையினரும் இதன் முக்கியத்துவத்தை உணர்வது அவசியம்.

காயத்ரி ஜெபம்:

காயத்ரி மந்திரம் சூரியனுடைய ஆற்றலை நோக்கிக் கூறப் படுவதாகும். இம்மந்திரம் சூரியனைத் தலைமைத் தெய்வமா கக் கொண்டது. எனவே சூரியனை வணங்குவது காயத்ரியையே வணங்குவதற்குச் சமமாகும்.

காலையில் கிழக்குமுகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு, வஸ்திரத்தால் இரு கைகளையும் மூடி முகத்திற்கு நேராக வைத்து காயத்ரி மந்திரத்தை ஜபிக்க வேண்டும். மதியம் கிழக்கு முகமாக அமர்ந்து கைகளை மார்பிற்கு நேராக வைத்து ஜபிக்க வேண்டும். மாலையில் மேற்க்கு முகமாக அமர்ந்து நாபிக்குச் சமமாக கைகளை வைத்து ஜபிக்க வேண்டும்.

சம்ஸ்க்காரத்தில் ஸந்த்யாவந்தனம் பிரம்ம யஞத்தின் கீழ் சொல்லப்பட்ட நித்யகர்மாவாகும். (சம்ஸ்க்காரம் எண் 21).

ஸந்த்யாவந்தனம் அதிகாலை மற்றும் அந்தியில் சூரியனில் வசிக்கும் பகவான் ஸ்ரீமன் நாராயணனை குறித்து செய்யும் நித்ய கர்மாவாகும். காயத்ரி தியான முறையும், தண்ணீரால் செய்யபடும் அர்க்யமும் இந்த கர்மாவில் செயல் முறை மையமாக உள்ளன.

வேத மாதா காயத்ரி:

வேதம் தான் சகல தர்மங்களுக்கும் மூலாதாரம். காயத்ரீ என்ற சமஸ்க்ரித சொல்லுக்கு (காயந்தம் + த்ராயத + இதி) "தன்னை துதிப்பவனை காப்பாற்றுவது" என்று பொருள்.

காயத்ரீ மந்திரத்தை பற்றி ரிக் வேத சம்ஹிதையில் (3.62.10) கூறபட்டுள்ளது. காயத்ரீ வேதத்தின் தாய். இது மிகவும் வீர்யமுள்ள மந்த்ரம். அவள் திரிபாத காயத்ரீ (8 எழுத்துக்கள் கொண்ட 3 பகுதிகள்) என்றும் அழைக்க படுகிறாள். தைத்ரிய ஆரண்யகத்தில்(2.10 &2.11) பிரம்ம யஞம், யஞோபவீதம் மற்றும் ஸந்த்யாவந்தனம் பற்றி கூறபட்டுள்ளது. ப்ரணவ மந்த்ரமும், 3 மகா வ்யாஹ்ருதியும் ( பூ:,புவ:,சுவ: ), காயத்ரீ மந்த்ரம் சொல்லும் முன் சொல்ல வேண்டும்.

சந்தியாவந்தனம் எப்படி செய்யவேண்டும்:

சந்தியாவந்தனம் (அ) சந்த்யோபாசனை முறைப்படி குருவிடமோ / சாஸ்த்ரிகளிடமோ உபநயன தின முதல் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில் அதில் ஸ்வரத்துடன் கூடிய வேத மந்த்ரங்கள் அடங்கியுள்ளது. அதன் பிறகு பெரியோர்களிடமோ அல்லது வேறு ஊடகங்கள் மூலமாகவோ கற்று கொள்ளலாம்.

"காணாமல் கோணாமல் கண்டு கொடு" என கூறுவார்கள். அதாவது காலை சந்தியாவந்தனம் சூரியன் உதிக்கும் முன் (காணாமல்) சாவித்ரிதேவியை மதியம் உச்சிப்பொழுதில் (சூரியன் கோணாமல்) காயத்ரி தேவியை தியானிப்பது சாயங்காலத்தில் உட்கார்ந்து கொண்டு நட்சத்திரத்தை பார்க்கும் வரையிலும் சந்தியா தேவியை பூஜையை செய்தல் வேண்டும். பசுகொட்டிலிலும்,நதி கரையிலும், கோவில் அருகிலும் சந்தியாவந்தனம் செய்வது பன்மடங்கு பலனை தர வல்லது. வீட்டிலும் (கொல்லை) சுத்தமான சூரிய ஒளி வரும் இடத்தில் சந்தியாவந்தனம் செய்யலாம். அப்படியும் இடம் இல்லை எனில் வீட்டில் உள்ள கடவுள் சன்னிதானதில் செய்யலாம்.

ஜாதகப்படி யாருக்கு உபநயனம் செய்யும் அமைப்பு இருக்கும்?

ஒருவருக்கு ஆன்மீக உலகத்தில் ப்ரவேசம் செய்ய ஜாதகத்தில் குரு சூரிய சேர்க்கை முக்கியமானதாகும்.
உபநயனம் எனும் ப்ரமோபதேசமும் இறைவனை அடையும் ஆன்மீக பயணத்தின் முதல்படி என்பதால் உபநயனம் செய்துக்கொள்ள ஓருவர் ஜாதகத்தில் சூரியன் குரு இணைவு முக்கியமானதாகும்.

1. லக்னம் மற்றும் திரிகோண பாவங்களில் குரு சூரியன் சேர்க்கை பெற்று நிற்பது.

2. லக்னம் மற்றும் திரிகோண பாவங்கள் குரு வீடாக அமைந்து சூரியன் அங்கு நிற்பது அல்லது சூரியன் வீடுகளாகி அங்கு குரு நிற்பது.

3. குருவும் சூரியனும் சுப பரிவர்தனை பெற்று நிற்பது.

4. குருவோ அல்லது சூரியனோ ஆட்சி உச்சம் பெற்றும் இரண்டும் இணைந்து ஒரு திரிகோணத்தை பார்ப்பது.

5. குருவோ சூரியனோ திரிகோணங்களில் நின்று சமசப்தம பார்வை பெறுவது. இவற்றில் ஒன்று ஆட்சி உச்சம் பெற்றால் கூடுதல் பலமாகும்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Upanayanam is typically performed at the age of 7 years, to take the child to the Gurukula.The thread ceremony, also called Brahma Upadesham is to prepare the child to enter school and the schooling phase of life (Brahmacharyam).
Please Wait while comments are loading...