For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கார்த்திகை மாத வாஸ்து நாள்: புது வீடு கட்ட ஆசி வழங்கும் வாஸ்து பகவான்

வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வாஸ்து தினம் 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி

Google Oneindia Tamil News

மதுரை: ஒவ்வொருவருக்கும் தேவையானது நல்ல நிம்மதியும், மன நிறைவான வாழ்க்கையும் தான் எனலாம். அத்தகைய நிறைவை தரும் பூஜை தான் வாஸ்து பூஜை எனலாம். வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி யக்ஞஸ்ரீ கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளுடன் வாஸ்து தினத்தை முன்னிட்டு 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை வாஸ்து சாந்தி ஹோமமும் ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது.

வாஸ்து என்கிற சொல்லுக்கு, வசிக்கும் இடம் என்றும், வஸ்துக்களில் இருந்து வந்தது வாஸ்து என்றும், வாஸ்து வாஸ்தவம் தான் என்றும் சொல்லப்படுகிறது. பூமி, நிலம் என்றும் பொருள் ஆகிறது. அந்தகன் என்கிற அசுரன், சம்காரம் செய்யப்பட்ட காலத்தில், சிவபெருமானின் நெற்றியிலிருந்து விழுந்த வியர்வைத் துளி பூமியில் விழுந்து மீண்டும் ஓர் அசுரனாக மாறி பூமியை விழுங்க முற்பட்டபோது, சிவபெருமான், வீரபத்திரரை அனுப்பி அந்த அசுரனை கீழே தள்ளச்செய்து, அவன் மீது பிரம்மன் முதலான ஐம்பத்து மூன்று தேவதைகளை வசிக்கும்படி பணித்தார். அவனது கோரப்பசி தீர்வதற்காக, உலக வடிவமான பூசணிக்காயை உணவாகக்கொடுத்தார். அந்த அரக்கன்தான் வாஸ்து புருஷன்.

Vastu Day: Santhi Homam for Vasthu Bhagavan

வாஸ்து புருஷனையும் அவரது அதிதேவதையான பிரம்ம தேவரையும், சக்திகளையும் பூஜித்து ஏனைய தெய்வங்களையும் வழிபட்டு திருப்தி செய்வதே வாஸ்து பூஜையாகும். வாஸ்து நாளில் வாஸ்து புருஷனுக்கு நடைபெறும் வாஸ்து ஹோமத்தில் பங்கு பெற்று வளம் பெறலாம். வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்கள் மற்றும் வாஸ்து நேரங்களை அறிந்து, நம் வீட்டைக் காக்கும் தெய்வமான வாஸ்து பகவானை வாஸ்து நாளில் பூஜித்துவிட்டு வீடு முதலான புதிய கட்டடங்களைக் கட்டத் துவங்க வேண்டும். அப்படி செய்யும் பொழுது மனைகளில் உள்ள குறைபாடுகள், தோஷங்களை நிவர்த்தி செய்யும் வகையில் வாஸ்து பகவானின் திருவருளை பெறலாம்.

வாஸ்து பகவான் நித்திரை விடும் நாட்களில், அவர் விழித்திருக்கும் 90 நிமிடங்களில் பூஜை செய்யலாம். இந்த நேரப்பொழுதில் அவர் ஒவ்வொரு 18 நிமிடங்களில் முறையே பல் துலக்குதல், ஸ்நானம் செய்தல், பூஜை செய்தல், உணவு உண்ணுதல், வெற்றிலை போடுதல் ஆகிய காரியங்களில் ஈடுபடுவார். இதில், அவர் உணவு உண்ணும் நேரம் மற்றும் வெற்றிலை போடும் நேரத்தில் பூஜிப்பது வெகு விசேஷம்.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் - 27ஆம் தேதி கஜவாகனம்திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் கார்த்திகை பிரம்மோற்சவம் - 27ஆம் தேதி கஜவாகனம்

தன்வந்திரி பீடத்தில் வாஸ்து பகவான் 6 அடி விட்டத்தில் ஈசான்ய மூலையில், பஞ்ச பூதங்கள், அஷ்டதிக்பாலகர்களுடன் தலை பாகத்தில் சிவபெருமான் தீர்த்த கமண்டலத்துடனும், வயிற்று பாகத்தில் பிரம்மாவுடனும், திருவடி விஷ்ணு ரூபமாகவும், ஆகாயத்தை நோக்கிபடுத்த வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் திருக்காட்சி வேறெங்கும் இல்லாத வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

சிரமங்கள் குறையும் வாஸ்து சாஸ்திரங்களைப் பற்றியும் வருங்கால மக்கள் அறிந்து அதன் பிரகாரம் புதிய வீடுகள் அமைத்துக் கொள்ளவும், பழைய வீடுகளை புதுப்பித்துக் கொள்ளவும், காலி மனை, இருப்பிடம், நிலம், தொழிற்சாலை, திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்கள், பள்ளி கல்லூரிகள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்ற இடங்களில் வாஸ்து தோஷங்களினால் ஏற்படும் கஷ்டங்களை போக்கிக் கொள்ளவும், அதனுடைய தாக்கங்களை குறைத்துக் கொள்ளவும் வாஸ்து பகவான் வழிபாடும், வாஸ்து ஹோமமும் வழிவகை செய்யும் என்கிறார் ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள்.

வாடகை வீட்டில் இருக்கும் ஒருவருக்கு சொந்த வீடு அமையவும், உடல் உபாதைகளால் துன்பப்படுபவர்களுக்கு ஆரோக்யத்தில் முன்னேற்றம் ஏற்படவும், கல்வியில் மந்தமாக உள்ள குழந்தைகளுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படவும், நஷ்டத்தில் நடைபெறும் தொழில், வியாபாரம், விவசாயம் போன்ற பல செயல்களில் வளமை பெறவும், பொருளாதாரத்தில் தரம் உயரவும், அதிக கடன் உள்ளவர்களுக்கு கடன்கள் அடைய உபாயம் கிடைக்கவும், இந்த வாஸ்து ஹோமம் வழிவகை செய்யும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

வாழ்க்கையை வளமாக்கி கொள்ள வருகிற 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணி முதல் 12.30 மணி வரை வாஸ்து சாந்தி ஹோமத்திலும், அதனை தொடர்ந்து ஸ்ரீ வாஸ்து பகவானுக்கு நடைபெறும் நவ கலச அபிஷேகத்திலும் ஆராதனைகளிலும் பக்தர்கள் பங்கேற்கலாம். இந்த ஹோமத்தில் நவ தானியங்கள், வெல்லம், நெல்பொரி, சர்க்கரை பொங்கல், பூசனிக்காய், சிகப்பு வஸ்திரம், நெய், தேன், நவ சமித்துக்கள் சேர்க்கப்பட உள்ளது. ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203

English summary
With the blessings of Guruji, Kayilai Gnanaguru Dr. Sri Muralidhara Swamigal will be conducted Vastu Santhi Homam for Vasthu Bhagavan on November 24th 2019.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X